செக்கச்சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

செக்கச்சிவந்த வானம்
Remove ads

செக்கச்சிவந்த வானம் (Chekka Chivantha Vaanam) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் காற்று வெளியிடை படத்திற்குப் பிறகு இயக்குநர் மணிரத்னம் தமிழில் இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் சிம்பு, அர்விந்த் சுவாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, அதிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான்னால் இயற்றப்பட்ட இசை மற்றும் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு ஆகியவற்றை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 27, 2018 அன்று வெளியானது.[1][2] இது கொரிய மொழியில் வெளியான New World திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.[3]

விரைவான உண்மைகள் செக்கச்சிவந்த வானம், இயக்கம் ...
Remove ads

கதைக்களம்

பிரகாஷ் ராஜ் ஒரு தாதா. குற்றத் தொழில்களைத் தனது அடியாட்கள் படையைக் கொண்டு செய்து முடிப்பவர். அவரைக் கொலை செய்ய யாரோ முயற்சிக்கிறார்கள். பிரகாஷ் ராஜின் மகன்களாக வரும் அரவிந்த் சாமி, அருண் விஜய், சிம்பு ஆகியோர் நடித்துள்ளனர். கதைப்படி, அரவிந்த்சாமி அப்பாவின் வலதுகரமாக இருக்கிறார். அருண் விஜய் துபாயில் ஒரு வணிகராக இருக்கிறார். சிம்பு செர்பியாவில் ஆயுதக் கடத்தல் செய்கிறார். பிரகாஷ் ராஜ் மாரடைப்பில் இறக்க அவரின் இடத்தை அரவிந்த்சாமி பிடிக்கிறார். இதன் காரணமாக கோபமடைந்த அருண்விஜய் மற்றும் சிம்பு ஆகியோர் அரவிந்த்சாமியை ஆட்டம் காண வைக்க முயற்சிக்கிறார்கள். அப்பாவின் இடத்தை அரவிந்த்சாமி தக்க வைத்துக் கொண்டாரா? இழந்தாரா? என்பதே மீதிக் கதையாகும்.[4][5]

Remove ads

நடிப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads