சூர்யகுமார் யாதவ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூர்யகுமார் அசோக் யாதவ் (Suryakumar Ashok Yadav) (பிறப்பு: செப்டம்பர் 14, 1990) [2] இந்திய துடுப்பாட்ட வீரர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ஐ.பி.எல் வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை மட்டையாட்டக்காரர் மற்றும் அவ்வப்போது வலது கை நடுத்தர வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார். சூரியகுமார் யாதவ் 14 மார்ச் 2021 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்திய துடுப்பாட்ட அணிக்காக தனது இருபது-20 பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[3] இவர் 18 சூலை 2021 அன்று இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்காக ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் அறிமுகமானார்.[4] இவரது துடுப்பாட்ட எண் 77.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

ஒரு நடுத்தர குடும்பத்தில், யாதவ் மகாராஷ்டிராவின் தெருக்களில் விளையாடும்போது தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். துடுப்பாட்ட விளையாட்டின் மீதான இவரது ஆர்வத்தைக் கண்ட இவரது தந்தை, இவரை செம்பூரில் உள்ள பார்க் காலனியில் உள்ள துடுப்பாட்ட முகாமில் சேர்த்தார்.

12 வயதில், இவரது பயிற்சியாளர் எச்.எஸ். காமத் யாதவ் விளையாட்டின் மீது கொண்ட அர்ப்பணிப்பைக் கண்டார். இவரைச் சிறந்த வீரராக வெற்றிபெற ஊக்கப்படுத்தினார். பின்னர் இவர் எல்ஃப் வெங்சர்கர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு இவருக்கு திலீப் வெங்சர்கர் வழிகாட்டினார். பின்னர் யாதவ் மும்பையின் அனைத்து வயதுக் குழு போட்டிகளிலும் விளையாடினார்.[5]

யாதவ், 2017-ல் தேவிசா செட்டியை திருமணம் செய்து கொண்டார்.[6] யாதவ் தேவிசா செட்டியினை ஒரு கல்லூரி விழாவில் சந்தித்தார். செட்டி நடன பயிற்சியாளர் ஆவார்.[7]

Remove ads

தொழில்

சூரியகுமார் யாதவ் 2010-11 ரஞ்சி ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராகத் தனது முதல் தர விளையாட்டில் அறிமுகமானார். மும்பைக்காக 73 ஓட்டங்களைக் குவித்த இவர் மும்பையின் முதல் பாதியாட்டத்தில் 50க்கு மேல் ஓட்டங்கள் பெற்ற வீரர் என்ற பெருமையினைப் பெற்றார். இதிலிருந்து தொடர்ந்து இந்த அணியின் வெற்றியில் முக்கியப் பங்குவகித்து வருகின்றார்.[8] அக்டோபர் 2018இல், 2018–19 தியோதர் கோப்பைக்கான இந்தியா சி அணியிலும்[9] அக்டோபர் 2019இல், 2019–20 தியோதர் கோப்பைக்கான இந்தியா சி அணியிலும் இடம் பெற்றார்.[10] . 2020-21-ல் செய்யது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் மும்பை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார்.[11]

Remove ads

இந்தியன் பிரீமியர் லீக்

இவரது திறமையின் காரணமாக 2012 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸிடமிருந்து ஐபிஎல் ஒப்பந்தத்தைப் பெற்றார். மூத்த வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா மற்றும் கீரோன் பொல்லார்ட் ஆகியோர் அணியிலிருந்ததால் இவருக்கு இந்த சீசன் முழுவதும் களத்தில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இளம் வீரர்களின் திறமைகளை மையமாகக் கொண்டு அணியை மீண்டும் உருவாக்க முயன்றததால், இவரை 2014 ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிறுவனத்தினர் வாங்கினார். ஈடன் கார்டனில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஐபிஎல் 2015இல் ஒரு போட்டியில் 20 பந்து 46ஐ ஓட்டங்களை ஐந்து சிக்ஸர்களுடன் அணிக்கு வெற்றி தேடித் தந்தபோது தலைப்புச் செய்தியானார்.

அணியின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற இவர் ஐபிஎல் 7வது பதிப்பில் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார்.

2018 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியினரால் ரூபாய் 3.2 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் மிகவும் மதிப்புமிக்க வீரர் ஆவார்.[12]

மும்பை இந்தியன் அணிக்காச் சிறப்பாக விளையாடிய பிறகு, இவர் 2022 சீசன் மெகா ஏலத்திற்கு முன் 8 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். இருப்பினும், இவரது இடது முன்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் ஐபிஎல் 2022 போட்டிகளிலிருந்து வெளியேறினார்.[13]

மும்பை இந்தியன் அணி ஐபிஎல் 2023-ல் யாதவை 8 கோடி இந்திய ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டது. பன்னாட்டு துடுப்பாட்ட வரிசையில் முதல் நிலை இருபது20 துடுப்பாட்டக் காரராகத் தரவரிசைப்படுத்தப்பட்டார்.[14] 2022ஆம் ஆண்டின் ஆண்கள் கிரிக்கெட் வீரர் விருது வழங்கப்பட்டது. இவர் இபிலீ 2023-ன் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக இருந்தார். பொல்லார்டின் ஓய்விற்குப் பின்னர், இபிலீ 2023ல் மும்பை இந்தியன் அணியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.[15]

மே 12, 2023 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் இபிலீ நூறு ஓட்டங்களை எடுத்தார்.[16]

பன்னாட்டு ஒரு நாள் போட்டி

பிப்ரவரி 2021இல், இங்கிலாந்திற்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் இருபது-20 பன்னாட்டு (இ20) அணியில் இவரது பெயர் இடம்பெற்றது.[17] இது இந்திய கிரிக்கெட் அணிக்கு இவரது முதல் பன்னாட்டு அழைப்பு ஆகும்.[18] இவர் மார்ச் 20, 2021 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்காக தனது இ20 போட்டியில் அறிமுகமானார்.1 பின்னர் மார்ச் 18 அன்று தொடரின் நான்காவது ஆட்டத்தில் விளையாட முதல் வாய்ப்பைப் பெற்றார், மேலும் பன்னாட்டு துடுப்பாட்டப் போட்டியில் இவர் எதிர்கொண்ட முதல் பந்தி 6 ஓட்டங்கள் எடுத்தார். இ20 பன்னாட்டுப் போட்டியில் அறிமுக பந்தில் 6 ஓட்டங்கள் எடுத்த முதல் இந்தியரானார். மேலும் அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையினையும் பெற்றார்.[19][20] அடுத்த நாள், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் பன்னாட்டு (ஒருநாள்) அணியில் இவர் இடம் பெற்றார்.[3] மூன்றாவது இடத்தில் விளையாடும் இவரது விளையாட்டு செயல்திறன் இவரை "எக்ஸ் காரணி" வீரராக விவரிக்க வழிவகுத்தது.[21]

ஜூன் 2021இல், இலங்கைக்கு எதிரான தொடருக்காக இந்தியாவின் ஒருநாள் பன்னாட்டு மற்றும் இருபது-20 பன்னாட்டு (இ20) அணிகளில் இவர் சேர்க்கப்பட்டார்.[4] இலங்கைக்கு எதிராக இந்தியாவுக்காக 2021 ஜூலை 18 அன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.[4] ஜூலை 21, 2021 அன்று, யாதவ் இலங்கைக்கு எதிராக தனது முதல் ஒருநாள் அரைசதம் அடித்தார்.[22] இந்தியா இத்தொடரினை 3-2 என்ற வெற்றி அடிப்படையில் கைப்பற்றிய போது சூரியக்குமார் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.[23]

சூலை 2021-ல், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணிக்கு மாற்று வீரராக யாதவ் அழைக்கப்பட்டார்.[24] செப்டம்பர் 2021-ல், யாதவ் 2021 பன்னாட்டு 2021 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ண இந்திய அணியில் இடம்பிடித்தார்.[25] நவம்பரில், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் யாதவ் சேர்க்கப்பட்டார்.[26]

சூன் 2022-ல், அயர்லாந்துக்கு எதிரான இருபது 20 தொடருக்கான இந்திய அணியில் இவர் இடம் பெற்றார்.[27] சூலை 2022-ல், இங்கிலாந்தின் நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக யாதவ் தனது முதல் இருபது20 ஆட்ட நூறு ஓட்டங்களை (117) 55 பந்துகளில் பெற்றார்.[28] இருபது-20 போட்டியில் சதம் அடித்த 5வது இந்திய வீரர் இவர். 4வது அல்லது அதற்கும் குறைவாக வரிசையில் துடுப்பெடுத்தாடி சாதனை படைத்த 2வது வீரர் ஆவார்.[29]

அக்டோபர் 2022-ல், தென்னாப்பிரிக்காக்கு எதிராக 573 பந்துகளில் 1000 ஓட்டங்களை எட்டியதன் மூலம், இ20யில் 1000 ஓட்டங்களை கடந்த வேகமான துடுப்பாட்டகாரர் ஆனார்.[30]

30 அக்டோபர் 2022 அன்று, யாதவ் பன்னாட்டு துடுப்பாட்ட இருபது20 போட்டி துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தார்.[31][32]

2022 ஐசிசி ஆண்கள் இருபது20 உலகக்கிண்ணம்

27 அக்டோபர் 2022 அன்று, யாதவ், இருபது20 உலகக் கோப்பையில் இந்திய துடுப்பாட்டக்காரர்களில் நான்காவது அதிவேக அரைசதத்தையும், இருபது20 உலகக் கோப்பையில் தனது முதல் 50 ஓட்டங்களை,[33] சிட்னி துடுப்பாட்ட மைதானத்தில் நெதர்லாந்துக்கு எதிராக 25 பந்துகளில் எட்டினார்.[34]

Remove ads

சாதனை

6 நவம்பர் 2022 அன்று, ஒரு நாட்காட்டி ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களை பன்னாட்டு இருபது20 போட்டியில் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை சூரியகுமார் யாதவ் பெற்றார்.[35]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads