வங்காளம்

கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில் உள்ள பகுதி From Wikipedia, the free encyclopedia

வங்காளம்
Remove ads

வங்காளம் (Bengal, வங்காள மொழி: বঙ্গ Bôngo, বাংলা Bangla, বঙ্গদেশ Bôngodesh அல்லது বাংলাদেশ Bangladesh), என்பது தெற்காசியாவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பிரதேசம். பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில், 16 அக்டோபர் 1905-இல் கவர்னர் ஜெனரல் கர்சன் பிரபு, இந்துக்கள் அதிகம் வாழ்ந்த வங்காளத்தின் மேற்கு பகுதியை மேற்கு வங்காளம் என்றும், இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு வங்காளத்தை கிழக்கு வங்காளம் என்றும் பெயரிட்டு வங்காளத்தை பிரிவினை செய்து ஆண்டார்.

வங்காளம்
Bengal
Thumb
வங்காளப் பிரதேசத்தைக் காட்டும் வரைபடம்: மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசம்
பெரிய நகரம் கொல்கத்தா
முக்கிய மொழி வங்காள மொழி
பரப்பளவு 232,752 km² 
மக்கள் தொகை (2001) 209,468,404[1]
அடர்த்தி 951.3/km²[1]
இணையத்தளங்கள் bangladesh.gov.bdand wbgov.com

பின்னர் இந்தியப் பிரிவினையின் போது, இசுலாமியர்கள் அதிகம் வாழ்ந்த கிழக்கு வங்காளத்தை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்கப்பட்டு, கிழக்கு பாகிஸ்தான் என பெயரிடப்பட்டது.

வங்காள தேச விடுதலைப் போருக்குப் பின்னர் டிசம்பர் 1971-இல் கிழக்கு பாகிஸ்தான், வங்காளதேசம் எனும் புதுப் பெயருடன் புதிய நாடு உருவானது.

வங்காளத்தின் பெரும்பாலானோர் வங்காள மக்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வங்காள மொழியை முதல்மொழியாகப் பேசுகின்றனர். வங்காள மக்களின் முக்கிய உணவு அரிசி மற்றும் மீன் ஆகும். சுந்தரவனக்காடுகள் மற்றும் வங்காளப் புலிகளுக்கு வங்காளம் பெயர் பெற்றது.

Remove ads

இதனையும் காண்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads