செ. அரங்கநாயகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செ. அரங்கநாயகம் (C. Aranganayagam) என்பவர் தமிழக சட்டமன்றத்துக்கு நான்கு முறை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல்வாதியாவார். இரு முறை தொண்டாமுத்தூர் தொகுதியிலிருந்தும், இருமுறை கோவை மேற்குத் தொகுதியிலிருந்தும் (1977[1]; 1980) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆர் அமைச்சரவையிலும் பின்னர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் கல்வியமைச்சராகப் பொறுப்பு வகித்தவராவார்.[2][3][4] இவர் அதிமுக.விலிருந்து விலகி 4 செப்டெம்பர் 2006 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த நிலையில், 2014 ஆண்டு திமுகவிலிருந்தும் விலகினார்.[5] இவர், தமிழக அமைச்சராக 1991 முதல் 1996 வரை பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் தன் பெயரிலும், தன்மனைவி, மகன்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.15 கோடிக்கு சொத்துச் சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். 2017-ல் வெளியான சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பின்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததற்காக மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்தது.
Remove ads
மறைவு
அதிமுக முன்னாள் அமைச்சர் செ. அரங்கநாயகம் (வயது 90) உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 29 ஏப்ரல் 2021 அன்று காலமானார்.[6][7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads