ஜல்பாய்குரி மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

ஜல்பாய்குரி மாவட்டம்
Remove ads

ஜல்பாய்குரி மாவட்டம் , இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 23 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜல்பைகுரி ஆகும். தீஸ்தா ஆறு இம்மாவட்டத்தில் பாய்கிறது. இம்மாவட்டம் ஜல்பைகுரி கோட்டத்தில் உள்ளது.

Thumb
மேற்கு வங்காளத்தின் வடக்கில் அமைந்த ஜல்பாய்குரி மாவட்டம் - எண் 2

ஜல்பாய்குரி மாவட்டத்தின் தலைமையகம் இந்திய நகரமான ஜல்பாய்குரி ஆகும். இது வட வங்காளத்தின் பிரதேச தலைமையகமாகும். மேலும் சுற்றுலா, காடு, மலைகள், தேயிலைத் தோட்டங்கள், வணிகமயமாக்கல் என்பவற்றினால் சிறப்புற விளங்குகிறது.

Remove ads

பெயரின் தோற்றம்

ஜல்பாய்குரி என்ற பெயர் ஜல்பாய் என்ற வங்காள மொழி வார்த்தையாகும். இது "இடலை" என்று பொருள்படும். இந்த மாவட்டத்தில் 1900 களில் இடலை மரங்கள் அதிகளவில் காணப்பட்டதால் இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. குரி என்ற பின்னொட்டு வார்த்தைக்கு "இடம்" என்ற பொருள்படும். இந்தப் பெயர் முழு பிராந்தியத்தின் முதன்மை தெய்வமான ஜல்பேஷ் (சிவா) உடன் தொடர்புபடுத்தப்படலாம்.

வரலாறு

ஜல்பாய்குரி மாவட்டம் மேற்கு தூர்கள் மற்றும் கிழக்கு மொராங்கின் முக்கிய பகுதியை உள்ளடக்கியது. சைலன் டெப்நாத்தின் கூற்றுப்படி, இந்த பகுதி பண்டைய காலத்தில் கம்ரூப் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து இது காமதாபூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறியது. காமதாபூரின் ஐந்து பண்டைய தலைநகரங்களில் மூன்று புவியியல் ரீதியாக ஜல்பாய்குரி மாவட்டத்தில் இருந்தன என்று குறிப்பிடுகிறார். 1947 ஆம் ஆண்டின் பிரிவினையின் போது, ஜல்பாய்குரி மாவட்டத்தின் தெற்கே 5 காவல் நிலையங்கள் துண்டிக்கப்பட்டு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுடன் (இப்போது வங்காளதேசம்) சேர்க்கப்பட்டது.

Remove ads

புவியியல்

ஜல்பாய்குரி என்பது மேற்கு வங்கத்தின் ஒரு பகுதியாகும். இது வங்கதேசத்தின் வடக்கே அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த மாவட்டம் முறையே வடக்கு மற்றும் தெற்கில் பூட்டான் மற்றும் வங்காளதேசத்துடன் சர்வதேச எல்லைகளையும், மேற்கில் டார்ஜிலிங் மலைகளையும், கிழக்கில் அலிதாபூர் மாவட்டம், கூச் பெகார் மாவட்டத்தையும் கொண்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட தேசிய பகுதிகளில் கோருமாரி தேசிய பூங்கா மற்றும் சப்ராமரி வனவிலங்கு சரணாலயம் ஆகியவை அடங்கும்.

காலநிலை

ஜல்பாய்குரி தென்கிழக்கு ஆசிய வலயத்தின் பருவமழை காலநிலையை கொண்டது. மே மாதம் இந்த பிராந்தியத்தின் வெப்பமான மாதமாகும். மே மாதத்தில் 32 சராசரியாக அதிகபட்சமாக 32 °C ஆகவும், குளிர் மாதமான சனவரி மாதத்தில் 11 °C வெப்பநிலையும் காணப்படும். பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வெப்பநிலை 40 °C ஆகும். குறைந்த பட்ச வெப்பநிலை 2 °C ஆகும். இந்த மாவட்டத்தின் சராசரி ஆண்டு ஈரப்பதம் 82% வீதம் ஆகும். ஆண்டின் சராசரி மழைவீழ்ச்சி 3160 மி.மீ ஆகும். இடியுடன் கூடிய மழை என்பது மே மாதத்தில் பொதுவான வானிலை நிகழ்வு ஆகும்.

Remove ads

பொருளாதாரம்

ஜல்பாய்குரி 2530.63 சதுர கிலோமீற்றருக்கு அதிகமான விவசாய பகுதிகளை கொண்டது. ஜல்பாய்குரி மாவட்டத்தின் ஆதிக்கம் செலுத்தும் விவசாய பொருட்கள் சணல் மற்றும் புகையிலை என்பனவாகும். மாரி காலத்திற்கு முன்னும், பின்னும் நெற்பயிர்ச் செய்கை நடைபெறுகிறது. தேங்காய், கருப்பு மிளகு என்பன பொதுவான தோட்ட பயிர்கள் ஆகும். மேலும் இங்கு காய்கறி, கடுகு, உருளைக்கிழங்கு சாகுபடி அதிகரித்து வருகிறது. போரோ நெல் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடியில் புரட்சிகர முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தாததால், ஏராளமான விவசாயிகள் இன்னும் பாரம்பரிய தொழில்நுட்பத்தை நம்பியுள்ளனர். சாகுபடி செய்யக்கூடிய நிலத்தில் 33% மட்டுமே பாசனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Remove ads

புள்ளிவிபரங்கள்

2001 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடிப்பின்படி, ஜல்பாய்குரி மாவட்டத்தில் 3,869,675 மக்கள் வசிக்கின்றனர்.[1] இந்தியாவின் 640 மாவட்டங்களில் 66 வது இடத்தைப் பெறுகின்றது. மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்கு 621 மக்கள் அடர்த்தி உள்ளது. 2001-2011 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் 33.77% ஆகும். மக்களின் கல்வியறிவு 79.79% ஆகும்.[1]

தாவரங்களும் விலங்குகளும்

இது கோருமாரா தேசிய பூங்காவின் தாயகமாகும். கோருமாரா தேசிய பூங்கா 1994 இல் நிறுவப்பட்டது. மற்றும் 79 கி.மீ. 2 (30.5 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] கோருமாரா தேசிய பூங்கா தவிர, மாவட்டத்தில் சப்ராமரி வனவிலங்கு சரணாலயமும் உள்ளது.

அரசியல்

இது ஜல்பாய்குரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது ஆகும் .[3] இந்த மாவட்டத்தில் தூப்குரி, மைனாகுரி, ஜல்பாய்குரி, ராஜ்கஞ்சு, தப்கிராம்-பூல்பாரி, மல்பசார் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3]

ஆட்சிப் பிரிவுகள்

  • ஜல்பாய்குரி சர்தார்
  • மல்

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads