சூரூ

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூரூ ('Churu) (चूरु) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் தார் பாலைவனத்தில் அமைந்த சூரூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் சூரூ चूरु, நாடு ...
Remove ads

வரலாறு

ஜாட் மக்களின் தலைவர் சுகாரு என்பவர் 1620ல் சூரூ நகரத்தை நிறுவினார்.[1] இந்திய விடுதலைக்கு முன்னர் இந்நகரம் பிகானேர் இராச்சியத்தில் 1947 வரை இருந்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, பிகானேர் இராச்சியம், இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகு, இந்நகரம் சூரூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமானது.

பொருளாதாரம்

தார் பாலைவனத்தில் அமைந்த சூரூ நகரத்தின் பொருளாதாரம் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகள் மேய்ச்சல் தொழிலில் உள்ளது. மேலும் ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துகளும், சிறுதானியங்களும் பயிரிடப்படுகிறது. பளிங்குக் கல் பலகைகள் மற்றும் ஓடுகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

புவியியல் மற்றும் தட்பவெப்பம்

சூரூ நகரம் தார் பாலைவனத்தில் உள்ளதால் பாலைவன மணற்புயலால் பாதிக்கப்படுகிறது. இங்கு கோடைக்கால அதிகபட்ச வெப்ப நிலை 55 பாகை செல்சியாகவும், குளிர்கால குறைந்தபட்ச வெப்பநிலை 7.7 பாகை செல்சியாகவும் உள்ளது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், சூரூ, மாதம் ...
Remove ads

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சூரு நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,19,856 ஆகும். அதில் ஆண்கள் 61,611 ஆகவும், பெண்கள் 58,245 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 74.23% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 945 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16,712 ஆக உள்ளனர்.[3]இந்நகரத்தில் இந்துக்கள் 56.24%, இசுலாமியர்கள் 43.33% மற்ற சமயத்தினர் 0.43% உள்ளனர்.

Remove ads

போக்குவரத்து

புதுதில்லி - பிகானேர் செல்லும் இருப்புப் பாதையில் சூரூ தொடருந்து நிலையம் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 65, சூரூ நகரத்தை நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads