சோட்டா உதய்பூர் இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

சோட்டா உதய்பூர் இராச்சியம்
Remove ads

சோட்டா உதய்பூர் இராச்சியம் (Chhota Udaipur State or 'Princely State of Chhota Udaipur'), (குசராத்தி: છોટાઉદેપુર; இந்தி: छोटा उदैपुर)[1]1947 இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவில் இருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரமாக சோட்டா உதய்பூர் இருந்தது. இது தற்கால குஜராத் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த சோட்டா உதய்பூர் மாவட்டப் பகுதிகளை கொண்டிருந்தது.[2] 1901-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சோட்டா உதய்பூர் இராச்சியம் 2,305 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 64,621 மக்கள் தொகையும் கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

1743-ஆம் ஆண்டில் ராவல் உதய் சிங் என்பவரால் சோட்டா உதய்பூர் இராச்சியம் நிறுவப்பட்டது. 1807-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற சோட்டா உதய்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் ரேவா கந்தா முகமையின் கீழ் செயல்பட்டது.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி சோட்டா உதய்பூர் இராச்சியம், பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, 1956-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குஜராத் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.

Remove ads

ஆட்சியாளர்கள்

  • 1762 – 1771 அர்சிஸ் சிங்
  • 1771 – 1777 இரண்டாம் ஹமீர் சிங்
  • 1777 – 1822 பீம்சிங் Bhimsinhji
  • 1822 – 1851 குமான் சிங்
  • 1851 – 1881 ஜித் சிங்
  • 1881 – 1895 மோட்டி சிங்
  • 1895 – 29 ஆகஸ்டு 1923 பதே சிங் (பிறப்பு. 1884 – இறப்பு. 1923)
  • 29 ஆகஸ்டு 1923 – 15 அக்டோபர் 1946 நட்வர் சிங் (பி. 1906 – இ. 1946)
  • 15 அக்டோபர் 1946 – 15 ஆகஸ்டு 1947 விரேந்திர சிங் (பி. 1907-. 25 சூன் 2005)[3]
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads