ஐதராபாத் நிசாம்

From Wikipedia, the free encyclopedia

ஐதராபாத் நிசாம்
Remove ads

ஐதராபாத்தின் நிசாம்-உல்-முல்க் (Nizam-ul-Mulk of Hyderabad, தெலுங்கு: నిజాం-ఉల్-ముల్క్ అఫ్ హైదరాబాద్; Urdu: نظام-ال-ملک وف حیدرآباد; மராத்தி: निझाम-उल-मुल्क ऑफ हैदराबाद; கன்னடம்: ನಿಜ್ಯಮ್-ಉಲ್-ಮುಲ್ಕ್ ಆಫ್ ಹೈದರಾಬಾದ್; Persian: نظام-ال-ملک اف حیدرآباد) பரவலாக ஐதராபாத் நிசாம் என்று அறியப்படுபவர்கள் ஐதராபாத் அரசு என்ற முன்னாள் முடியாட்சியின் மன்னர்கள் ஆவர். ஐதராபாத் அரசு தற்கால ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலங்காணா மற்றும் மகாராட்டிர மாநிலங்களில் உள்ள சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள் நிசாம்-உல்-முல்க் Nizam-ul-Mulk of ஐதராபாத், முன்னாள் மன்னராட்சி ...

ஆட்சிப்பகுதியின் நிர்வாகி என்ற பொருள்தரும் நிசாம்-உல்-முல்க் (Urdu: نظام‌الملک) என்பதன் சுருக்கமே நிசாம் (Urdu: نظام‌) ஆகும். 1719ஆம் ஆண்டு முதல் அசாஃப் ஜா வம்சத்தைச் சேர்ந்த உள்ளூர் மன்னர்கள் இந்தப் பட்டத்துடன் ஐதராபாத் அரசை ஆண்டு வந்தனர். 1713 முதல் 1721 வரை முகலாய மன்னர்களின் பிரதிநிதியாக தக்காணத்தை ஆண்டு வந்த கமார்-உத்-தின் கான், அசாஃப் ஜா I இந்த வம்சத்தை துவங்கினார்.

1707இல் அவுரங்கசீப்பின் மறைவிற்குப் பிறகு முகலாயப் பேரரசு சிதைந்தபோது அசாப் சா தன்னை தனிமன்னராக அறிவித்துக்கொண்டார். 1798 முதல் பிரித்தானிய இந்தியாவின் பல சிற்றரரசுகளில் ஒன்றாக, உள் விவகாரங்களில் தன்னாட்சி கொண்டதாய், ஐதராபாத் அரசு விளங்கியது.

இரண்டு நூற்றாண்டு ஆட்சிக் காலத்தில் ஏழு நிசாம்கள் ஆண்டுள்ளனர். அசாப் சா மன்னர்கள் இலக்கியம், கலை, கட்டிட வடிவமைப்பு, பண்பாடு ஆகியவற்றிற்கு ஆதரவு கொடுத்தனர். சிறந்த உணவை விரும்பிய நிசாம்கள் சிறந்த நகைகளையும் சேகரித்திருந்தனர்.

Remove ads

பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில்

1817-ஆம் ஆண்டு வரை ஐதராபாத் இராச்சியம் தன்னாட்சியுடன் முடியாட்சியாக செயல்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [1][2][3]

இந்திய விடுதலைக்குப் பின்

இந்திய விடுதலைக்குப் பின்னர் ஐதராபாத் இராச்சியத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க இந்திய இராணுவம் தொடுத்த நடவடிக்கையால் கடைசி நிசாம் சரணடைய நிசாம் ஆட்சி முடிவுற்றது.[4] [5][6]பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்த சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[7] 1956-ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ், இந்த சமஸ்தானம், தற்கால ஆந்திரப் பிரதேசம்,மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலப்பகுதிகளில் சென்றது. இதன் பெரும்பான்மையான பகுதிகள் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் பகுதியாக இருந்தது. பின்னர் ஆந்திராவிலிருந்து தெலங்காணா மாநிலம் பிரிக்கப்பட்ட போது, தற்போது தெலங்காணா மாநிலப் பகுதியாக உள்ளது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் அறிய

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads