செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய் (Sher Mohammad Abbas Stanikzai), கத்தார் நாட்டின் தோகாவில் உள்ள தாலிபான்களின் அரசியல் அலுவலகத்தின் நடப்புத் தலைவர் ஆவார்.[1][2]

இளமை

பஷ்தூன் இனத்தின் பல உட்பிரிவுகளில் ஒன்றான ஸ்தானிக்சாய் உட்பிரிவில், ஆப்கானித்தானின் லோகார் மாகாணம், பராக்கி பராக் மாவட்டத்தில் பிறந்தவர் செர் முகம்மது அப்பாஸ். அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலை படிப்பு முடித்த முகமது அப்பாஸ், இந்தியாவில் உள்ள இந்திய மிலிட்டேரி அகாதமியில் இராணுவக் கல்வி பயின்றார்.[3][4] இவர் 1979-1989களில் நடைபெற்ற ஆப்கான்-சோவியத் போரில் பங்கு கொண்டவர்.[5]

தாலிபான்கள் ஆட்சியில் (1996-2001)

ஆப்கானித்தானை ஆண்ட தாலிபான்களின் அரசில் (1996–2001) செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய் வெளியுறவுத் துறை துணை அமைச்சராகவும், பின் நல்வாழ்வுத் துறை துணை அமைச்சராகவும் இருந்தவர். ஆங்கில மொழிப் புலமைக் கொண்ட செர் முகம்மது அப்பாஸ் அடிக்கடி வெளிநாட்டு ஊடகங்களில் பேட்டி அளிப்பவராகவும், தாலிபான்களின் செய்தி தொடர்பாளர்களாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.

இவர் 1996-இல் தற்காலிக வெளியுறவுத் துறை அமைச்சராக, அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் நிர்வாகத்தை சந்தித்து ஆப்கானித்தானத்துடன் அரசியல் ஆதரவை விரிவாக்க வலியுறுத்தியவர்.[6]

Remove ads

2021ஆம் ஆண்டில் அரசியல்

2020 தோகா ஒப்பந்தப்படி அமெரிக்கா தனது துருப்புகளை 31 ஆகஸ்டு 2021 தேதிக்குள் ஆப்கானை விட்டு வெளியேற முடிவு செய்தது. அதன் பிறகு நாட்டில் தாலிபான்களின் புதிய அரசிற்கு ஆதரவு கோரும் வகையில் 18,19 சூலை 2021களில் இவர் சீனா சென்று சீன அரசு மற்றும் அரசியல்வாதிகளுடன் கலந்து பேசினார்.[7]

தாலிபான் ஆட்சி (2021-)

செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய் 30 ஆகஸ்டு 2021 அன்று ஆப்கானித்தான் தொலைக்காட்சி மற்றும் வானொலியில், தாலிபான்கள் அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் இந்தியாவுடன் நட்புறவு கொள்வதாகவும், பாகிஸ்தான்-இந்தியா இடையேயான பனிப்போரில், ஆப்கானித்தானை பாகிஸ்தான் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். மேலும் ஆப்கானில் சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் பாதுகாப்புடன் வாழ அனுமதிக்கப்படுவார்கள், எனவே ஆப்கானை விட்டுச்சென்றவர்கள் மீண்டும் திரும்புங்கள் என்றும் கூறினார்.[8][9]

கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டேனக்சாய் அளித்த பேட்டியில், ஆப்கனை பொறுத்தவரை இந்தியா ஒரு மிகவும் முக்கியமான நாடு. கலாசாரம், பொருளாதாரம், அரசியல் மற்றும் வர்த்தக உறவுகளை அந்த நாட்டுடன் முன்பை போலவே தொடர விரும்புகிறோம் என்றார். ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது, அவர்கள் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுப்பது, ஆப்கானிஸ்தான் மண்ணில் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளோ, பயங்கரவாத செயல்களோ எந்த வகையிலும் நடைபெறக் கூடாது என இந்திய தூதர் குறிப்பிட்டதாகவும், இந்த விவகாரங்களுக்கு நேர்மறையான முறையில் தீர்வு காணப்படும் என தலீபான் பிரதிநிதி செர் முகம்மது அப்பாஸ் ஸ்தானிக்சாய் கூறினார்.[10]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads