சோடியம் தையோசயனேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

சோடியம் தையோசயனேட்டு
Remove ads

சோடியம் தையோசயனேட்டு (Sodium thiocyanate ) என்பது NaSCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். சிலவேளைகளில் இதைச் சோடியம் சல்போசயனைடு என்றும் அழைக்கிறார்கள். நிறமற்றதாகவும் நீர்த்துப் போகக்கூடியதாகவும் உள்ள இவ்வுப்புதான் தயோசயனேட்டு என்னும் எதிர்மின் அயனிக்கு பிரதானமான ஆதாரமாக உள்ளது, அதேபோல மருந்து வகைகள் மற்றும் சிலவகை சிறப்பு வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொகுப்பு வினைகளிலும் இது பயன்படுகிறது[2] . தனிமநிலை கந்தகத்தை சயனைடுடன் வினைப்படுத்துவதன் மூலம் குறிப்பாக தையோசயனேட்டு உப்புகள் தயாரிக்கப்படுகின்றன.

8 NaCN + S8 → 8 NaSCN
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

சோடியம் தையோசயனேட்டு நேர் சாய்சதுர வடிவமைப்பில் படிகமாகிறது. ஒவ்வொரு சோடிய அயனி மையமும் மூவணு தையோசயனேட்டு அயனிகளால் வழங்கப்பட்ட மூன்று கந்தகம் மற்றும் மூன்று நைட்ரசன் ஈந்தணைவிகளால் சூழப்பட்டுள்ளன[3]. பொதுவாக இது ஆய்வகங்களில் Fe3+ அயனிகளின் இருப்பைக் கண்டறிய உதவும் சோதனையில் பயன்படுகிறது.

Remove ads

வேதித் தொகுப்பு பயன்பாடுகள்

ஆல்க்கைல் ஆலைடுகளை அவை சார்ந்த ஆல்க்கைல் தையோசயனேட்டுகளாக மாற்றும் வினைகளில் சோடியம் தையோசயனேட்டு பயன்படுகிறது. அமோனியம் தையோசயனேட்டு மற்றும் பொட்டாசியம் தையோசயனேட்டு போன்ற மிகவும் நெருங்கிய தொடர்புள்ள செயலிகள் தண்ணீரில் இருமடங்கு கரைதிறனைக் கொண்டுள்ளன. வெள்ளி தையோசயனேட்டுகளையும் இதற்காகப் பயன்படுத்தலாம். கரையாத வெள்ளி ஆலைடுகளை வீழ்படிவாக்கி அவற்றை தொடர்நடவடிக்கைகளை எளிமைப்படுத்த பயன்படுத்தலாம். ஐசோபுரோபைல் புரோமைடுடன் சோடியம் தையோசயனேட்டை சூடான எத்தனால் கரைசலில் வினைப்படுத்தும்போது ஐசோபுரோபைல் தையோசயனேட்டு உருவாக உதவுகிறது[4] . சோடியம் தையோசயனேட்டை புரோட்டானேற்றம் செய்வதன் மூலமாக ஐசோதையோசயனிக்கமிலம் உருவாகிறது. S=C=NH (pKa = -1.28)[5] . சோடியம் தையோசயனேட்டில் இருந்து பெறப்படும் இவ்வமிலத்தை கரிம அமீன்களுடன் சேர்த்து தையோயூரியா வழிபொருட்களைத் தயாரிக்க முடியும்[6].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads