செகராசசேகரன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செகராசசேகரன் என்ற பெயர் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் மாறிமாறி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்களில் ஒன்று. இவ்வாறு அரியணைப் பெயர்கள் இருந்தது பற்றிய தகவல், யாழ்ப்பாண வரலாறு கூறும் பழைய நூல்களான கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்றவற்றில் காணப்படவில்லை. ஆனாலும், இந்த் நூல்களிலும், பிற்காலத்தில் போத்துக்கீசர் எழுதிவைத்த தகல்வல்களையும் ஆராய்ந்த வரலாற்றாய்வாளர்கள், இந்த அரியணைப் பெயர்கள் பற்றி எடுத்துக்கூறியுள்ளார்கள்.
செகராசசேகரன் என்ற அரியணைப்பெயர் முதலாவது ஆரியச் சக்கரவர்த்தியுடன் ஆரம்பித்ததாக யாழ்ப்பாணச் சரித்திரம் என்னும் நூலின் ஆசிரியரான முதலியார் செ. இராசநாயகம் அவர்கள் கருதுகிறார்கள்.
செகராசசேகரன் என்ற அரியணைப்பெயர் தாங்கியிருந்த மன்னர்களின் பெயர்கள் பின்வருமாறு:
- கூழங்கை ஆரியச்சக்கரவர்த்தி அல்லது காலிங்க ஆரியச்சக்கரவர்த்தி (1210–1246)
- குலோத்துங்க சிங்கையாரியன் (1256–1279)
- வரோதய சிங்கையாரியன் (1302–1325)
- குணபூஷண சிங்கையாரியன் (1348–1371)
- ஜயவீர சிங்கையாரியன் (1394–1417)
- கனகசூரிய சிங்கையாரியன் (1440–1450 மற்றும் 1467–1478)
- சங்கிலி (1519–1561)
- பெரியபிள்ளை (1570–1582)
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads