திண்டிவனம்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

திண்டிவனம்map
Remove ads

திண்டிவனம் (ஆங்கிலம்:Tindivanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், 33 நகர மன்ற உறுப்பினர் கொண்ட தேர்வு நிலை நகராட்சியும் ஆகும்.இது மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.....

விரைவான உண்மைகள் திண்டிவனம், நாடு ...
Thumb
திண்டிவனம் தொடருந்து நிலையம்

திண்டிவனம் நகரத்தில் சிப்காட் மற்றும் சிட்கோ ஆகிய தொழிற் பேட்டை உள்ளது......

திண்டிவனம் நகரம் இருப்புப்பாதை வசதி உள்ளது......

சென்னை விழுப்புரம் மெயின் லைன் திண்டிவனம் வழியாக செல்கிறது....

இங்கு..... கன்னியாகுமரி நெல்லை....முத்துநகர்..அனந்தப் புரி........இமேஸ்வரம்....சோழன்... சேலம் ..குருவாயூர்...சிஸ்டி....உழவன்...மலைக்கோட்டை...மங்களூர்...போன்ற தொலைதூர வண்டிகள் நின்று செல்லும்.... மேலும் பாண்டிச்சேரி...சென்னை விரைவு வண்டி மற்றும் பயணியர் வண்டியும்...விழுப்புரம் தாம்பரம் வண்டி . பாண்டிச்சேரி திருப்பதி வண்டி...விழுப்புரம்..அரக்கோணம்...வண்டி தினசரி இயங்குகிறது.....

திண்டிவனம் ....நகரி .(ஆந்திரா) இடையே 180 km புதிய இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது..

அதேபோல் திண்டிவனம்....திருவண்ணாமலை (70) இடையேயும் புதிய இருப்புப்பாதை அமைக்கப்படுகிறது...

திண்டிவனம் நகரில் ஏராளமான கல்லூரிகள் உள்ளது....

1.அண்ணா பல்கலை உறுப்பு கல்லூரி..

2.கோவிந்தசாமி அரசு கலை கல்லூரி.

3.நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

4.இந்திரா காந்தி மகளிர் கலை அறிவியல் கல்லூரி.

5.வேலவன் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்..

6.தட்சஷீலா பல்கலை கழகம்.

7.சரஸ்வதி சட்ட கல்லூரி.

8.சரஸ்வதி கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி..

9.PV பாலிடெக்னிக் கல்லூரி..

10.அரசு தொழிற் பயிற்சி நிலையம்.

11.. மயிலம் பொறியியல் கல்லூரி.

12.பவ்டா கலை அறிவியல் கல்லூரி

13.மயிலம் தமிழ் கல்லூரி.

14.மயிலம் காவலர் பயிற்சி பள்ளி மும் உள்ளது... 15.தமிழ்நாடு அரசு எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம்.... மற்றும் பயிற்சி நிலையம்..

Remove ads

பெயர்க் காரணம்

திண்டிவனம் என்பது திந்திரி வனம் என்ற சொல்லில் இருந்து மருவிய சொல்லாகும். இதன் தமிழ்ப் பெயர் புளியங்காடு '"புளியங்குடில்"' என்பதாகும். திந்திரி என்றால் புளிமரம், வனம் என்றால் காடு. இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ இலட்சுமி நரசிம்மர் (பெருமாள்) திருக்கோவிலில் ஸ்ரீ நரசிம்மரின் சீற்றதைத் தணிக்கும் பொருட்டு திருமகள் தாயார் ஸ்ரீநரசிம்மரின் இடத்தொடையில் அமர்ந்தபடி ஸ்ரீநரசிம்மரை இருகரங்கள் கூப்பி வழிபடுவது வேறெங்கும் இல்லாத தனிச் சிறப்பு திண்டிவனதிற்கு உண்டு. இது குறித்து திருவாய்மொழி அறியலாம். அதே போல் இங்குள்ள ஈஸ்வரருக்கு திந்திரிணீஸ்வரர் என்று பெயர். திண்டிவனம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

Remove ads

அமைவிடம்

1.தேசிய நெடுஞ்சாலை 32

சென்னை - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திண்டிவனம் வழியாக செல்கிறது.

2.தேசிய நெடுஞ்சாலை 132

திண்டிவனம் -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை.

3. தேசிய நெடுஞ்சாலை 77

பாண்டிச்சேரி - பெங்களூர் சாலையில் திண்டிவனம் வழியாக செல்கிறது 4.மாநில நெடுஞ்சாலை 05 திண்டிவனம் - ஆற்காடு சாலை.. இந்த சாலை காஞ்சிபுரம்.திருத்தணி.திருப்பதி..வேலூர்..ராணிப்பேட்டை ...chittur..an . Bangalore.. இணைக்கிறது.. 5.திண்டிவனம்- மரக்காணம் சாலை

இந்த சாலை கிழக்கு கடற்கரை இணைக்கிறது...
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12.25°N 79.65°E / 12.25; 79.65 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 58 மீட்டர் (190 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,088 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 72,796 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 87.4% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,003 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7664 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 12,078 மற்றும் 354 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.16%, இசுலாமியர்கள் 11.95% , கிறித்தவர்கள் 4.39%, தமிழ்ச் சமணர்கள் 1.36.%, மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர்.[3]

Remove ads

போக்குவரத்து

திண்டிவனம் நகரை பொறுத்த வரை 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் உள்ளது.

மேலதிகத் தகவல்கள் வழி, சேருமிடம் ...
Remove ads

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads