சோம பானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சோம பானம் (சமஸ்கிருதம்: सोम, சோமா) என்பது ஆரியர்கள் அருந்தும் பானமாகும். மயக்கம் தரும் பானங்களில் வேதகால மக்களிடையே மிக விரிவாக பரவி இருந்தது.
சந்திரக்கடவுளாகிய சோமன் வருகின்ற நள்ளிரவில் இந்த பானம் தயாரிக்கப்படுவதாகவும், இந்த பானத்தினை தயாரிக்க பயன்படும் தாவரம் சோம தாவரம் என்றுள்ளதாலும் இந்த பானம் சோம பானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பானம் அமரத்துவத்தை தர வல்லதாகவும், மயக்கம் தர வல்லதாகவும் சித்தரிக்கப்படுகிறது.[1]
Remove ads
தயாரிப்பு முறை
இந்த சோம பானத்தினை தயாரிக்கின்ற முறைகள் பற்றி சாம வேதத்தில் குறிப்புகள் காணப்படுகின்றன. ரிக்வேதம் 9ஆம் அத்தியாயம் முழுமையும், மற்ற அத்தியாயங்களில் நூற்றுக்கணக்கான செய்யுட்களிலும் சோம பானம் தயாரிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்ந்த மலைகளில் வளரும் சோமக்கொடிகளை பறித்து மரப்பாத்திரத்தில் வைத்து மரக்கட்டைகளால் இடித்து தூளாக்கப்பட்டு, நிழலில் உலர்த்தி, நீரில் கரைத்து கம்பளித்துணியில் வடிகட்டி, தேன், பால் அல்லது தயிருடன் கலந்து மரப்பாத்திரங்களிலும், உலேகப்பாத்திரங்களிலும் கலசங்களிலும் பாதுகாத்து வைக்க வேண்டும். இது மிகச்சுவையாகவும், மயக்கம் தரும் ஒரு வகை பானம். ”சோம பானம் அருந்தி நாங்கள் அமரர் ஆனோம்” என்று ரிக்வேதம் 8-48-3ல் குறிப்பிடப்பட்டுள்ளது. சோம பானம் தயாரிக்கப்படும் சோமக் கொடியை சந்திரனுடன் (சோமன்) இணைத்து சொல்லப் படுகிறது. சோமக்கொடிகள் சந்திரனைப் போலவே வளர்பிறை காலத்தில் சிறிது சறிதாக வளர்ந்து பௌர்ணமி அன்று நீண்டு வளர்ந்து முழு வளர்ச்சி அடைகிறது. தேய் பிறை காலத்தில் சோமக்கொடி சிறிது சிறிதாக செடியின் உயரம் குன்றி அமாவாசை அன்று மிகச் சிறிதாகி விடுகிறது. வேறு எந்த தாவரமும் சோமக் கொடிகள் போன்று இவ்வாறு வளர்பிறை மற்றும் தேய்பிறையின் போது மாற்றம் பெறுவதில்லை.
Remove ads
சிறப்புகள்
சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும். இந்திரன், அக்னி, வருணன் போன்ற தேவர்களை சோமபானத்தை பருக வேண்டினர். சோமபானத்தை தேவர்களுக்கு படைத்த பின்பு தான் தாம் பருகுவர். தமது தேவர்களை மகிழ்விக்க சோமபானம் வலிமையான ஒன்று. சோமயாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோமபானம் அருந்துவர். போரின்போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனையை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
ரிக்வேத கால முனிவர்கள் சோமபானத்தை பலவாறு சிறப்பித்து மந்திரங்கள் இயற்றியுள்ளனர். கண்வ முனிவரின் மகன் குசூதி என்ற முனிவர் இந்திரனுக்கு விருப்பமான சோம பானத்தைக் குறிப்பிடுகிறார் (ரிக்வேதம் 8-71-7 & 8). சோமத்தை பற்றி அதிக சூக்தங்கள் செய்தவர் காசியப அசித் தேவல் (ரிக்வேதம் 9-5-1). சோமம் குறித்த துதிப்பாடல்கள் மூன்று பாதங்கள் கொண்ட காயத்ரி சந்தத்தில்தான் உள்ளது. ரிக்வேதம் 9வது மண்டலத்தில் 114 சூக்தங்களில் சோமத்தின் பெருமை பாடப்பட்டுள்ளது.
Remove ads
ஆதாரம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads