சௌமகல்லா அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌமகல்லா அரண்மனை அல்லது நான்கு அரண்மனைகள் (Chowmahalla Palace) ஆசாப் அலி வம்சத்தின் ஐதராபாத் நிசாம் மன்னர் கட்டிய நான்கு அரண்மனைகள் ஆகும்.
இந்த நான்கு அரண்மனைகளும் ஹைதராபாத்தில் உள்ள சார்மினார் அருகே அமைந்துள்ளது. ஐதராபாத் நிசாம் அசாப் உத்-தௌலா மீர் சலாபத் ஜங் என்பவரால் இவ்வரண்மனைகள் 1750-இல் கட்டத் துவங்கப்பட்டது.[1]அப்சல் உத்-தௌலா மற்றும் ஐந்தாம் அசப் ஜா ஆட்சிக் காலத்தில் முறையே 1857 மற்றும் 1869-ஆம் ஆண்டுகளில் நிறைவுற்றது.
45 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வரண்மனை இரண்டு தர்பார் கூடங்கள் மற்றும் இரண்டு தாழ்வாரங்களுடன் கூடியது. மேலும் கூட்ட அரங்குகள், நீரூற்றுகள், தோட்டங்களுடன் கூடியது. இந்த சௌமகல்லா அரண்மனைகளுக்கு, 15 மார்ச் 2010-இல் யுனெஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய பண்பாட்டு தலமாக அறிவித்து சான்றிதழ் வழங்கப்பட்டது.[2][3]
Remove ads
படக்காட்சிகள்
- 1880-இல் நிஜாமின் சௌமகல்லா அரண்மனைகள்
- சௌமகல்லா அரண்மனையின் ஓய்வறை
- காவல் கோபுரம், சௌமகல்லா அரண்மனை
- அரண்மனையின் அலங்கார விளக்குகள்
- தர்பார் அரங்கு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads