சோடியம் சயனைடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோடியம் சயனைடு (Sodium cyanide) என்பது ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்தக் கனிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு NaCN. இது வெண்மை நிறமுடைய, நீரில் கரையக்கூடிய திண்மம். சயனைடு உலோகங்களை அதிகளவு கவரும்தன்மை உடையதால் இதன் உப்புகள் அதிகமான நச்சுத்தன்மை உடையதாகிறது. உலோகங்களுடன் அதிகளவு வினைபுரிந்து அரிக்கும் இயல்புடையதால் தங்கச் சுரங்கங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனை அமிலத்துடன் சேர்க்கும்பொழுது நச்சுத்தன்மை உடைய ஐதரசன் சயனைடு உருவாகிறது.
- NaCN + H2SO4 → HCN + NaHSO4
Remove ads
தயாரிப்பு முறைகள் மற்றும் வேதிப்பண்புகள்
ஐதரசன் சயனைடை, சோடியம் ஐதராக்சைடு உடன் சேர்த்து சோடியம் சயனைடு பெறப்படுகிறது.[4]
- HCN + NaOH → NaCN + H2O
2006 ஆம் ஆண்டில் உலகளாவிய உற்பத்தியானது 500,000 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த வெப்பநிலையில் சோடியம் அமைடை கார்பனுடன் சேர்த்து நடைபெறும் காஸ்ட்னர்-கெல்னர் செயல்முறை மூலம் சோடியம் சயனைடு தயாரிக்கப்படுகிறது.
- NaNH2 + C → NaCN + H2
திண்ம சோடியம் சயனைடின் கட்டமைப்பு சோடியம் குளோரைடுடன் தொடர்புடையது.[5]. நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் ஒவ்வொன்றும் ஆறு அயனிகளால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பொட்டாசியம் சயனைடும் (KCN) இதேபோன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு Na+ அயனிகளும் இரண்டு CN− தொகுதிகள், இரண்டு வளைந்த Na---CN, இரண்டு வளைந்து Na---NC சேர்ந்து பை பிணைப்பினை உருவாக்குகிறது.[6]
சோடியம் சையனைடு நீராற்பகுக்கும் போது விரைவில் ஐதரசன் சயனைடாக மாறுகிறது. ஏனெனில், வலிமை குறைந்த அமிலத்தில் இருந்து இதன் உப்புகள் பெறப்படுவதேயாகும். ஈரப்பதமுள்ள திண்ம NaCN, சிறிதளவு ஐதரசன் சயனைடை வெளியேற்றுகிறது. இதன் மணம் கசப்பான பாதாமின் மணத்தைக் காட்டுகிறது. சோடியம் சயனைடு, வலிமை மிகுந்த அமிலங்களுடன் வேகமாக வினைபுரிந்து ஐதரசன் சயனைடை வெளியேற்றுகிறது.இந்த ஆபத்தான செயல் சயனைடு உப்புகளின் குறிப்பிடத்தக்க ஆபத்தை பிரதிபலிக்கிறது. NaCN, ஐதரசன் பெராக்சைடு (H2O2) உடன் வினைபுரிந்து சோடியம் சயனேட்டு (NaOCN) மற்றும் நீரினைத் தருகிறது.:[4]
- NaCN + H2O2 → NaOCN + H2O
Remove ads
பயன்பாடுகள்
சோடியம் தங்க சயனைடு
சோடியம் சயனைடு முக்கியமாக சுரங்கத் தொழிலில் தங்கம் மற்றும் இதர விலையுயர்ந்த உலோகங்களைப் பிரித்தெடுக்க பயன்படுத்தப்படுகிறது. தங்கத்தின் மீது சயனைடு உயர்ந்த அளவு கவரும்தன்மை கொண்டுள்ளதால், இது தங்கம் உலோகத்தை ஆக்சிசனேற்றம் அடையச் செய்து, காற்று (ஆக்சிசன்) மற்றும் நீர் முன்னிலையில் கரைத்து, சோடியம் தங்க சயனைடு அல்லது தங்க சோடியம் சயனைடு உப்பு பெறப்படுகிறது.
- 4 Au + 8 NaCN + O2 + 2 H2O → 4 Na[Au(CN)2] + 4 NaOH
இம்முறையைப் போன்றே பொட்டாசியம் சயனைடில் (KCN, சோடியம் சயனைடு உடன் நெருக்கமுடையது) இருந்து பொட்டாசியம் தங்க சயனைடு (KAu(CN)2). பெறப்படுகிறது.
வேதி மூலப்பொருள்
வணிகரீதியாக குறிப்பிடத்தக்க பல வேதிச்சேர்மங்கள் சயனைடில் இருந்து பெறப்படுகிறது. குறிப்பாக சயனூரிக் குளோரைடு, சயனோசன் குளோரைடு மற்றும் பல நைட்ரைல்கள் பெறப்படுகின்றன. கரிமச் சேர்மங்கள் தொகுப்பு வினைகளில், சயனைடு ஒரு வலுவான கருக்கவர் காரணியாக இருந்து நைட்ரைல்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பல சிறப்பு வேதிப்பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
நச்சுத்தன்மை
சோடியம் சயனைடு, மற்ற சயனைடு உப்புகளைப் போன்றே கரையக்கூடியது. அறியப்பட்ட அனைத்து நச்சுப்பொருட்களை விட விரைவாக செயல்படும். NaCN என்பது சுவாசத்தினை தடைசெய்யும் சக்தி உடையது. மைட்டோகாண்ட்ரியல் சைட்டோகுரோம் ஆக்சிடேசு மீது செயல்படுவதால் எலக்ட்ரான் போக்குவரத்தை தடை செய்கிறது. இதனால் ஆக்சிசனேற்ற வளர்சிதை மாற்றம் மற்றும் ஆக்சிசன் பயன்பாடும் குறைகிறது. காற்றில்லா வளர்சிதை மாற்றத்தின் விளைவாக லாக்டிக் அசிடோசிஸ் உருவாகிறது. 200-300 மில்லிகிராம் என்ற சிறிய அளவிலான வாய்வழி மருந்தே அபாயகரமானதாகும்.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads