செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள் (Moons of Mars) தெய்மொசு மற்றும் போபொசு ஆகிய இரண்டுமாகும்[1]. இவை இரண்டும் முதலில் சிறுகோள்களாகக் கருதப்பட்டன. இந்த இரண்டு இயற்கைத் துணைக்கோள்களும் 1877 இல் ஆசப் ஹால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது[2]. பண்டைய ரோமானியர்கள், செவ்வாய் கோளை ஏரிஸ் ஆக கருதினார்கள்.கிரேக்கத் தொன்மவியலின் படி போர் கடவுளான ஏரிஸ் போருக்குச் செல்லும் போது அவருடன் சென்ற அவரது இரு மகன்களின் பெயரான போபொசு மற்றும் தெய்மொசு இந்த இருவரின் பெயர்களும் இதற்குச் சூட்டப்பட்டுள்ளது. செவ்வாய் கோளுக்கு 50-100 மீட்டர்க்கும் குறைவான விட்டம் கொண்ட இயற்கைத் துணைக்கோள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads