செபிகேட் ஜாகுவார்

From Wikipedia, the free encyclopedia

செபிகேட் ஜாகுவார்
Remove ads

செபிகேட் ஜாகுவார் (SEPECAT Jaguar) என்பது ஒரு மீயொலிவேக தாக்குதல் வானூர்தியாகும்.[2] இது பிரித்தானிய மற்றும் பிரெஞ்சு வான்படைகளின் பயன்பாட்டுக்காக 1960களின் பிற்பாதியில் உருவாக்கப்பட்டது. இந்த வானூர்தியானது இப்பொழுதும் இந்திய வான்படையால் பயன்படுத்தப்படுகின்றது.[3]

விரைவான உண்மைகள் ஜாகுவார், வகை ...

முதலில் பயிற்சிக்காக பயன்படுத்த ஏதுவான ஒரு இலகுரக தாரை வானூர்தியாக இது வடிவமைக்கப்பட்டது. இது ஒற்றை இருக்கை மட்டும் இரு தாரை பொறிகள் கொண்ட தாக்குதல் வானூர்தியாகும்.[4] பிறகு இந்த வானூர்தியின் மீயொலிவேக செயல்திறனால் இது உளவு மற்றும் தாக்குதல் பணிகளில் பயன்படுத்தப்பட்டது.

பிரெஞ்சு கடற்படையின் வானூர்தி தாங்கிக் கப்பல்களின் பயன்பாட்டுக்காக இவை மாற்றியமைக்கப்பட திட்டமிடப்பட்ட போதிலும், பின்னாட்களில் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த வானூர்திகள் செபேக்கட் செபிகேட் (SEPECAT) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டன, இது பிரான்சு நாட்டின் பிரெகுவேட் மற்றும் பிரித்தானிய வானூர்தி நிறுவனத்தின் கூட்டு திட்டங்களில் ஒன்றாகும்.[5]

இந்தியா, ஓமன், எக்குவடோர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஜாகுவார் ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த வானூர்தியானது மூரித்தானியா, சாட், ஈராக், பொசுனியா மற்றும் பாக்கித்தான் நாடுகளில் நடந்த மோதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டது.[6][7] அத்துடன் பனிப்போரின் போது ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு நாடுகளால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.[8] வளைகுடா போரில், அதிக வெப்பநிலையில் இதன் செயல்பாடு மற்றும் நம்பகத்தன்மைக்காக பாராட்டப்பட்டது.[9] இந்த வானூர்தி பிரெஞ்சு வான்படையால் சூலை 2005 வரையும், பிரித்தானிய வான்படையால் ஏப்ரல் 2007 வரையும் பயன்படுத்தப்பட்டது.

Remove ads

விவரக்குறிப்புகள்

Thumb
SEPECAT ஜாகுவார் எலும்பியல் ரீதியாக திட்டமிடப்பட்ட வரைபடம்.

தரவு எடுக்கப்பட்டது: [10][11]

பொது இயல்புகள்

  • குழு: 1
  • நீளம்: 16.83 m (55 அடி 3 அங்)
  • இறக்கை விரிப்பு: 8.69 m (28 அடி 6 அங்)
  • உயரம்: 4.89 m (16 அடி 1 அங்)
  • இறக்கைப் பரப்பு: 24.18 m2 (260.3 sq ft)
  • விகிதம்: 3.12
  • வெற்றுப் பாரம்: 7,000 kg (15,432 lb)
  • மொத்தப் பாரம்: 10,954 kg (24,149 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 15,700 kg (34,613 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 4,200 L (920 imp gal; 1,100 US gal)
  • சக்தித்தொகுதி: 2 × ரோல்சு-ராய்சு தர்போமேக்கா எம்கே102 தாரை பொறி, 22.75 kN (5,110 lbf) உந்துதல் தலா

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: 1,350 km/h (839 mph; 729 kn)
  • அதிகபட்ச வேகம்: மாக் 1.1
  • போர் வரம்பு: 815 km (506 mi; 440 nmi)
  • பயண வரம்பு: 1,902 km (1,182 mi; 1,027 nmi)
  • உச்சவரம்பு 14,000 m (45,932 அடி)
  • ஈர்ப்பு விசை வரம்பு: +8.6
  • சிறகு சுமையளவு: 649.3 kg/m2 (133.0 lb/sq ft)
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads