சோடியம் செலீனைட்டு

செலீனியம் டை ஆக்சைடுடன் செலீனியம் ஐதராக்சைடு வினைபுரிவதால் சோடியம் செலீனைட்டு உருவாகிறது From Wikipedia, the free encyclopedia

சோடியம் செலீனைட்டு
Remove ads

சோடியம் செலீனைட்டு (Sodium selenite) என்பது Na2SeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற திண்மமாக இவ்வுப்பு காணப்படுகிறது. Na2SeO3(H2O)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட பென்டா ஐதரேட்டு மட்டும் தண்ணிரில் கரையக்கூடிய செலீனியம் சேர்மமாக உள்ளது.

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
Remove ads

தயாரிப்பும் வேதி வினைகளும்

செலீனியம் டை ஆக்சைடுடன் செலீனியம் ஐதராக்சைடு வினைபுரிவதால் சோடியம் செலீனைட்டு உருவாகிறது :[1]

SeO2 + 2 NaOH → Na2SeO3 + H2O

இந்நீரேற்றை 40 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் நீரிலி உப்பாக மாற்றமடைகிறது. தொடர்புடைய சோடியம் சல்பைட்டை ஒத்த சோடியம் செலீனைட்டு பட்டக ஈரெதிரயனி போலத் தோற்றமளிக்கிறது [2]. இவ்வெதிரயனியை ஆக்சிசனேற்றம் செய்வதால் சோடியம் செலினேட்டு (Na2SeO4) உருவாகிறது.

Remove ads

பயன்கள்

பேரியம் செலீனைட்டு மற்றும் துத்தநாக செலீனைட்டுடன் சேர்த்து நிறமற்ற கண்ணாடிகள் பெருமளவில் தயாரிப்பில் சோடியம் செலீனைட்டு பயன்படுத்தப்படுகிறது. இரும்பு மாசுக்களால் கொண்டுவரப்படும் பச்சை நிறத்தை செலீனைட்டுகள் வெளிப்படுத்தும் மஞ்சள் நிறம் நீக்கிவிடுகிறது [3].

சில உணவுச் சேர்க்கைப் பொருள்களில் செலீனியம் கலந்திருப்பதால் இது அத்தியாவசியமான தனிமமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விலங்கு உணவுகளில் செலீனியம் சேர்க்கைப் பொருளை அணுமதிக்கிறது. எனினும் சோடியம் செலீனைட்டு என்ற பொது வடிவமே வலர்ப்பு விலங்குகளின் உணவாகக் கருதப்படுகிறது. எத்தகைய செலீனியம் சேர்மங்கள் விலங்குணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பது 1970 களில் சரியாக அறியப்படவில்லை என்று ஒரு செய்தித் துணுக்கு தெரிவிக்கிறது. அந்த நேரத்தில் முறைப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் சோடியம் செலீனைட்டும் சோடியம் செலீனேட்டும் மட்டுமே விலங்குணவாக பயன்படுத்த அனுமதிக்கப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டது [4].

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads