சோழ மண்டல சதகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோழமண்டல சதகம்,[1] சதகம் எனும் சிற்றிலக்கிய வகையில் சோழர்கள் குறித்துப் பாடப்பட்ட நூறு பாக்களைக் குறிக்கும். இதை வேளூர் ஆத்மநாத தேசிகர் இயற்றினார்.[2]

சோழ மண்டல சதகம் நூலின் மறுபதிப்பினை எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. [3]

ஆலஞ்சேரி மயிந்தன், வேளூர் கிழான், சேந்தன், புத்தூர்வேள் முதலான பலரைச் சோழ வள்ளல்களாகக் குறிப்பிடும் தகவல் இந்நூல் மூலம் தெரியவந்தது. [4]

சோழ மண்டல சதகத்தில் சோழர்களின் கீழ்கண்ட செப்பெடுகளைக் குறித்துள்ளது[5].

  1. எசாலம் செப்பேடுகள் - இராசேந்திர சோழன்
  2. திருச்செங்கோட்டுச் செப்பேடு I - சுந்தர சோழன்
  3. திருச்செங்கோட்டுச் செப்பேடு II - சுந்தர சோழன்
  4. பள்ளன் கோயில் செப்பேடு - சுந்தர சோழன்
  5. சென்னை அருங்காட்சியச் செப்பேடு - உத்தம சோழன்
  6. லெய்டன் பெரிய செப்பேடு - முதலாம் இராசராச சோழன்
  7. கரந்தைச் செப்பேடு - இராசேந்திர சோழன்
  8. கரந்தை உதிரிச் செப்பேடு - இராசேந்திர சோழன்
  9. திருவாலங்காட்டுச் செப்பேடு - இராசேந்திர சோழன்
  10. திருக்களர்ச் செப்பேடு I - இராசேந்திர சோழன்
  11. திருக்களர்ச் செப்பேடு II - இராசேந்திர சோழன்
  12. கல்கத்தா அருங்காட்சியகச் செப்பேடு - வீரராஜேந்திர சோழன்
  13. திருக்களர்ச் செப்பேடு III - முதலாம் குலோத்துங்க சோழன்
  14. லெய்டன் சிறிய செப்பேடு - முதலாம் குலோத்துங்க சோழன்
  15. பம்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ்

அருங்காட்சியகச் செப்பேடு I - முதலாம் குலோத்துங்க சோழன்

  1. பம்பாய் பிரின்ஸ் ஆப் வேல்ஸ்

அருங்காட்சியகச் செப்பேடு II - இரண்டாம் குலோத்துங்க சோழன்

  1. திருக்களர்ச் செப்பேடு IV - இரண்டாம் குலோத்துங்க சோழன்
  2. திருக்களர்ச் செப்பேடு V - மூன்றாம் குலோத்துங்க சோழன்
  3. வேதாரணியம் செப்பேடு - மூன்றாம் இராஜராஜ சோழன்
  4. பாண்டவர்மங்கலம் செப்பேடு - சடையவர்மன் சுந்தர சோழ பாண்டியன்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads