செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006

From Wikipedia, the free encyclopedia

செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006
Remove ads

செஞ்சோலைக் குண்டுத் தாக்குதல் அல்லது செஞ்சோலை மாணவிகள் படுகொலை 2006 ஆகத்து 14 அன்று இலங்கை வான்படையினரால் நடத்தப்பட்டது. இதன் போது 16 முதல் 18 அகவை வரையான 61 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்தது.[3][4][5][6] விடுதலைப் புலிகள், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆகியன தாக்குதல் நடத்தப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் முகாமல்ல எனவும் இறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவென்றும் தெரிவித்துள்ளன.[7][8][9][10][11]

விரைவான உண்மைகள் செஞ்சோலைக் குண்டுவீச்சு, இடம் ...
Remove ads

நிகழ்வும் தாக்கங்களும்

இலங்கை அரசாங்கம் 2004 முதல் இந்த தளத்தைத் தாம் கண்காணிப்பதாகவும், அது ஒரு பயிற்சி முகாம் என்றும் அது தவறான இலக்கு அல்ல என்றும் கூறியது.

செஞ்சோலை அனாதை இல்லக் குண்டுவீச்சுத் தாக்க்தல் 'நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற, கொடூரமான' செயல் என தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.[12]

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தனது அறிக்கையில், விடுதலைப் புலிகள் இந்த முதலுதவி வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள் எனவும், இந்தக் குழந்தைகள் சிறுவர் போராளிகள் அல்ல எனவும் தெரிவித்தது. இந்த முகாம் புலிகளால் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெளிவாகக் கூறியது.[13]

ஐக்கிய நாடுகள் செய்தித் தொடர்பாளர் ஒர்லா கிளிண்டன் குறிப்பிடுகையில், இந்த தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடையவர்கள் எனவும், இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் இருந்ததாகவும் கூறினார்.[14]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, "இந்த தாக்குதல் வெறுமனே கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும் மட்டுமல்ல, இது தெளிவாக ஒரு இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது வெறித்தனமான அரச பயங்கரவாதத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு," எனக் கண்டனம் தெரிவித்தது.[15][16]

யுனிசெப்

சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த யுனிசெப் அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்யவும், மருத்துவமனைக்கு எரிபொருள் மற்றும் பொருட்களை வழங்கவும், காயமடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவினர். யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஆன் எம். வெனிமேன், "இந்தக் குழந்தைகள் வன்முறையினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்" என்று கூறினார். அதே வேளையில், யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த யோன் வான் கெர்ப்பன் "இந்த நேரத்தில், அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார்.[10][17][18]

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு

சுவீடன் இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியும், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருமான உல்ஃப் என்றிக்சன் தனது அறிக்கையில், தனது ஊழியர்கள் இறந்தவர்களை எண்ணி முடிக்கவில்லை என்றும், சம்பவ இடத்தில் போராளிகளின் முகாம்கள் அல்லது ஆயுதங்களின் எந்த அடையாளத்தையும் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறினார்.[19]

Remove ads

கொல்லப்பட்டவர்கள்

கிளிநொச்சி மாவட்டக் கல்விப் பணிப்பாளர் ரி. குருகுலராஜா, முல்லைத்தீவு மாவட்டக் கல்விப் பணிப்பாளர் பி. அரியரத்தினம் ஆகியோர் இறந்த பாடசாலை மாணவிகளின் பெயர்களை உறுதிப்படுத்தி, அவர்கள் புதுக்குடியிருப்பு மகா வித்தியாலயம், விசுவமடு மகா வித்தியாலயம், உடையார்கட்டு மகா வித்தியாலயம், முல்லைத்தீவு மகா வித்தியாலயம், குமுழமுனை மகா வித்தியாலயம், முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி, செம்மலை மகா வித்தியாலயம், ஒட்டிசுட்டான் மகா வித்தியாலயம், முருகானந்தா மகா வித்தியாலயம், தர்மபுரம் மகா வித்தியாலயம், பிரமந்தனாறு மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் பயிலும் மாணவிகள் என் உறுதிப்படுத்தினர்.[20][21]

Remove ads

இலங்கை அரசாங்கம்

இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர்கள் கெஹெலிய ரம்புக்வெல, பிரிகேடியர் அத்துல ஜயவர்தன ஆகியோர் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இந்த அனாதை இல்லம் உண்மையில் புலிகளின் இராணுவ வீரர்களுக்கான பயிற்சி முகாம் என்றும், இது ஒரு அனாதை இல்லமாகவோ அல்லது எந்தவொரு சிவில் கட்டமைப்பாகவோ தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாகவும், சிறுமிகளாக இருந்தாலும், அவர்கள் இராணுவப் பயிற்சியில் இருக்கும் வீரர்கள் என வலியுறுத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ அல்லது எந்த விசாரணைக்கும் உத்தரவிடவோ இலங்கை அரசு மறுத்துவிட்டது. கிஃபீர் ஜெட் குண்டுவீச்சு வானூர்திகள் குண்டு வீசிய சிறிது நேரத்திலேயே புலிகள் பயிற்சி முகாமிலிருந்து தப்பி ஓடியது போன்ற செயற்கைக்கோள் காட்சிகளை இலங்கை அரசி பத்திரிகையாலர்களிடம் காட்டியதாக ராய்ட்டர்சு செய்தி நிறுவனம் தெரிவித்தது.[22]

இருப்பினும், அந்த ஒளிநாடாக்களைப் பார்த்த ஒரு பத்திரிகையாளர்,

எனத் தெரிவித்தார்.

2006 செப்டம்பர் 1 ஆம் நாள், 18, 19 மற்றும் 20 அகவையுடைய மூன்று இளம் பெண்களைக் கைது செய்ததாக இலங்கை காவல்துறை கூறியது. அவர்கள் விமானத் தாக்குதலில் காயமடைந்தவர்கள் என்றும், இவர்கள் மத்திய இலங்கையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்தனர். காவல்துறை உயர் அதிகாரி சந்திர பெர்னாண்டோ இது குறித்துக் கூறுகையில், மூன்று இளம் பெண்களும் தங்களை விடுதலைப் புலிகளின் உறுப்பினர் முதலுதவி பயிற்சிக்கு அழைத்துச் சென்றதாகக் கூறினர் எனவும், ஆனால் அங்கு அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியே வழங்கப்பட்டதாகத் தெரிவித்ததாகவும் கூறினார்.[24]

16 உயர்மட்ட மனித உரிமை வழக்குகளை விசாரிக்க நீதிபதி உடலகம தலைமையிலான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசு நியமித்திருந்தது, ஆனாலும் அவற்றில் 7 வழக்குகள் முடிவடைந்தவுடன் அவ்வாணைக்குழு கலைக்கப்பட்டது.[25] கைது செய்யப்பட்ட மூன்று சிறுமிகளில் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். மற்றவர் மருத்துவமனையில் இருந்து சாட்சியமளித்தார், மூன்றாமவர் இறந்து விட்டார்.[26]

க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி

கொல்லப்பட்ட மாணவிகளில் பெரும்பாலனவர்கள் க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறிக்காக 18 கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் கல்விவலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ தகமைக்கு தெரியப்பட்டு செஞ்சோலையில் கூடியிருந்த 400 மாணவிகளில் ஒரு பகுதியினரே ஆவார்கள். இப்பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது.

இப்பயிற்சி நெறி "கிளிநொச்சி கல்விவலயத்தால்" ஒழுங்கமைக்கப்பட்டு,"Women's Rehabilitation and Development (CWRD)" நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

இந்த பகுதியில் தரப்பட்ட தகவல்கள் தமிழ்நெற்றின் பின்வரும் ஆங்கில செய்திக்குறிப்பை[11] அடிப்படையாகக் கொண்டவை. கிளிநொச்சி கல்வி வலயம் என்பது மாவட்டத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான அரச கல்வி அமைச்சின் ஒரு பிரிவாகும்.

Remove ads

இலங்கை அரச இராணுவ பரப்புரை

இலங்கை அரச பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தாக்கப்பட்ட இடம் புலிகளின் தளம் என்றும், அதில் சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தால் அவர்கள் புலிகளால் பலாத்காரமாக சேர்க்கப்பட்ட குழந்தைப் போராளிகள் என்றும் கூறியுள்ளார். மேலும் அங்கு சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புகள் போர் அனுபவம் அற்றவர்கள் என்றும் சாடியுள்ளார்.[27][28]

இலங்கை அரசின் பொறுப்பு

இலங்கை வான்படை திட்டமிட்டு, துல்லியமாக சிறுவர் இல்லம் மீது தாக்குதல் நடத்தியதை அனுமதித்தது மட்டுமல்ல, அதற்கு பின்னர் வாதிட்டு இலங்கை அரசின் பொறுப்பற்ற மனித உரிமைகளை மதியா நிலைமையை வெளிக்காட்டியுள்ளது.[29]

Remove ads

அஞ்சலி

Thumb
Protests in Toronto

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads