செனான் மூவாக்சைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செனான் மூவாக்சைடு (Xenon trioxide) என்பது XeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தும், +6 ஆக்சிசனேற்ற நிலையில் செனான் நிலைப்புத்தன்மையற்று காணப்படுவதுமான ஒரு சேர்மமாகும். மிகவலிமையான ஒர் ஆக்சிசனேற்றியாக இது செயல்பட்டு தண்ணீரில் இருந்து ஆக்சிசனை முதலிலும் பின்னர் செனானையும் மெல்ல வெளியேற்றுகிறது. சூரிய ஒளி படநேர்ந்தால் செனான் மூவாக்சைடு முடுக்கம் பெறுகிறது. கரிமச்சேர்மங்களுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் அபாயகரமாக வெடிக்கும் தன்மை கொண்டுள்ளது. அவ்வாறு வெடிக்கும்போது செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களை வெளியேற்றுகிறது.
Remove ads
செனான் மூவாக்சைடு வேதியியல்
செனான் மூவாக்சைடு ஒரு வலிமையான ஆக்சிசனேற்றி என்பதால் ஆக்சிசனேற்றம் அடையும் தன்மை கொண்ட அனைத்துப் பொருள்களையும் ஆக்சிசனேற்றம் அடையச் செய்கிறது. இருந்தாலும் இது மிகமெதுவாக வினைபுரிகிறது என்பதால் குறைவான பயன்பாடுகளையே கொண்டுள்ளது.[2]
ஆனால் ,25 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் செனான் மூவாக்சைடு அதிதீவிரமாக வெடிக்கும் நிலையையும் கொண்டிருக்கிறது.
- 2 XeO3 → 2 Xe + 3 O2
செனான் மூவாக்சைடு தண்ணீரில் கரைந்து அமிலத்தன்மையுள்ள செனிக் அமிலமாக உருவாகிறது.
- XeO3 (aq) + H2O → H2XeO4
H+ + HXeO4−
அறை வெப்பநிலையில் இக்கரைசல் வெடிக்கும் தன்மையை இழந்து நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலங்களை ஆக்சிசனேற்றம் செய்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாற்றுகிறது. .[3]
மாறாக , இது காரக் கரைசல்களில் கரைந்து செனேட்டுகளை உருவாக்குகிறது.செனேட்டுக் கரைசல்களில் HXeO4− எதிர்மின் அயனிகள் ஆதிக்கம் செலுத்தும் இனமாக உள்ளன.[4] நிலைப்புத்தன்மையற்று காணப்படும் இவை விகிதச்சமமாதலின்றி பிரிகையடைந்து +8 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ள பெர்செனேட்டுகளாகவும் செனான் மற்றும் ஆக்சிசன் வாயுக்களாக மாற்றமடைகின்றன.[5] செனான் மூவாக்சைடுடன் நீர்த்த ஐதராக்சைடு கரைசல்களைச் சேர்த்து வினைப்படுத்துவதால் XeO64−அயனிகளைக் கொண்டிருக்கும் திண்மநிலை பெர்செனேட்டுகள் தனித்துப் பிரிகின்றன. செனான் மூவாக்சைடு, கனிம புளோரைடுளான KF, RbF, அல்லது CsF போன்றவற்றுடன் வினைபுரிந்து நிலைப்புத்தன்மை மிக்க MXeO3F வகை திண்மங்களை உருவாக்குகிறது.[6]
Remove ads
இயற்பியல் பண்புகள்
செனான் அறுபுளோரைடு அல்லது செனான் நான்குபுளோரைடு சேர்மங்களை நீராற்பகுப்பு செய்யும் போது உண்டாகும் கரைசலை ஆவியாக்கி செனான் மூவாக்சைடு படிகங்கள் பெறப்படுகின்றன[7] . உலர் காற்றில் பலநாட்களுக்கு நிலைப்புத்தன்மையுடன் காணப்படும் இப்படிகங்கள் ஈரக்காற்றில் உள்ள நீரை உறிஞ்சி அடர் கரைசல்களை உருவாக்குகின்றன. a = 6.163, b = 8.115, c = 5.234 Å மற்றும் ஒர் அலகுக் கூட்டிற்கு 4 மூலக்கூறுகள் என்ற வகையிலான செஞ்சாய்சதுரப் படிக அமைப்பில் இது காணப்படுகிறது. இதனுடைய அடர்த்தி 4.55 கி/செ.மீ3 ஆகும்.[8]
![]() | ![]() | ![]() |
XeO3 படிக அமைப்பின் ஒரு பகுதி |
Remove ads
பாதுகாப்பு
செனான் மூவாக்சைடை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். அறை வெப்பநிலையில் இதனுடைய மாதிரிகள் தன்னிச்சையாகவே வெடிக்கும் இயல்புடன் காணப்படுகின்றன. உலர் படிகங்கள் செல்லுலோசு போன்ற கரிமச் சேர்மங்களுடன் வெடித்தலுடன் வினைபுரிகின்றன.[8][9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads