பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கி.மீ. அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும்.[1][2] நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும்.
விரைவான உண்மைகள் பொசுனியாவும் எர்செகோவினாவும்Bosna i HercegovinaБосна и Херцеговина, தலைநகரம்மற்றும் பெரிய நகரம் ...