சோடியம் பெர்கார்பனேட்டு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

சோடியம் பெர்கார்பனேட்டு
Remove ads

சோடியம் பெர்கார்பனேட் என்பது Na
2
H
3
CO
6
என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் கூடிய ஒரு வேதிப்பொருள் ஆகும். இது சோடியம் கார்பனேட்டு ( "சோடா சாம்பல்" அல்லது "சலவை சோடா") மற்றும் ஐதரசன் பெராக்சைடு (ஒரு பெர்ஐதரேட்டு) ஆகிய பொருள்களின் கூட்டு விளைபொருள் ஆகும். இச்சேர்மத்தின் வாய்ப்பாடானது, மேலும் ஒழுங்கான முறையில்   2 Na
2
CO
3
  3   H
2
O
2
என்றவாறு எழுதப்படலாம். இது நிறமற்ற, படிக, நீர் உறிஞ்சும் திறனுள்ள மற்றும் நீரில் கரையக்கூடிய திண்மப் பொருளாகும்.[1] இது சில நேரங்களில் எஸ்.பி.சி என சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இது ஐதரசன் பெராக்சைடின் எடையால் 32.5% கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...

இந்த விளைபொருளானது சில சுற்றுச்சூழலுக்கு உகந்த நிறம் நீக்கிகள் மற்றும் பிற துப்புரவு தயாரிப்புகளிலும், நீரற்ற ஐதரசன் பெராக்சைடின் ஆய்வகத் தயாரிப்பிற்கான மூலமாகவும் பயன்படுத்தப்படுகிறது.

Remove ads

வரலாறு

சோடியம் பெர்கார்பனேட் முதன்முதலில் 1899 ஆம் ஆண்டில் உருசிய வேதியியலாளர் செபாஸ்டியன் மொய்செவிச் தனதார் (7 அக்டோபர் 1849 ஒடெசா - 30 நவம்பர் 1917, ஒடெஸா) என்பவரால் தயாரிக்கப்பட்டது.[2]

அமைப்பு

அறை வெப்பநிலையில், திண்ம சோடியம் பெர்கார்பனேட்டு சிஎம்சிஏ புறவெளித் தொகுதியுடன் செஞ்சாய்சதுர படிக அமைப்பைக் கொண்டுள்ளது. படிகங்கள் சுமார் −30° செல்சியசிற்குக் கீழே குளிர்விக்கப்படுவதால் அமைப்பானது பிபிசிஏ புறவெளித் தொகுதிக்கு மாறுகிறது.[3]

வேதியியல்

சோடியம் பெர்கார்பனேட்டானது நீரில் கரைந்து, ஐதரசன் பெராக்சைடு (இது இறுதியில் நீர் மற்றும் ஆக்ஸிஜனாக சிதைகிறது), சோடியம் அயனிகள் Na+
மற்றும் கார்பனேட் CO2−
3
ஆகியவற்றின் கலவையைத் தருகிறது.[1]

Remove ads

உற்பத்தி

pH மற்றும் செறிவுகளின் சரியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ள சோடியம் கார்பனேட் மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியவற்றின் கரைசலை படிகமாக்குவதன் மூலம் சோடியம் பெர்கார்பனேட் தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படுகிறது.[3][4][5] இது ஒரு வசதியான ஆய்வக முறையாகும்.

மாற்றாக, உலர்ந்த சோடியம் கார்பனேட் செறிவூட்டப்பட்ட ஐதரசன் பெராக்சைடு கரைசலுடன் நேரடியாக வினைக்குட்படுத்தப்படலாம்.[6]

இந்தச் சேர்மத்தின் உலகளவிலான உற்பத்தி திறன் 2004 ஆம் ஆண்டில் பல லட்சம் டன்களாக மதிப்பிடப்பட்டது.

Remove ads

பயன்கள்

இச்சேர்மம் ஒரு என ஆக்சிசனேற்றியாக இருப்பதால் எண்ணற்ற வீட்டு மற்றும் சலவைத் தொழிலுக்குத் தேவையான துாய்மையாக்கும் பொருள்கள் தயாரிக்க உதவும் மூலப் பொருளாக, குளோரின் அற்ற நிறம் நீக்கிப் பொருள்களான ஆக்சிபெர், ஆக்சிக்ளீன், டைட் சலவை சோப்பு மற்றும் வானிஷ் போன்றவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

பல வணிக பொருட்கள் சோடியம் பெர்கார்பனேட்டின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை சோடியம் கார்பனேட்டுடன் கலக்கின்றன. பேரங்காடிகளில் ஒரு "ஆக்சி" விளைபொருளின் சராசரி சதவீதம் 65% சோடியம் பெர்கார்பனேட் மற்றும் 35% சோடியம் கார்பனேட் ஆகும். இன்போமெர்சியல்சில் காணப்படும் "அல்ட்ரா பூஸ்டர்களில்" 80% சோடியம் பெர்கார்பனேட் இருக்கலாம். இருப்பினும், சோடியம் பெர்கார்பனேட் அதன் தூய வடிவத்தில் குறைந்த விலை கொண்டதும் மற்றும் பயனர் விரும்பும் எந்த இயைபிற்கும் சரிசெய்து கொள்ளக் கூடியதுமாகும்.

சோடியம் பெர்கார்பனேட் கரிமத் தொகுப்பு முறைகளில் நீரற்ற ஐதரசன் பெராக்சைடின் வசதியான ஆதாரமாகப் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக, கார்பனேட்டைக் கரைக்க முடியாத அதே நேரத்தில் ஐதரசன் பெராக்சைடை வெளியேற்ற முடிந்த கரைப்பான்களில் பயன்படுத்த முடியும்.[7] சோடியம் பெர்கார்பனேட் மற்றும் ட்ரைபுளூரோஅசிட்டிக் நீரிலி ஆகியவற்றிலிருந்து பேயர்-வில்லிகர் ஆக்சிஜனேற்றங்களில் பயன்படுத்த தேவையான நேரங்களில் உடனுக்குடன் ட்ரைபுளோரோபெரசிடிக் அமிலத்தை உருவாக்குவதற்கான ஒரு முறை அறிவிக்கப்பட்டுள்ளது; அதிக செறிவூட்டப்பட்ட ஐதரசன் பெராக்சைடு பெற வேண்டிய அவசியமின்றி இந்தக் காரணியைத் தயாரிப்பதற்கான ஒரு வசதியான மற்றும் மலிவான அணுகுமுறையை வழங்குகிறது.[8]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads