செந்தில் குமார்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிர்ர்ச்சி செந்தில் (Senthil Kumar) என்று அறியப்படும் செந்தில் குமார் என்பவர் தமிழ்நாட்டு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். இவர் ரேடியோ மிர்ச்சி[1] என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். இவர் மதுரை (2007-2009), சரவணன் மீனாட்சி (2011-2013), மாப்பிள்ளை (2016-2017) போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் தவமாய் தவமிருந்து (2005), பப்பாளி (2014), வெண்நிலா வீடு (2014)போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[2][3][4]
Remove ads
வாழ்க்கை வரலாறு
செந்தில் [5] 1978 அக்டோபர் 18 அன்று சென்னையில் கோவிந்தன், பிரேமாவதி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவர் சென்னை பெரம்பூரில் உள்ள டான் போஸ்கோவில் பள்ளிப் படிப்பை முடித்தபின், பச்சையப்பா கல்லூரியிலும், மதுரை காமராஜ் பல்கலைகழகத்திலும்[6] உயர் கல்வியை முடித்தார். சில மாதங்கள் வங்கித்துறையில் பணியாற்றிவிட்டு, கலைத்துறைக்கு வந்தார்.
பணி விவரங்கள்
வானொலி
செந்தில் 2003 ஆம் ஆண்டு சென்னை ரேடியோ மிர்ர்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக[7] அறிமுகமானார். பின்பு கோவை ரேடியோ மிர்ர்ச்சியின் நிலைய தலைவராக நான்கு ஆண்டுகள் பணி ஆற்றினார். மிர்ர்ச்சி கோல்ட், மிர்ர்ச்சி பஜார், பேட்டை ராப், லவ் டாக்கீஸ் போன்ற பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தொகுத்து வழங்கியுள்ளார். இசைஞானி இளையராஜாவால் பாராட்டப்பட்ட 'நீங்க நான் ராஜா சார்'[8] நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார்.
தொலைக்காட்சி
விஜய் தொலைக்காட்சியில் 2007 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்ட மதுரை[9] தொடரில் 'செய்கை சரவணன்' என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். இந்த தொடருக்கிருந்த வரவேற்பைத் தொடர்ந்து, சரவணன் மீனாட்சி[10][11][12][13] எனும் நெடுந்தொடரில் நடித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் மனோபாலாவின் இயக்கத்தில் பாலிமர் தொலைக்காட்சியில் 777[14] குறுந்தொடரிலும் நடித்துள்ளார். அதை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு மாப்பிள்ளை எனும் தொடரிலும் 2018ஆம் ஆண்டு நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரிலும் நடித்துள்ளார். தொடர்களைத் தவிர செந்தில் பல நிகழ்ச்சிகளை விஜய் தொலைக்காட்சிக்காக தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் சினிமா இந்த வாரம் என்னும் நிகழ்ச்சியில் பல திரைப்பட குழுவினருடன் இணைந்து பட விமர்சனம் செய்துள்ளார். பாலிமர் தொலைக்காட்சியில் பெண்களுக்கான பாக்சிங் நிகழ்ச்சியை செய்தார்.
திரைப்படங்கள்
செந்தில் இயக்குநர் சேரனால் தவமாய் தவமிருந்து என்னும் திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டார். இதில் இவர் சேரனின் சகோதரனாக நடித்ததற்காக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டார். இதனை அடுத்து செங்காத்து பூமியிலே என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, கண் பேசும் வார்த்தைகள், வெண்ணிலா வீடு போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
Remove ads
விருதுகள்
- தவமாய் தவமிருந்து திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டார்.
திரைப்படங்கள்
தொடர்கள்
Remove ads
வானொலி தொகுப்பாளராக
- லவ் டாக்கீஸ் என்னும் வானொலி சினிமா என்னும் புதுமையான நிகழ்ச்சியில் செந்தில் பங்களித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக
- தமிழ் சினிமா இந்த வாரம் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- கடல் திரைப்படம் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- பரதேசி திரைப்படம் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- அஜித் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
- தனுஷ் ஸ்பெஷல் - ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்காக
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads