கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders சுருக்கமாக KKR எனவும் அழைக்கப்படுகிறது) என்பது இந்திய முதன்மைக் குழுப் போட்டிகளில் கொல்கத்தா நகரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில்முறைத் துடுப்பாட்ட அணியாகும். இதன் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மெஹ்தா ஆகியோர் உள்ளனர். இதன் உள்ளக அரங்கமாக ஈடன் கார்டன்ஸ் உள்ளது.[2]
இந்த அணி 2011 இல் முதல் முறையாக ஐபிஎல் தகுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது. 2012 இல் சென்னை சூப்பர் கிங்ஸை இறுதிப் போட்டியில் தோற்கடித்து ஐபிஎல் வாகையாளர் ஆனது. 2014 இல் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து மீண்டும் வாகையாளர் ஆனது.[3]
கொல்கத்தா அணிக்காக அதிக ஓட்டங்களை எடுத்தவராக கவுதம் கம்பீரும்[4] அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவராக சுனில் நரைனும் உள்ளனர்.[5] இதன் அலுவல்முறை நிறங்களாக ஊதாவும் பொன்னிறமும் உள்ளன.
Remove ads
வரலாறு

2007ஆம் ஆண்டு இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள் என்ற இருபது20 போட்டித் தொடரை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் உருவாக்கியது. ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் இத்தொடரில் இந்தியாவின் 8 நகரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அணிகள் பங்குபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த 8 அணிகளுக்கான ஏலம் 20 பிப்ரவரி 2008இல் நடைபெற்றது. அதில் கொல்கத்தா அணியை பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து நடிகை ஜூகி சாவ்லாவும் அவரது கணவர் ஜெய் மெஹ்தாவும் 75.09 மில்லியன் டாலர்கள் என்ற விலைக்கு ஏலத்தில் எடுத்தனர். இது அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 2.98 பில்லியனுக்கு இணையானதாகும்.[6] இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவருமான சௌரவ் கங்குலி கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரராக அறிவிக்கப்பட்டார். 1980களில் புகழ்பெற்ற நைட் ரைடர்ஸ் என்ற அமெரிக்கத் தொடரின் பெயரைத் தழுவி இந்த அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்று பெயரிடப்பட்டடது.[7]
சூன் 2015 இல், அணியின் உரிமையாளர் குழு கரீபியன் பிரீமியர் லீக்கின் டிரினிடாட் மற்றும் டொபாகோ ரெட் ஸ்டீலில் ஒரு பங்குகளை வாங்கியது, [ [8][9] மேலும் 2016 இல் அதற்கு டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் என மறுபெயரிடப்பட்டது. திசம்பர் 2020 இல், அணி வரவிருக்கும் அமெரிக்க டி20 லீக் மேஜர் லீக் கிரிக்கெட்டிலும் முதலீடு செய்தது.[10]
ஐபிஎல் செயல்திறன்
2008
ஐபிஎல்லின் முதல் பருவத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெக்கான் சார்ஜர்சு அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்று நல்ல தொடக்கத்தைத் தந்தனர். தொடக்க ஆட்டக்காரர் ப்ரெண்டன் மெக்குலம் முதல் போட்டியில் 158 ஓட்டங்கள் எடுத்தார். ப இ20 போட்டியில் ஒரு மட்டையாளரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஓட்டமாகப் பதிவுசெய்யப்பட்டது.[11] பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக கிறிஸ் கெயில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 175 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையினை முறியடித்தார்.
Remove ads
அடையாள உடை
இந்த அணியின் சின்னமானது ஒரு கருப்பான பின்னணியில் ஒளிவீசும் தங்கநிற போர்வீரர் தலைக்கவசத்துடன் அணியின் பெயரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என தங்க நிறத்தில் எழுதப்பட்டு இருந்தது. கோர்போ, லோர்போ, ஜீட்போ ரே (நாம் முயற்சிப்போம், அதற்காக போட்டியிடுவோம், வெற்றி பெறுவோம்) என்ற அணியின் முக்கிய கருவானது விஷால்-ஷேகர் இரட்டையர்களால் உருவாக்கப்பட்டது.[12] நைட் ரைடர் ஆல்பமானது உஷா உதுப் மற்றும் பப்பை லஹ்ரி உள்ளிட்ட பல்வேறு பாடகர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் மூலமாகவும் உருவாக்கப்பட்டது.[13] இந்த அணியின் முழக்கமாக ஆல் த கிங்'ஸ் மென் என இருந்தது.[12] இந்த அணியின் அதிகாரப்பூர்வ உடையின் நிறம் கருப்பு மற்றும் பொன்நிறம் ஆகும். கருப்பு நிறம் மா காளியின் வீரத்தையும், பொன்நிறம் வெற்றியின் ஆன்ம வடிவத்தையும் குறிக்கிறது.[13] பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ராவால் வீரர்களுக்கான உடை உருவாக்கப்பட்டது.[12]
Remove ads
உள்ளக அரங்கம்
இதன் உள்ளக அரங்கம் ஈடன் கார்டன்ஸ் ஆகும்.அரங்கத்தின் இரு முனைகளும் ஹை கோர்ட் எண்ட் மற்றும் கிளப் ஹவுஸ் எண்ட் என்று அழைக்கப்படுகின்றன. வங்காளத் துடுப்பாட்ட்ச் சங்கத்திற்குச் சொந்தமான இது, இந்தியாவின் மிகப்பெரிய துடுப்பாட்ட அரஙகமாக இருந்தது, இதில் 90,000க்கும் அதிகமான இருக்கை வசதிகளைக் கொண்டிருந்தது.[14] 2011 ஆம் ஆண்டில், 2011 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்காக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை நிர்ணயித்த தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரங்கம் புதுப்பிக்கப்பட்டதால்அதன் இருக்கை அளவானது 68,000 ஆகக் குறைந்தது.[15]
பருவங்கள்
Remove ads
புள்ளிவிவரங்கள்
ஒட்டுமொத்த நிலை
மூலம்= ESPNCricinfo
Remove ads
நிர்வாகம்
- உரிமையாளர்கள் - ஷாருக்கான், ஜூகி சாவ்லா & ஜெய் மெக்தா (ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிட்டடு.)
- CEO — ஜாய் பட்டாசார்யா[16]
Remove ads
குறிப்புகள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads