செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்

From Wikipedia, the free encyclopedia

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்
Remove ads

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory, MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். இத்தரையுலாவி விண்கலம் 2011 நவம்பர் 26 ஆம் நாள் 10:02 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ஏவுகலம் மூலம் ஏவப்பட்டது[2][3]. இத்திட்டத்தின் "கியூரியோசிட்டி" (Curiosity) எனப் பெயரிடப்பட்ட தரையுலாவி[12][13] செவ்வாயில் கேல் பள்ளம் என்ற பகுதியில் 2012 ஆகத்து 6 ஆம் நாள் ஒசநே 05:14:39 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.[2][3] [14][15]

விரைவான உண்மைகள் இயக்குபவர், முதன்மை ஒப்பந்தக்காரர் ...

கேல் பள்ளத்தின் உள்ளே 5 கி.மீ. உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன[16].

Remove ads

திட்டத்தின் குறிக்கோள்கள்

உயிர் வாழ்தகுமை சாத்தியக் கூறுகள் குறித்த ஆய்வு
  • கரிமச் சேர்மங்கள் இருப்பு மற்றும் தன்மை குறித்த அலசல்
  • உயிர் வாழ்க்கைக்குத் தேவையான வேதியியல் கூறுகளை ஆய்வு செய்தல்
  • உயிர்கூறுகளின் இருப்பை அறிய முயலுதல்
2. செவ்வாய் கிரகத்தின் தட்ப வெப்பம் குறித்த ஆய்வு
  • செவ்வாயின் காற்று மண்டலத்தின் பரிணாம வளர்ச்சியினை அலசுதல்
  • நீர் மற்றும் கரிம வாயு ஆகியவற்றின் தற்போதைய இருப்பு, பகிர்மானம் மற்றும் சுழற்சி முறை குறித்து ஆராய்தல்.
3. செவ்வாய் கிரகத்தின் நிலவியல் குறித்த ஆய்வு
  • செவ்வாயின் மேற்பரப்பின் வேதியியல், சம இயல் மற்றும் கனிமவியல் பொதிவினைக் கண்டறிதல்
  • செவ்வாயில் உள்ள பாறை மற்றும் மண் உருவாகிய முறையினை அலசுதல்
4. மனித விண்வெளிப் பயணம்) குறித்த ஆய்வு
  • செவ்வாய் மேற்பரப்பின் கதிரியக்கத்தின் அகன்ற அலைக்கீற்றை குறித்த ஆய்வு
Remove ads

கியூரியோசிட்டி தரையுலாவி

Thumb

கியூரியோசிட்டி தரையுலாவி (Curisoity) உலகிலேயே விண்வெளிக்கு அனுப்பப்பட்ட மிகப்பெரிய தரை ஊர்தி (Rover) ஆகும்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads