ஜபால உபநிடதம்
ஆன்மீகம், துறவு, துறவு வாழ்க்கை, பற்றிய இந்து உரை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜபால உபநிடதம்' (Jabala Upanishad) ( சமக்கிருதம்: जाबाल उपनिषत्, ஜபாலோபனிடதம் என்றும் அழைக்கப்படும்[2] இது இந்து மதத்தின் ஒரு சிறிய உபநிடதம் ஆகும். இந்த சமசுகிருத உரை 20 சந்நியாச உபநிடதங்களில் ஒன்றாகும். மேலும் இது யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ஆன்மீகம், துறவு வாழ்க்கை, துறவு பற்றி பேசுகிறது.
ஜபால உபநிடதம் என்பது ஒரு பழங்கால நூலாகும். இது கிபி 300-க்கு முன் இயற்றப்பட்டது. கிமு 3-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.[3][4] ஆன்மீக அறிவின் பிரத்தியேகமான நோக்கத்திற்காக உலக வாழ்க்கையைத் துறப்பது பற்றிய விஷயத்தைப் பற்றி விவாதிக்கும் பழமையான உபநிடதங்களில் இதுவும் ஒன்றாகும்.[5] வாரணாசி நகரத்தை ஆன்மீக அடிப்படையில் அவிமுக்தம் என்று உரை விவாதிக்கிறது. அந்த நகரம் எப்படி புனிதமானது என்பதை விவரிக்கிறது. பின்னர் வணக்கத்திற்குரிய புனிதமான இடமென்றும் ( ஆத்மா) கூறுகிறது.[6]
எந்த ஆசிரம (வாழ்க்கையின் நிலை) இருந்தாலும், எவரும் துறந்துவிடலாம் என்று உபநிடதம் வலியுறுத்துகிறது.[7] இத் தேர்வு முழுக்க முழுக்க தனிநபரைப் பொறுத்தது. ஜபால உபநிடதம் சில சூழ்நிலைகளில் தற்கொலையை ஒரு தனிப்பட்ட விருப்பமாக நியாயப்படுத்துகிறது. முந்தைய வேத நூல்கள் மற்றும் முதன்மை உபநிடதங்கள் எதிர்த்த ஒரு பார்வை. நோய்வாய்ப்பட்டவர்களும் தங்கள் மனதில் உலக வாழ்க்கையைத் துறந்துவிடலாம். ஜபால உபநிடதம் வேதாந்த தத்துவக் கண்ணோட்டத்தை முன்வைக்கிறது.[8] உண்மையிலேயே அனைத்தும் துறந்த ஒருவர் ஒரு நெறிமுறை வாழ்க்கையை வாழ்கிறார். சிந்தனை, வார்த்தை அல்லது செயலால் யாரையும் காயப்படுத்தக்கூடாது. அத்தகைய சந்நியாசி (துறந்தவர்) அனைத்து சடங்குகளையும் விட்டுவிடுகிறார். எதிலும் அல்லது யாருடனும் பற்றுதல் இல்லாமல், ஆத்மா மற்றும் பிரம்மத்தின் ஒருமையில் அர்ப்பணிப்புடன் இருப்பார்.[9]
Remove ads
வரலாறு
இந்த உபநிடதத்தின் கருப்பொருள்கள் தியானம் மற்றும் துறத்தல் என்பதாகும். [7] இந்த உபநிடதத்தின் கட்டளைகளை முனிவர் யாக்யவல்க்கியர் "விளக்குபவராக" இருக்கிறார்". அவர் உலக வாழ்க்கையைத் துறப்பதன் அம்சங்களைப் பற்றி விரிவாகக் கூறுகிறார். ஆன்மீக அறிவொளியை அடைவதற்கான நலன்களில் ஒவ்வொரு ஆசையுடனும் பற்றுதலைத் தாண்டுதல், துறப்பதற்கான விருப்பம் உட்பட. [4] கிழக்கின் மதங்கள் மற்றும் நெறிமுறைகள் பேராசிரியரானசர்வபள்ளி ராதாகிருஷ்ணனின், கருத்துப்படி, இந்த உபநிடதம் சில சூழ்நிலைகளில் தற்கொலையை நியாயப்படுத்துகிறது.[8] இது முந்தைய வேத நூல்கள் மற்றும் முதன்மை உபநிடதங்கள் எதிர்த்த கருத்தாகும்.[8] உரை வாரணாசி நகரத்தை "சிவன் ஒருபோதும் கை விடுவதில்லை" என்றும்,[10][11] போற்றுதலுக்குரிய புனிதமான இடமாகவும் விவாதிக்கிறது.[12]
Remove ads
கட்டமைப்பு
இந்த உபநிடதத்தின் சமசுகிருத உரை ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.[13]முனிவர் யாக்ஞவல்கியர் முதல் ஐந்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அதில் பிரகஸ்பதி, அத்ரி, பிராமணன்-ஆத்மனின் மாணவர்கள், ஜனக மன்னன் மற்றும் மீண்டும் அத்ரியால் கேள்விகள் கேட்கப்படுகின்றன.[14] கடைசி அத்தியாயம் புகழ்பெற்ற முனிவர்களின் பெயர்களை பட்டியலிடுகிறது.[15]
தற்போதுள்ள நூல்கள் இரண்டு பதிப்புகளில் காணப்படுகின்றன. ஒன்று 14 வசனங்களாகக் கட்டமைக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது.[16] மற்ற பதிப்பில் ஒரே உள்ளடக்கத்துடன் ஆறு அத்தியாயங்கள் உள்ளன. ஆனால் 14 வசனங்களாக இல்லை.[17]
முதல் மூன்று அத்தியாயங்கள் அனைத்து உயிரினங்களின் இருக்கை மற்றும் இறுதி யதார்த்தம் ( பிரம்ம ) வசிக்கும் இடத்தை வரையறுப்பதற்கும். தியானத்தின் மூலம் அதை எவ்வாறு அடைவது, இந்துக் கடவுள் சிவன் மற்றும் வாரணாசி நகரம் ஆகியவற்றை வரையறுக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[10][11] [18] அடுத்த மூன்று அத்தியாயங்கள் துறத்தல் தொடர்பானவை.[19] பரமகம்சரின் குணாதிசயங்களை ஆன்மீகத்தின் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர், [18] சந்நியாசத்தின் அனைத்து வெளிப்புற அறிகுறிகளையும் கைவிட்டு, "பிரம்மன், சுயத்தின் தன்மை" என்பதை அறிய அனைத்து உறவுகளையும் அல்லது உலக சுகங்களையும் துறந்தவர் என்று அவர்கள் விவரிக்கப்படுகின்றனர்.[10]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads