ஒடெசா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஒடெசா (Odessa, உக்ரைனியன்: Оде́са [ɔˈdɛsɐ]; உருசியம்: Оде́сса [ɐˈdʲesə]) உக்ரைனின் மூன்றாவது பெரிய நகரமாகும். இது ஒடேசா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். மேலும் இது உக்ரைனின் முதன்மையான சுற்றுலாவிடமாகவும் கடல் துறையாகவும் போக்குவரத்து மையமாகவும் விளங்குகின்றது. கருங்கடலின் வடமேற்கு கடலோரத்தில் அமைந்துள்ளது. ஒடெசா ஒப்லாஸ்த்தின் நிர்வாக மையமாகவும் பலவின பண்பாட்டு மையமாகவும் விளங்குகின்றது. ஒடெசா சிலநேரங்களில் "கருங்கடலின் முத்து",[3] எனவும் "தெற்குத் தலையகர்" ( உருசியப் பேரரசு மற்றும் சோவியத் ஒன்றியம் ஆட்சியில்) எனவும் "தெற்கு பால்மைரா"[4]எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஒடெசா நிறுவப்படும் முன்னர் இந்தவிடத்தில் தொன்மை கிரேக்க குடியிருப்பு இருந்தது. பின்னர் தாதர்கள் குடியிருப்பும், கிரீமியாவின் கான் 1440இல் நிறுவிய "அசிபே" நகரும் இருந்தன.[5] லித்துவிய சிற்றரசர் ஆட்சியில் சிறிதுகாலம் இருந்தபின்னர் அசிபேயும் அதன் சுற்றுவட்டாரங்களும் 1529இல் உதுமானியர்களின் கீழ் இருந்தது. 1792இல் உதுமானியப் பேரரசின் தோல்விக்குப் பிறகு உருசியா இதைக் கைப்பற்றியது. 1794இல் உருசியப் பேரரசின் மகா கத்தரீன் அரசாணைப்படி ஒடெசா முறையாக உருவாக்கப்பட்டது. 1819 முதல் 1858 வரை ஒடெசா கட்டற்றத் துறைமுகமாக இருந்தது. சோவியத் காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான வணிகத் துறைமுகமாக விளங்கியது. சோவியத் கடற்படைத் தளமும் நிறுவப்பட்டது. சனவரி 1, 2000இல் ஒடெசா வணிகத் துறைமுகம் 25 ஆண்டுகளுக்கு கட்டற்றத் துறைமுகமாகவும் கட்டற்ற பொருளியல் வலயமாகவும் அறிவிக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads