ஜள்காவ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜல்கான் (Jalgaon, மராத்தி: जळगाव) இந்திய மாநிலம் மகாராட்டித்தின் வட மாவட்டங்களில் ஒன்றான ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஓர் மாநகராட்சி ஆகும். நீர்ப்பாசனம் பெறும் வேளாண் நிலங்கள் நிறைந்த காந்தேஷ் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் மாவட்டத்தின் தலைநகரமும் மாநகராட்சியும் ஆகும்.
இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவராக உள்ள திருமதி பிரதிபா பாட்டிலின் சொந்த ஊராகும். உலகப் புகழ்பெற்ற அசந்தா குகைகள் இதன் அருகாமையில் உள்ளது.
அண்மைக்கால ஜல்கான் சீரான சாலைகள், அங்காடி மையங்கள், குடியிருப்பு காலனிகள் என வளர்ச்சி யடைந்துள்ளது. இங்கு பல தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் நிறுவப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்துக் கட்டமைப்பும் மேம்பட்டுள்ளது.
ஜல்கானின் காலநிலை வேனில்காலத்தில் மிகுந்த வெப்பத்துடன், 47° செல்சியஸ் வரையும், காணப்படுகிறது.மழைக்காலத்தில் 700 மிமீ வரை மழை பெறுகிறது; குளிர்காலத்தில் இதமான வெப்பநிலை நிலவுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads