சென் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சென் பேரரசு (Bengali: সেন সাম্রাজ্য, Shen Shamrajjo) வடகிழக்கு இந்தியாப் பகுதிகளை, வங்காளத்தை மையமாகக் கொண்டு 11 மற்றும் 12வது நூற்றாண்டில் ஆட்சி செய்த இந்துப் பேரரசாகும். பாலப் பேரரசு வீழ்ச்சி அடையும் தருவாயில், வங்காளப் பகுதியின் அதன் ஆளுனர் ஹேமந்த சென் என்பவர் சென் பேரரசு கி. பி 1095இல் அமைய அடித்தளமிட்டார். பேரரசர் ஹேமந்த சென்னின் மறைவிற்குப் பின் வந்த சென் பேரரசர் விஜய் சென் 1096 முதல் 1159 முடிய 60 ஆண்டுகள் சென் பேரரசை ஆண்டார்.


விஜய் சென்னிற்குப் பின் வந்த பல்லால் சென், பாலப் பேரரசிடமிருந்து கௌர் பகுதியை வென்று கொல்கத்தா கடற்கரையில் நவதீப் என்ற புதிய தலைநகரை நிறுவினான். பல்லால் சென் மேலைச் சாளுக்கியர் அரசின் இளவரசியை மணந்தார்.[1]பல்லால சென் அரசனுக்குப் பின் 1179இல் பட்டமேறிய இலக்குமன சென் பேரரசை இருபது ஆண்டுகள் ஆண்டான். தனது ஆட்சிக் காலத்தில் தற்கால அசாம், ஒடிசா, பிகார் பகுதிகளை கைப்பற்றினான். கி. பி 1203–1204 இல் துருக்கிய படைத்தலைவர் இக்தியார் உத்தீன் முகமது பின் பக்தியார் கில்ஜி சென் பேரரசின் தலைநகர் நவதீப்பை தாக்கினான். போரில் தோற்ற இலட்சுமன சென் வடமேற்கு வங்காளப் பகுதிகளை துருக்கியரிடம் இழந்தான். ஆனால் பேரரசின் மற்ற பகுதிகள் இலட்சுமன சென்னின் கட்டுக்குள் இருந்தது.
Remove ads
கட்டிடக் கலை

வங்காள தேசத்தின் டாக்கா நகரில் அமைந்த தாகேஸ்வரி கோயிலை, 12ஆம் நூற்றாண்டில் சென் வமிச அரசன் பல்லால் சென் கட்டினார். மேலும் காஷ்மீரிலும் பல்லால சென் அரசர் கோயில்களை கட்டினார். [2]
சென் பேரரசுக்குப் பின்னர் வந்த தேவா பேரரசே இந்தியாவின் கிழக்கில் தன்னாட்சி பெற்ற இறுதி இந்துப் பேரரசாகும்.
சென் பேரரசர்கள்
- சமந்த சென்[3]
- ஹேமந்த சென் (கி. பி 1070–1096 )
- விஜய் சென் (1095–1158 )
- பல்லால் சென் (1158–1179 )
- இலக்குமன சென் (கி. பி 1179–1206)
- சொரூப் சென் (1206–1225)
- கேசவ சென் (1225–1230 )
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads