ஜம்புகேஸ்வரர் கோயில், நந்திமங்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்புகேஸ்வரர் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், நந்திமங்கை என்னுமூரில் அமைந்துள்ள இரு சிவன் கோவில் ஆகும்.
தல வரலாறு
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தி்ன் நான்காவது தலம் நந்திமங்கை என்னுமிடத்தில் உள்ளது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 13 கி.மீ. நெடுஞ்சாலைக்குக் கிழக்காக 1 கி.மீ. தொலைவில் உள்ளது. நந்திதேவர் பூஜித்து பேறு பெற்றதால் நந்திமங்கை என்றும் நந்திமங்கள ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் இத்தலமே மேற்கு பார்த்த சன்னதியைக் கொண்டுள்ளது. ஆனால் தெற்கு வாசல் வழியாகத்தான் செல்லமுடியும். மேற்கில் உள்ள திறப்பிற்கு நேர் எதிரில் இவ்வூர் அந்தணர்களின் ருத்ரபூமி உள்ளது. சுடலை ஒளி இறைவன்மீது படும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி சங்கடஹர சதுர்த்தியன்று மாலை சிவலிங்கத்திருமேனியை சூரியக்கதிர்கள் தழுவும் சூரிய பூசையும் நடைபெறுகிறது.[1]
Remove ads
இறைவன், இறைவி
இங்கு கோயில் கோயில் கொண்டுள்ள இறைவன் ஸ்ரீஜம்புகேஸ்வரர். இறைவி அகிலாண்டேஸ்வரி.
சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலம்
சப்தமாதர்கள் வழிபட்ட ஏழு கோயில்களில், சக்கராப்பள்ளி சப்தஸ்தானத் தலமாகக் கோயில்களில், இதுவும் ஒன்றாகும். சப்தமங்கைத் தலங்கள் என்றும் அழைக்கப்படுகின்ற இவை கீழ்க்கண்ட இடங்களில் அமைந்துள்ளன.[1]
- சக்கராப்பள்ளியில் உள்ள சக்கரவாகேசுவரர் கோயில்
- அரியமங்கையில் உள்ள ஹரிமுக்தீஸ்வரர் கோயில்
- சூலமங்கையில் (சூலமங்கலம்) உள்ள கிருத்திவாகேசுவரர் கோயில்
- நந்திமங்கையில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயில்
- பசுமங்கையில் (பசுபதிகோயில்) உள்ள பசுபதீசுவரர் கோயில்
- தாழமங்கையில் (தாழமங்கலம்) உள்ள சந்திரமௌலீசுவரர் கோயில்
- புள்ளமங்கை என்றழைக்கப்படுகிற ஆலந்துறைநாதர் கோயில்
கல்வெட்டு
சோழர் கல்வெட்டில் இவ்வூர் நடுவிற்சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திமங்கையின் அக்ரகாரத்தின் மேற்கிலுள்ள ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோயில் தஞ்சை நாயக்க மன்னன் விஜயராகவ நாயக்கனால் எடுக்கப்பட்டது என்பதற்குச் சான்றாக அர்ச்சாவதார பெருமான வணங்கிய நிலையில் விஜயராகவ நாயக்கனின் சிற்பம் உள்ளது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads