செஞ்சி கோதண்டராமர் கோவில்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில் செஞ்சியில் அமைந்துள்ள பழைமையான கோதண்டராமர் திருக்கோயில். இங்கு புனர்நிர்மாணப்பணிகள் நடைபெறுகின்றன. கி.பி.1714ல் தேசிங்கு ராஜா ஆட்சி சமயம் ஆற்காட்டு நவாப் படையெடுத்த போது சிதைக்கப்பட்ட திருக்கோயில்.[2]

விரைவான உண்மைகள் செஞ்சி கோதண்டராமர் திருக்கோவில், பெயர் ...
Remove ads

பழைமையான கிணறு

இத்திருக்கோயிலில் கருவறையின் பின்புறம் கருங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட கிணறு இருந்திருப்பது 2012 ஆம் ஆண்டு தெரிய வந்துள்ளது.[3]

தீர்த்தவாரி படித்துறை

சீரமைப்புப் பணிகளின் போது 200 ஆண்டுகளுக்கும் மேல் மண்ணில் மறைந்திருந்த தீர்த்தவாரி படித்துறை வெளிப்பட்டது.[4]

சிலைகள்

இத்திருக்கோயிலின் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ கிருஷ்ணவேணி தாயார், ஸ்ரீ கோதண்டராமர் விக்கிரகங்கள் முன்பு செஞ்சியை ஆண்ட நவாப் படைகளால் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.[3]

சர்ச்சை

கோதண்டராமர் கோயில் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்று சில கிறித்துவ அமைப்புகள் கூறியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டு கோயில் வழிபாடு தடுக்கப்பட்டு, பின்னர், இந்து முன்னணி அமைப்பினராலும் மக்களாலும் பிரச்சனை முன்னெடுக்கப்பட்டு கோயில் சாவி வட்டாட்சியரால் இந்து முன்னணியிடம் வழங்கப்பட்டது.[5][2]கோயிலை யாருக்கும் விற்க முடியாது எனும் சட்டப்பிரிவு எடுத்துக்காட்டப்படுகின்றது.[6]

அமைவிடம்

சங்கராபரணி ஆற்றங்கரையில் திண்டிவனத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் செஞ்சி அமைந்துள்ளது.[1]

புனர்நிர்மாணப்பணிகள்

அறக்கட்டளை மூலம் நடைபெற்று வரும் இத்திருக்கோயில் புனர்நிர்மாணப் பணிகளுக்கு குமுதம் ஜோதிடம் வார இதழும் 2012ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்தது.[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads