தமிழ்நாடு சட்டப் பேரவை
தமிழ்நாட்டின் சட்டமன்றம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ்நாடு சட்டப் பேரவை (Tamil Nadu Legislative Assembly) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் அரசியல் திட்டம் சார்ந்த சட்டங்களை இயற்றும் அவையாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்துள்ளது.
இதன் தோற்றம் மற்றும் வரலாற்றைப் பார்க்கும் பொழுது, இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்த பொழுதிலிருந்தே இப்பேரவை செயல்பட்டுக் கொண்டிருந்தது.[1] தொடக்கத்தில் இது கீழவை மற்றும் மேலவை என்று ஈரவைகளாக செயல்பட்டது. 1986இல் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரனால் சட்ட மேலவை கலைக்கப்பட்டது. எனவே தற்போது ஒரவை கொண்ட சட்டமன்றமாக செயல்படுகின்றது.
2021 சட்டப் பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். தற்போது உள்ளது 16வது சட்டப் பேரவை ஆகும்.
Remove ads
வரலாறு
சென்னை மாகாணம்
தற்போதைய தமிழ்நாடு சட்டப் பேரவை, முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராகக் கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு, இந்திய அரசாணை 1919-இன் படி, சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம்மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர். அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இம்மன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்[1] ஜனவரி 9 1921 ல் கூடியது. இதன் துவக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் (இங்கிலாந்து அரசரின் தந்தைவழி உறவான) அவர்களால், அப்பொழுதைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் துவக்கிவைக்கப்பட்டது[1].
இந்திய அரசாணை 1935-இன் படி, சென்னை மாகாண சட்டவாக்க அவை, ஈரவைகளாக (முறையே சட்டமேலவை மற்றும் சட்டப் பேரவை) அமைக்கப்பட்டது. சட்டப்பேரவைக்கு 215 உறுப்பினர்களும், சட்ட மேலவைக்கு 56 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல் சட்டமன்றம் முறையே சூலைத் திங்கள், 1957-ஆம் ஆண்டு கூட்டப்பட்டது. சட்ட மேலவையானது காலாவதியாகாமல் மூன்றாண்டு காலத்திற்கு ஒரு முறை உறுப்பினர்கள் ஒய்வு பெறுமாறு அமைக்கப்பட்டது. அவ்வாறு ஒய்வு பெரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக இருக்குமாறு முறைபடுத்தப்பட்டது.
Remove ads
ஈரவை உதயம்
சட்டப் பேரவை அல்லது சட்டமன்றம் கீழவை
இந்திய அரசு ஆணை 1935 ன்படி இம்மன்றம் இரு அவைகளாகப் பிரிக்கப்பட்டு கூட்டு மன்றமாக அழைக்கப்பட்டது. கூட்டுப் பேரவையில் 375 உறுப்பினர்களை கொண்டதாக அமைந்திருந்தது. அதில் 125 உறுப்பினர்கள் மாநில ஆட்சியாளர்களால் (மறைமுகத் தேர்வு) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஆவர். இம்மன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.[1]
சட்டமன்ற மேலவை அல்லது சட்ட மேலவை
சட்ட மேலவை (மாநிலங்களவை) இது நிரந்தர மன்றம் (கலைக்கப்படுவதை இது குறுக்கிடாது அல்லது கீழ்படுத்தாது). இந்த அவையின் மொத்த உறுப்பினர்களாக 260 பேரும் அதில் 104 பேர் நேரடியாக இந்திய மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர், 6 பேர் பிரதம ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) ஆல் தேர்ந்தெடுக்கப்படுவர். 128 பேர் பிரதேச சமுதாயத் தொகுதிகளிலும் இருந்தும் மற்றும் 22 பேர் சிறுபான்மை, பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.[1]
அதிகாரங்கள்
இரு அவைகளும் சம அதிகாரம், சம ஆற்றல் கொண்டவை. ஆனால் நிதி, வழங்கல் போன்ற மசோதாக்கள் சட்டமன்றத்திலேயே (கீழ் அவை) நடைபெறும். இரு அவைகளுள் ஒன்று சட்டமன்றம் கீழவை என்றும் மற்றொன்று சட்ட மன்ற மேலவை என்றும் அழைக்கப்பட்டன.[1]
Remove ads
இந்திய அரசியலமைப்பில் வகுத்துள்ளவை
மாநில சட்டப் பேரவை (இந்தியில் விதான் சபை) சட்ட மன்றத்தின் கீழ் அவையான மாநில சட்டப் பேரவை இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகளின் அரசுகளுக்கு சட்டமியற்றும் இடமாக செயல்படுகின்றது.[2]
இப்பேரவை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநில தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டப் பேரவைத் தேர்தலில் மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இம்மன்றத்தில் பங்கு பெறுவர்.
உறுப்பினர்கள் எண்ணிக்கை
இம்மன்றத்தின் தலைவராக சட்டப் பேரவைத் தலைவர் செயல்படுவார். இந்திய அரசியலமைப்பின் படி இதன் அதிகப்பட்ச உறுப்பினர்களாக 500 பேர்களுக்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்காளாக 60 பேர்களுக்கு குறையாமல் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன.
அரசியலைமைப்பு விதியில் கூறப்பட்டவை
இந்திய அரசியலமைப்பு அத்தியாயம் மூன்று விதி 168 (2) ல்(இந்திய அரசியல் சாசனம்)[3] குறிப்பிட்டுள்ளவைகள்;- ஒரு மாநிலத்தில் இரண்டு மன்றங்கள் இருந்தால் ஒன்றைச் சட்ட மேலவை என்றும் மற்றதனைச் சட்ட மன்றம் (சட்ட சபை) என்றும் வழங்கப்பட வேண்டும். ஒரே மன்றம் உள்ள மாநிலங்களில் அதனைச் சட்ட மன்றம் என்று அழைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சி
பிரதான எதிர்க்கட்சி என்கிற தகுதியைப் பெற இரண்டு முக்கிய விதிகள் உள்ளன. முதலாவதாக ஆளுங்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். அடுத்ததாக குறைந்தது 24 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். இவை இரண்டையும் பெற்றிருக்கும் கட்சி பிரதான எதிர்கட்சியாக கொள்ளப்பபடும். பிரதான எதிர்க்கட்சித் தலைவர் கேபினட் அமைச்சருக்குரிய தகுதியைப் பெறுவார்[4].
நியமன உறுப்பினர்
இவ்வுறுப்பினர்களில் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆங்கிலோ இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு நியமன உறுப்பினரும் நியமிக்கப்படுவார். இது மரபுப்படி நியமிக்கப்பெற்று பின்பற்றப்படுகின்றது. இவ்வுறுப்பினர் விவாதங்களிலோ, மன்ற வாக்களிப்புகளிலோ பங்குபெறுவதில்லை.
காலவரை
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற பணியாற்ற கடமைப்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் இவ்வுறுப்பினர்களின் இருக்கைகள் வெறுமையாக்கப் (காலியாக) பெற்று மீண்டும் மாநில பொதுத் தேர்தல் நடத்தப்பெறும். இப்பேரவை உறுப்பினர்களில் அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியே மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் தகுதியுடையவர்.
பேரவை கலைப்பு
அவசர காலப் பிரகடன காலங்களில் இப்பேரவை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் பதவி வகிக்க அனுமதிக்கப் படுவர் அல்லது மன்றமும் கலைக்கப்படலாம். இப்பேரவையில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கெதிராக நம்பிக்கயில்லாத் தீர்மானம் கொண்டுவரும் சமயத்தில் அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் இப்பேரவை கலைக்கப்படும். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அம்மாநில அரசு கலைக்கப்பட்டதாக பொருள் கொள்ளப்படும்.
Remove ads
அமைவிடம்


தமிழ்நாடு சட்டமன்றம் புனித ஜார்ஜ் கோட்டை, சென்னையில் தற்போது உள்ளது. 1921-37 போது, சட்டமன்றத்தின் முன்னோடி சபை, கோட்டைக்குள் இருக்கும் சபை அறையில் (council chambers) கூடியது. அண்ணா சாலை, அரசு எஸ்டேட் வளாகத்தில் உள்ள சட்டசபை செனட் ஹவுசில் (senate house) 14 ஜூலை, 1937 - 21 டிசம்பர் 1938 வரையும், ஜனவரி 27, 1938 -26 அக்டோபர் 1939 காலகட்டத்தில் விருந்து மண்டபத்திலும் (பின்னர் ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் பெற்றது) கூடியது. 1946-52 போது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மீண்டும் கூடியது. 1952ல், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆன பின், அரசாங்கத்தின் எஸ்டேட் வளாகத்தில் உள்ள தற்காலிக இடத்திற்கு நகர்த்தப்பட்டது. அப்போதைய சட்டமன்ற கட்டிடம் 260 பேர் மட்டுமே அமரும் படி இருந்ததால் மார்ச் 1952 ல் இந்த நடவடிக்கை செய்யப்பட்டது. பின்னர் 3 மே 1952 அன்று அதே வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட சட்டமன்ற கட்டிடத்திற்கு நகர்ந்தது. இப்புதியகட்டிடத்தில் (பின்னர் "கலைவாணர் அரங்கம்," எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட கட்டிடம்) 1952-56 இல் செயல்பட்டது. மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டமன்றத்தின் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. அதனால் சட்டமன்றம் 1956ல் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது.[5]</ref>[6] 2004 இல் 12வது சட்டமன்றத் தொடரின் போது, ஜே. ஜெயலலிதாவின் அதிமுக அரசு முதலில் ராணி மேரி கல்லூரிக்கும், பின்னர் கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கும் சட்டமன்றத்தை மாற்ற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. இவ்விரண்டு முயற்சிகளையும் பொதுமக்களிடையே எதிர்ப்பேற்பட்டதால் அவை திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டன.[7] 13 வது சட்டமன்றத் தொடரின் போது, மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ஓமந்தூரார் அரசு தோட்டட்த்தில் சட்டமன்றம் மற்றும் அரசு தலைமைச் செயலகத்தை மாற்ற ஒரு புதிய திட்டத்தை முன்மொழிந்தது. 2007 இல், ஜெர்மன் கட்டடக்கலை நிறுவனம் ஜிஎம்பி இண்டெர்நேசனல் புதிய சட்டமன்ற வளாகத்தை வடிவமைத்துக் கட்டும் போட்டியை வென்றது; கட்டுமானம் 2008 ல் தொடங்கி 2010 ல் முடிக்கப்பட்டது. மார்ச் 2010இல் புதிய கட்டிடம் துவக்கப்பட்டு செயல்பாட்டை தொடங்கியது. 2011 தேர்தலில் அதிமுக வெற்றி பிறகு, சட்டசபை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு திரும்பியது.[8][9][10][11]
Remove ads
சட்டசபையில் கட்சிகளின் வலிமை
அமைச்சர்கள் சபை (7 மே 2021 - தற்போது வரை)
Remove ads
சட்டசபை அறையில் உள்ள உருவப்படங்கள்
பெ. ராஜகோபாலாச்சாரி மற்றும் எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை ஆகியோரின் மார்பளவு சிலைகள் சட்டமன்ற முகப்பு அறையில் உள்ளது.
Remove ads
சட்டமன்ற உறுப்பினர்கள்
தற்போதைய உறுப்பினர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads