சே. இராஜாராமன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சே. இராஜாராமன் என்பவர் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஒரு மென்பொறியாளர். நீச்சல்காரன் எனும் புனைப்பெயரில் அச்சிதழ்களிலும், இணைய இதழ்களிலும் எழுதிக் கொண்டிருப்பவர். இயற்பியலில் பட்டம் பெற்ற இவர் சென்னையிலுள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கணினித் தமிழில் ஆர்வம் கொண்ட இவர் நாவி எனும் சந்திப்பிழை திருத்தும் கருவி, வாணி எனும் பிழை திருத்தும் கருவி, ஓவன் எனும் ஒருங்குறி மாற்றிக் கருவி, சுளகு எனும் எழுத்தாக்கக் கருவி, மென்கோலம் - பல்குறியீட்டு எழுதிக் கருவி, நோக்கர் எனும் செயலி, வாணி தொகுப்பகராதி செயலி ஆகியவற்றைத் தமிழில் உருவாக்கி, அதனைத் தமிழ் ஆர்வலர்கள் பயன்பாட்டுக்காக நீச்சல்காரன் எனும் வலைத்தளம் வழியாக இலவசமாக வழங்கி வருகிறார்.[1]

Remove ads

விருதுகள்

  1. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்ற முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2019) [2]
  2. வல்லமையாளர் விருது (நவம்பர் 2015)
  3. கனடாவிலுள்ள தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பினால் வழங்கப்பட்டு வரும் தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகளில் ஒன்றான தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது (2015)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads