டார்ஜீலிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டார்ஜீலிங் (Darjeeling, வங்காள: দার্জীলিং ) என்ற பெயருடன் கூடிய நகரம் இந்தியாவின் வடக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில் அமைந்துள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தின் தலைநகரமாகவும் இந்த நகரம் திகழ்கிறது.
இது மகாபாரத மலைத்தொடர் அல்லது இமாலயத்தை விட சற்று குறைவான சராசரி உயரம் உடையது. இந்தியாவை பிரித்தானியா ஆட்சி புரிந்த காலகட்டத்தில், டார்ஜீலிங்கின் மிதமான தட்பவெப்பநிலை அங்கிருந்த பிரித்தானிய மக்களுக்கு கோடை காலங்களில் கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்கான புகலிடமாக அமைந்தது, அதுவே மலைவாழிடமாக (மலை நகரம்) இது வளர்ச்சியுறுவதற்கு காரணமாக அமைந்தது. இதனால் டார்ஜீலிங் கோடைகால தலைநகரம் என்று வழங்குகிறது.
டார்ஜீலிங் அங்குள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே நிலையத்திற்கும் உலகப்புகழ் பெற்றதாகும். இது யுனெஸ்கோ அறிவித்த உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாகும். ஆங்கிலேயர்கள் மேம்படுத்திய ஒரு பகுதியில், கடந்த 19 ஆம் நூற்றாண்டில் இங்கு தேயிலை பயிரிட்டார்கள். அந்த பகுதியில் தேயிலை வளர்த்தவர்கள் கருப்பு தேயிலையினுடைய தனித்தன்மை வாய்ந்த கலப்பினம் மற்றும் நொதித்தல் முறை தொழில்நுட்பங்களை மேம்படுத்தினார்கள், இம்முறையிலான அநேக கலப்பினங்கள் உலகிலேயே மிகச்சிறந்தவையாக கருதப்படுகின்றன.[3] இங்குள்ள டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே இம்மாநிலத்தில் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ள நகரங்களை இணைக்கிறது. இது உலக பாரம்பரியம் மிக்க இடமாக 1999 ஆம் ஆண்டில் புகழ்பெற்றது. இந்தியாவில் இயங்கிவரும் சில பழங்காலத்து புகை வண்டிகளில் எஞ்சிய ஒரு புகை வண்டி இங்கு இன்றுமியங்கி வருவதை நாம் காணலாம். நீராவி தொடர்வண்டிகளுள் ஒன்று தற்பொழுதும் இங்கு இயங்கி வருகிறது.
டார்ஜீலிங்கில் பெரும்பாலான பொதுப் பள்ளிகள், பிரித்தானிய முறை கல்வியை பின்பற்றுவதால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்தும் அண்டை நாடுகளில் இருந்தும் மாணவர்களை ஈர்க்கிறது. கலிம்போன்ங்கின் அருகே இணைந்துள்ள முக்கிய மையமான இந்நகரம், 1980 ஆம் ஆண்டிலிருந்து கூர்க்காலாந்து என்னும் தனி மாநில கோரிக்கையை முன்வைத்துள்ளது, இருப்பினும் இந்த பிரிவினை இயக்கம் டார்ஜீலிங் கூர்க்கா மலைக்குழு அமைப்பு காரணமாக படிப்படியாக கடந்த பத்தாண்டுகளில் குறைந்தது. சமீப ஆண்டுகளில் இந்நகரம், சூழ்நிலை வள ஆதாரங்களைத் தடுக்கக்கூடிய வளர்ந்துவரும் சுற்றுலா போக்குவரத்து மற்றும் மோசமாக திட்டமிடும் நகர்மயமாக்கல் ஆகியவற்றின் தேவை அதிகரிப்பு காரணமாக அழியத்தக்க சூழலுக்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது.
Remove ads
வரலாறு

டார்ஜீலிங்கின் வரலாறானது வங்காளம், பூட்டான், சிக்கிம், நேபாளம் ஆகிய மாநிலங்களுடன் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாகும். 19 ஆம் நூற்றாண்டின் முன்பகுதி வரை, டார்ஜீலிங்கை சுற்றியுள்ள பகுதிகளை இடைவெளிவிட்டு வங்காளம், நேபாளம், சிக்கிம் ஆகிய பேரரசுகள் ஆண்டனர்,[4] தற்பொழுது கீழ்கண்ட தளங்களில் இணைய ஆவணங்கள் உள்ளது . 7 ஜூன் 2006 இல் மீட்டெடுக்கப்பட்டது.</ref> லெப்சாவினுடைய சில கிராமங்களின் பரவலான மக்கள் இதன் குடிமக்களாக இருந்தனர்.[5] 1828 ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதியாக இருந்த அதிகாரி ஒருவர் சிக்கிம் செல்லும் வழியில் டார்ஜீலிங்கில் தங்கியதின் விளைவாக அவர் அந்தப்பகுதி பிரித்தானிய சிப்பாய்களின் உடல்நலத்திற்கு உகந்த இடமாக இருக்கும் என முடிவு செய்தார்.[6][7] 1835 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய நிறுவனம் சிக்கிமினுடைய சோக்யாலில் இருந்து சிறுபகுதியை ஒப்பந்தம் மூலம் பெற்றது. ஆர்த்தர் கேம்பெல் எனும் மருத்துவர் கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் லியூட்டெனட் நேப்பியர் ஆகியோருடன் இணைந்து அந்தப்பகுதியில் ஒரு மலைவாழிடம் நிறுவ பொறுப்பேற்று கொண்டார், மற்றும் இப்பகுதியை முன்னேற்றுவதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெளிநாட்டிலிருந்து குடியேறிய விவசாயிகளை வெகுவாக கவர்ந்ததால் அவர்கள் அதன் பள்ளத்தாக்குகளில் விவசாயம் செய்து வணிகத்தை பெருக்கினர். அதன் விளைவாக 1835 மற்றும் 1849 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் டார்ஜீலிங்கின் மக்கள்தொகை நூறு மடங்காக உயர்ந்தது. 1852 ஆம் ஆண்டில் ஹில் கார்ப்ஸ் என்ற அமைப்பு கட்டளைகள் மற்றும் தொடர்புகளை நிர்வகித்தது. உடல்நல மையம், சந்தை சிறைச்சாலை ஆகியவற்றை கட்டினார்கள்.[7]
டார்ஜீலிங் பிரித்தானிய இந்தியப் பேரரசின் பகுதியாக மாறிய சில ஆண்டுகளுக்கு பிறகு 1849 ஆம் ஆண்டில்,[6] சிக்கிம் மாநிலத்துடன் நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தை தொடர்ந்து640 சதுர மைல்கள் (1,700 km2) 1850 இல் சிக்கிமிடமிருந்து அதன் நிலப்பகுதியை பிரித்தானிய தன்னுடன் இணைத்துக்கொண்டது.[7] 1864 ஆம் ஆண்டில் பூட்டானிய ஆட்சியாளர்களுடன் கையெழுத்தான உடன்படிக்கையைத் தொடர்ந்து மலைப்பகுதி முழுவதும் மற்றும் கலிம்போன்ங் ஆகியவை பிரித்தானியக்கு விட்டுகொடுத்தது. 1866 ஆம் ஆண்டில் பரப்பளவு சார்ந்து, டார்ஜீலிங் மாவட்டம் தற்பொழுது உள்ள வடிவத்தையும் அளவினையும் சார்ந்த கற்பிதத்தைப் பெற்றது.1,234 சதுர மைல்கள் (3,200 km2)[7] ஸ்காட்லாந்து சமயப்பரப்பாளர்கள் பிரித்தானிய குடியுரிமை மக்களுக்கான பள்ளிகள், நல்வாழ்வு மையங்கள் ஆகியவற்றை அமைத்து, கல்விக்கு புகழ் பெற்ற இடப்பகுதியாக இதை வளர்த்தனர். 1881 ஆம் ஆண்டில் திறக்கப்பெற்ற டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே அப்பகுதியினுடைய வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தியது.[8] 1899 ஆம் ஆண்டில் டார்ஜீலிங்கானது மிகப்பெரிய நிலச்சரிவால் ஆட்டம் கண்டது (இது ”டார்ஜீலிங் அழிவுகள்” எனப்படுகிறது), இது அந்நகரம் கடுமையாக சேதமடையவும் மற்றும் அதன் மக்கள்தொகை வெகுவாக பாதிக்கவும் காரணமாக அமைந்தது.[9][10]

பிரித்தானிய ஆட்சியின் கீழ், டார்ஜீலிங் முதலில் “வரைமுறையற்ற மாவட்டமாக” இருந்தது, மற்றும் பிரித்தானிய இந்திய அரசின் குறைந்த பொருளாதார வளர்ச்சியுற்ற மாவட்டங்களுக்கு பொருந்தக்கூடிய நிர்வாகத்திட்டத்தினுடைய, பிரித்தானிய இந்திய அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு நாட்டின் பிற பகுதிகள் தன்னிச்சையாக உட்பட்ட போதிலும் டார்ஜீலிங் அவற்றிற்கு உட்படாததாகவே விளங்கியது. பின்னர் 1919 ஆம் ஆண்டில், இப்பகுதியை “பிற்படுத்தப்பட்ட பகுதி” ஆக அறிவித்தது.[11] டார்ஜீலிங்கை பிரித்தானிய ஆண்ட காலகட்டத்தில் அதன் மேல்தட்டு குடியினர், ஒவ்வொரு கோடைகாலத்திற்கும் டார்ஜீலிங்கிற்கு வந்தனர். இந்திய குடியுரிமையாளர்களான கல்கத்தாவின் துணை மாநிலங்களின் செலவந்தரான அரசர்கள் மற்றும் நில உரிமையாளர்களான ஜமீன்தார்கள் ஆகியோரும் டார்ஜீலிங்கிற்கு வருவது வெகுவாக அதிகரித்தது.[12] இந்நகரம் தொடர்ந்து சுற்றுலா தலமாக வளர்ச்சியடைந்து, ”மலைகளின் ராணி” என்று சிறப்பாக குறிப்பிடும்படி மாறியது.[13] இந்நகரம் தொலைவில் அமைந்ததாலும், குறைந்த மக்கள்தொகை காரணமாக இந்தியாவின் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் நிகழ்வு நடக்கவில்லை. இருப்பினும், இது 1934 ஆம் ஆண்டில் வங்காளத்தின் கவர்னராக இருந்த, சர் ஜான் ஆண்டர்சன் என்பவர் மீது புரட்சியாளர்கள் மேற்கொண்ட படுகொலை முயற்சியில் தோல்வியைக் கண்டது.[14]

1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, டார்ஜீலிங் மேற்கு வங்கம் மாநிலத்துடன் இணைந்தது. பின்னர் டார்ஜீலிங்கினுடைய மலை நகரங்களான குர்சியாங், கலிம்போன்ங் மற்றும் டெராய் பகுதியின் சிலபாகங்களை சேர்த்து டார்ஜீலிங் தனி மாவட்டமாக நிறுவப்பெற்றது. 1950 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசு திபெத்தை தன்னுடன் சேர்த்துக்கொண்ட பிறகு, ஆயிரக்கணக்கான திபெத்திய அகதிகள் டார்ஜீலிங் மாவட்டத்தில் வந்து வாழத்துவங்கினர். பல்வேறு இனம் சார்ந்த மக்கள்தொகை காரணமாக சமூக-பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்தன, மற்றும் 1980 ஆம் ஆண்டில் இன எல்லை சார்ந்து கூர்காலேண்ட் மற்றும் கம்டபூர் ஆகிய தனி மாநிலங்கள் உருவாக்குவதற்கான கோரிக்கையும் பரவலாக எழுந்தது.

இந்த சிக்கல்கள் கூர்கா தேசிய விடுதலை முன்னணி (GNLF) என்ற அமைப்பால் 40 நாள்கள் நடந்த போராட்டத்திற்கு பிறகு உச்சத்தை அடைந்தது, இக்காலத்தில் நகரில் நிகழ்ந்த வன்முறைகள், அம்மாநில அரசாங்கத்தை அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு இந்திய இராணுவத்தை அழைக்கும் நிலைக்கு தள்ளியது. சுபாசு கெய்சிங் என்பவரின் தலைமைப்பொறுப்பின் கீழ் டார்ஜீலிங் கூர்கா மலை அமைப்பு (DGHC) நிறுவப்பெற்றதால், அரசியல் நெருக்கடிகள் வெகுவாக குறைந்தன. இந்த DGHC என்கிற அமைப்புக்கு மாவட்டத்தை ஆளக்கூடிய பகுதி தன்னாட்சி அதிகாரங்கள் அளிக்கப்பெற்றன. அதற்கு பிறகு இதன் பெயர் ”டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பு” (DGAHC) என வழங்கியது. தற்பொழுது டார்ஜீலிங் அமைதியாக இருந்தபோதிலும், கூர்கா ஜன்முக்தி மோர்சா என்கிற அரசியல் கட்சியின் ஆதரவால், தனி மாநிலம் குறித்த சிக்கல் தற்பொழுதும் சுணக்கமாக காணப்படுகிறது.[15]
Remove ads
புவியியல்

டார்ஜீலிங் கூஹும் என்ற இடத்திலிருந்து தெற்குநோக்கி தொடர்ந்து அமைந்துள்ள, டார்ஜீலிங்-ஜலப்ஹார் மலைத்தொடரின் மீதுள்ள டார்ஜிலிங் இமலாயன் மலைப்பகுதியின் ஏற்றத்தில் அமைந்துள்ளது.6,710 அடி (2,050 m)[16] இந்த மலைத்தொடரானது கடப்பஹர் மற்றும் ஜல்ப்பஹர் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு படுத்துள்ளது போல் Y-வடிவில் அமைந்துள்ளது. இதன் இரு கைகளும் அப்சர்வேட்டரி மலையினுடைய வடக்கு நோக்கி விரிவடைந்து காணப்படுகிறது. இதன் வட-கிழக்கு கைப்பகுதியின் சரிவுகள் திடீரென்று லெபான்ங் கிளைக்குன்றில் முடிவடைகிறது, இதன் வட-மேற்கு கைப்பகுதி வடக்கு முனை வழியாக கடந்து பள்ளத்தாக்கின் அருகில் உள்ள டக்வெர் தேயிலை தோட்டத்தில் முடிவடைகிறது.[4]
டார்ஜீலிங் சதார் உட்பிரிவின் முக்கிய நகரமாகவும், மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. டார்ஜீலிங் மலைகள் மஹாபாரத் மலைத்தொடர் அல்லது லெஸ்ஸர் இமாலயாவின் பகுதியாக அமைந்துள்ளது. இங்குள்ள மணலின் தன்மையானது முக்கியமாக மணற்கற்கள் மற்றும் உருள்திரள்கள் கலந்த முறையில் காணப்படுகிறது, இது இமாலயத்தின் பெரிய மலைத்தொடரினுடைய முகடுகளிலிருந்து சிதறிய துண்டுகளாலும் மற்றும் உறைந்த நிலையிலும் காணப்படுகிறது. இருப்பினும், இந்த மண்ணானது பெரும்பாலும் மோசமான தொகுப்பாகவும் (மழைக்காலங்களில் நீரை தேக்கிவைக்க முடியாத ஊடுருவும் தன்மையுடைய வண்டல்களாகும்) மற்றும் விவசாயத்திற்கு பொருந்தாத தன்மையுடையதாகவும் கருதப்படுகிறது. இந்த பகுதியிலுள்ள செங்குத்தான மலைச்சரிவுகளுடன் இளகிய தன்மையுடைய மண்ல்மேடுகள், பருவமழை காலங்களில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுக்கு காரணமாகிறது. இந்திய மதிப்பீட்டுச் செயலகத்தின் கருத்தை பொறுத்த அளவில், இந்த நகரம் நில அதிர்ச்சி மண்டலம் IV இன் கீழ் வருகிறது, (இந்த முதல் வரையிலான அளவை நிலநடுக்கம் நிகழ்கின்ற வாய்ப்பு அதிகமான நிலையை குறிக்கிறது) இந்திய மற்றும் இரஷ்யன் நிலவியல் பலகைகளினுடைய அருகமைந்த குவிய எல்லையை இது கொண்டுள்ளதால் அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த மலைகள் உயர்ந்த மலைசிகரங்களையும், பனி உறைந்த இமாலயன் மலைத்தொடர்களையும் தழுவியிருக்கிறது, தொலைவிலுள்ளதை காண்பதற்காக நகரத்தின் மேலே கோபுரம் உள்ளது. உலகின் மிகப்புகழ் வாய்ந்த மூன்றாவது மிக உயரமான மலைச்சிகரமான கன்ஜென்ஜங்காவை (8,598 மீ அல்லது 28,208 அடி) இங்கிருந்து பார்க்க முடியும். பகல்வேளையில் மேகங்களற்ற நேரத்தில், நேபாளத்தின் எவரெஸ்ட் மலை29,035 அடி (8,850 m)யையும் பார்க்க முடியும்.[17]
இப்பகுதியில் பல தேயிலை தோட்டங்கள் உள்ளன. டார்ஜீலிங் நகரம், அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெருகிவரும் மரஎரிபொருள், மரக்கட்டைகள் தேவை காரணமாகவும், வாகனப்போக்குவரத்து அதிகரித்ததன் காரணமாக ஏற்படும் காற்று மாசடைதல் மூலமும் காடழித்தல் நிலையை சந்தித்து வருகின்றன.[18] டார்ஜீலிங்கை சுற்றியுள்ள தாவரவளங்களில் மிதவெப்ப, இலையுதிர் காடுகள் உள்ளிட்டவற்றின் நெட்டிலிங்கம், பிர்ச், கருவாலிமரம் மற்றும் என்றும் பசுமைமாறா இலம்,ஈர ஆல்பைன் காலநிலையினை உடைய ஊசியிலை மரங்கள் ஆகியவை அடங்கும். அடர்த்தியான பசுமைமாறா காடுகள் இந்நகரத்தை சுற்றிலும் அமைந்துள்ளது, இங்கு பல்வேறு வகையிலான அரிய பகட்டு வண்ண மலர்களும் காணப்படுகிறது. லாயிட்ஸ் தாவரவியல் தோட்டத்தில் பொதுவான மற்றும் அரிய வகை தாவரவளங்கள் பாதுகாக்கப்படுகின்றன, இங்குள்ள பத்மஜா நாயுடு இமாலயன் விலங்கியல் பூங்கா அழியக்கூடிய நிலையிலுள்ள இமாலய உயிரினங்களை பாதுகாப்பதிலும், இனவிருத்தி செய்தலிலும் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது.[19]
Remove ads
காலநிலை

டார்ஜீலிங்கின் மிதவெப்ப காலநிலையானது ஐந்து முற்றிலும் வேறுபட்ட காலநிலைகளைக் கொண்டுள்ளது அவையாவன: இளவேனில், கோடை, இலையுதிர், குளிர் மற்றும் மழைக்காலங்கள் என்பனவாகும். கோடைகாலம் (மே முதல் ஜூன் வரை நீடித்திருக்கும்) மிகக்குறைவான காலப்பகுதியாகும், இக்காலகட்டத்தில் அரிதாக கடக்கக்கூடிய அதிகபட்ச வெப்பநிலை 25 °C (77 °F) ஆகும். ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலம் செறிவான கனமழைக்குரிய பண்பைக்கொண்டதாகும். இதன் காரணமாக அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள், டார்ஜீலிங்கை நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டித்துவிடுகிறது. குளிர்காலத்தில் மிதமான வெப்பநிலை காணப்படுகிறது5–7 °C (41–45 °F). எப்பொழுதாவது வெப்பநிலையானது உறைநிலைக்கு கீழே வரும்; பனிப்பொழிவு அரிதாக காணப்படும். மழை மற்றும் குளிர்காலங்களில், டார்ஜீலிங் அடிக்கடி உறைபனி மற்றும் மூடுபனி போர்த்தியது போல் காணப்படும். இதன் ஆண்டு சராசரி வெப்பநிலையானது12 °C (54 °F); இதன் மாத சராசரி வெப்பநிலைகளில் இருந்து பெறப்படுகிறது5–17 °C (41–63 °F).[20] இதன் சராசரி ஆண்டு வீழ்படிவு 281.8 செ.மீ. (110.9 அங்குலம்) ஆகும், மிக அதிகபட்சமான வீழ்படிவு ஜூலை மாதத்தில் பதிவானது (75.3 செ.மீ. அல்லது 29.6 அங்குலம்) ஆகும்.[20]
நகர நிர்வாகம்
டார்ஜீலிங் நகரமானது டார்ஜீலிங் நகராட்சியையும், அதன் பட்டபாங்க் தேயிலை தோட்டத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது.[21] 1850 ஆம் ஆண்டில் நிறுவிய, டார்ஜீலிங் நகராட்சி அந்நகரம் சார்ந்த பகுதிகளின்10.60 km2 (4.09 sq mi) நகர நிர்வாகத்தை பாதுகாத்து வருகிறது.[21] இந்த நகராட்சி டார்ஜீலிங் நகரத்தினுடைய 32 வட்டங்களின் ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுத்த நகர்மன்ற உறுப்பினர்களையும் அத்துடன் மாநில அரசு தேர்ந்தெடுத்த சில உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. நகராட்சியின் மன்றஉறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர்களிலிருந்து ஒருவரை அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கின்றனர்;[4] இந்த அவைத்தலைவரே நகராட்சியின் செயற்குழு தலைவராகவும் இருப்பார். கூர்கா தேசிய விடுதலை முன்னணி (GNLF) தற்பொழுது நகராட்சி அதிகாரத்தில் உள்ளது. டார்ஜீலிங் மாவட்டத்தினுடைய கூர்கா-ஆதிக்கம் நிறைந்த மலைப்பகுதிகள் அனைத்தின் அதிகார எல்லையும், 1988 ஆம் ஆண்டிலிருந்து அப்பொழுது உருவான டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பினுடைய வரம்பின் கீழ் அமைந்துள்ளது. DGHC ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மலைப்பகுதியின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட சில அலுவல்களை நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் வழங்கப்பெற்றுள்ளது. இந்த நகரம் டார்ஜீலிங் மக்களவை தொகுதியுடன் இணைந்துள்ளது மற்றும் இங்கிருந்து ஒரு உறுப்பினர் இந்தியப் பாரளுமன்றத்தின் மக்களவைக்கு (கீழ் அவை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[22]
இங்கிருந்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவையின், விதான் சபைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் ஜஸ்வந்த் சிங் வெற்றிபெற்றார், அதற்கு முன்பாக 2006 தேர்தலில் மாநில சட்டசபைக்கான இடத்தை GNLF வெற்றி பெற்றது. டார்ஜீலிங் நகரம் மாவட்ட காவல்துறையின் (இது மாநில காவல்துறையின் ஒரு பகுதியாகும்) அதிகார வரம்பின் கீழ் அமைந்துள்ளது; ஒரு துணை காவல் பொது ஆய்வாளர் நகரத்தின் பாதுகாப்பு மற்றும் சட்ட அலுவல்களை மேற்பார்வையிடுகிறார். டார்ஜீலிங் நகராட்சி பகுதியின் இரண்டு காவல்நிலையங்கள் டார்ஜீலிங் மற்றும் ஜோர்பன்களோ ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.[23]
Remove ads
பிற பயனுள்ள சேவைகள்
டார்ஜீலிங்கின் பெரும்பான்மையான நீர் தேவைகளை இயற்கை நீர்ஊற்றுகள் வழங்குகிறது. நகரத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் (அல்லது 6.2 மைல்கள் (10.0 km) தென்கிழக்கில்) அமைந்த சென்சால் ஏரியில் சேமித்து, அங்கிருந்து குழாய்கள் மூலம் நகரத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. வறட்சிக்காலங்களில், நீர் பற்றாக்குறையின் பொழுது, அருகிலுள்ள சிறிய கோன்ங் கோலா என்னும் வற்றாத நீரோடையிலிருந்து தண்ணீர் குழாய்கள் மூலம் உறிஞ்சி வழங்கப்படுகிறது. இருப்பினும் நீர்வழங்கலுக்கும் மற்றும் அதன் தேவைக்கும் இடையே ஒரு நிதானமான இடைவெளி நிலவுகிறது; நகரத்தின் 50% குடியிருப்புகள் நகராட்சி நீர்வழங்கல் முறையில் இணைந்துள்ளன.[4] இந்நகரம் பாதாளச்சாக்கடை திட்டத்தின் மூலம் வீடுகளிலிருந்தும் பிற ஐம்பது சமூக கழிப்பிடங்களிலிருந்தும் பெற்ற கழிவுகளை ஆறு மையக் கழிவுதொட்டிகள் மூலம் சேகரித்து இறுதியாக ஜோராஸ் (நீர்வழிகள்) என்னும் இயற்கை நீர்நிலை வழியாக வெளியேற்றுகிறது; சாலையோர வடிகால்கள் மூலமும் கழிவுகள் வெளியேறுகிறது. டார்ஜீலிங் நகராட்சி தினமும் 50 டன்கள் (110,200 lb) திடக்கழிவுகளைப் அருகிலுள்ள அப்புறப்படுத்தும் தளங்கள் மூலம் வெளியேற்றுகிறது.[4]
மின்சாரம் மேற்குவங்க மாநில மின்வாரியம் வழங்குகிறது. மேற்குவங்க தீயணைப்பு துறை நகரத்திற்கான அவசரகால சேவைகளையும் வழங்குகிறது. இந்நகரம் அடிக்கடி மின் தடையாலும், நிலையில்லாத மின்னழுத்தத்தாலும் பாதிப்படைகிறதால், அநேக வீடுகளில் மின்னழுத்த நிலைப்படுத்திகளை பரவலாக பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் அனைத்து துவக்கப்பள்ளிகளையும் தற்பொழுது டார்ஜீலிங் கூர்கா தன்னாட்சி மலை அமைப்பு நிர்வகிக்கிறது. நகராட்சியை சுற்றிலும் உள்ள படிவழிகள் உள்ளிட்ட அனைத்து வகையான சாலைகளின் மொத்த நீளமும் நகராட்சியுடன் இணைந்துள்ளது;90 km (56 mi) இவற்றை நகராட்சி நிர்வகிக்கிறது.[4]
Remove ads
பொருளாதாரம்

டார்ஜீலிங்கின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறையும், தேயிலை உற்பத்தியும் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கிறது. டார்ஜீலிங் தேயிலை வகைகளில் கருப்பு தேயிலை மிகவும் புகழ் பெற்றதாகும்,[3] குறிப்பாக ஐக்கிய இராச்சியம் மற்றும் முந்தைய பிரித்தானிய நாடுகளில் பிரபலமானதாகும். தற்பொழுது தேயிலை சந்தையில் சமீப ஆண்டுகளில் இந்தியாவின் பிற பகுதிகளான நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து கடும் போட்டி நிலவிவருகிறது..[24] பரவலாகக் காணப்படும் தொழிலாளர் பிரச்சினைகள், வேலைநிறுத்தம், தேயிலை தோட்டங்கள் மூடப்படுதல் ஆகியவை முதலீடு மற்றும் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளது.[25] பல்வேறு தேயிலை தொழிற்சாலைகள் தொழிலாளர் கூட்டுறவு முறையில் இயங்கினாலும், எஞ்சியவை சுற்றுலாப்பயணிகளின் உறைவிடங்களாக மாறிவருகின்றன.[25] தேயிலை தோட்டங்களில் 60% க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெண்களாகும்.
மாவட்டத்தின் காடுகள் மற்றும் பிற இயற்கை வளங்களை பெருகிவரும் மக்கள்தொகை வெகுவாக பாதித்துள்ளது.[21] சுதந்திரத்திற்குப் பிறகு இந்நகரம் கல்வி, தொடர்புத்துறை மற்றும் விவசாயம் ஆகியவற்றில் கணிசமான வளர்ச்சியை அடைந்துள்ளது, குறிப்பாக உருளைக்கிழங்கு, ஏலக்காய், இஞ்சி, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு பணப்பயிர்களும் உற்பத்தியாகின்றன. நகரத்தை சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக படிமுறை சரிவுகளில் பயிரிடுதல் வழங்குகிறது, இதன் மூலமாகவும் நகரத்திற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் கிடைக்கிறது.[சான்று தேவை]
கோடை மற்றும் இளவேனிற் காலங்கள் சுற்றுலா பயணிகளிடையே மிகுந்த புகழ்பெற்றதாகும், இதன்மூலம் அநேக டார்ஜீலிங் மக்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர், பலர் உணவுவிடுதிகளில் பணியாற்றி சம்பாதிக்கின்றனர். அநேக மக்கள் சுற்றுலா நிறுவனங்களின் வழிகாட்டிகளாக பணியாற்றி பொருளீட்டுகின்றனர்.[சான்று தேவை] டார்ஜீலிங் பாலிவுட் மற்றும் வங்காளி திரைப்படத்தளமாகவும் புகழ்பெற்றுள்ளது. ஆராதனா (1969) படத்தின் மேரே சப்னோ கி ராணி என்னும் பாடல் ராஜேஷ் கண்ணா மற்றும் ஷர்மிளா தாகூர் ஆகியோர் நடிக்க டார்ஜீலிங் இமாலயன் இரயில்வேயில் படமானது. சத்யஜித்ரே படமான கன்சென்ஜுங்கா (1962) இங்கு படமானது, அவரது 'ஃபெலுடா தொடர்கள்', கதை, டார்ஜிலிங் ஜோம்ஜோமாட் (டார்ஜிலிங்கின் ராஸல் டாஸல்) ஆகிய படங்களும் இந்நகரத்தில் படமானது. சமீப காலத்தில் ஷாருக் கான் நடித்த மே ஹூ நா படமும் இங்கு படமானது. மாவட்ட தலைநகரான டார்ஜிலிங்கில் பலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். வங்காளம், சிக்கிம், திபெத் ஆகிய பழமையான கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களை பேணுவதன் மூலமும் மக்கள் சம்பாதிக்கிறார்கள்.[சான்று தேவை]
Remove ads
போக்குவரத்து

சிலுகுரி யிலிருந்து டார்ஜீலிங் நகரத்தின் 50 மைல்கள் (80 கி.மீ) தொலைவைடார்ஜீலிங் இமாலயன் இரயில்வே மூலம் அடையலாம், அல்லது இரயில் பாதையை தொடர்ந்து வரும் ஹில் கார்ட் சாலை (தேசிய நெடுஞ்சாலை 55) வழியாகவும் செல்லலாம். டார்ஜீலிங் இமாலயன் இரயில்வே ஒரு 60 cm (24 அங்) குற்றகலப்பாதை இரயில்வே ஆகும். 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ இந்த இடத்தை உலக பாரம்பரியம் மிக்க இடம் என அறிவித்துள்ளது. உலகிலேயே இந்த பெருமையை பெற்ற இரண்டாவது இரயில்வே இதுவே. முறையான பேருந்து சேவைகள், வாடகை வண்டிகள் ஆகியவை டார்ஜீலிங், சிலிகுரி யுடன் அதன் அருகமைந்த நகரங்களான குர்சியாங், கலிம்போன்ங், கங்டாக் ஆகிய நகரங்களை இணைக்கிறது.லேண்ட் ரோவர் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள், அப்பகுதியின் செங்குத்தான சரிவுகளில் பயணிக்க எளிமையாக இருப்பதால் போக்குவரத்துக்கு புகழ்பெற்றவையாக உள்ளன. இருப்பினும், மழைக்காலங்களில் ஏற்படும் நிலச்சரிவுகள் காரணமாக சாலை மற்றும் இரயில்பாதை தொடர்புகள் அடிக்கடி இடையூறுக்கு உள்ளாகின்றன. டார்ஜீலிங்கிற்கு அருகமைந்த சிலுகுரிக்கு, மிக அருகாமையிலேயே பாக்டோரா விமானநிலையம் உள்ளது.93 km (58 mi) இந்தியன் ஏர்லைன்ஸ், ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் ரெட் ஆகிய மூன்று முக்கிய விமான சேவை நிறுவனங்கள் டார்ஜீலிங்குடன் டெல்லி, கல்கத்தா, குவகாத்தி ஆகிய நகரங்களை இணைக்கிறது. இதன் அருகமைந்த மிகப்பெரிய இரயில்நிலையம் நியூ ஜல்பைகுரி இரயில்நிலையம் ஆகும், இது பெரும்பாலும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களையும் இணைக்கிறது. நகரத்துக்குள் அமைந்த இடங்களுக்கு, வழக்கமாக மக்கள் நடந்தே செல்கின்றனர். வசிப்பிடங்களில் உள்ளோர் குறைந்த தூர பயணத்திற்கு மிதிவண்டி, இருசக்கர வாகனம் அல்லது வாடகை தானுந்துகள் மூலம் பயணிக்கின்றனர். டார்ஜீலிங் கயிற்றுப்பாதை 1968 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை இயங்கியது, ஒரு விபத்தில் நான்கு பேரின் உயிரிழபிற்குப்பிறகு நின்றுவிட்டது.[26][27]
Remove ads
மக்கள்தொகை
டார்ஜீலிங் நகர்ப்புற தொகுதி (இது பட்டபோங் தேயிலை தோட்டத்தையும் உள்ளடக்கியது), 109,163 மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பாகும், இதன் நகராட்சி பகுதியில் உள்ள மக்கள் தொகை 107,530 ஆகும். இந்நகரத்திற்கு ஒவ்வொரு நாளும் வந்து செல்லும் மக்கள், குறிப்பாக சுற்றுலா பயணிகளை உள்ளடக்கிய மக்கள்தொகை சராசரியாக 20,500 - 30,000 ஆகும்.[4] இதன் நகராட்சி பகுதியின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு கி.மீ2 பரப்பளவுக்கு 10,173 பேர் ஆகும்.[21] இதன் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,017 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது,[21] இது தேசத்தின் சராசரி விகிதமான 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்கிற விகிதத்தை விட உயர்ந்ததாகும்.[28] இங்குள்ள மிகப்பெரிய சமயங்களாக முறையே இந்து, பௌத்தம் மற்றும் கிறித்துவம் ஆகிய சமயங்கள் உள்ளன.[29] மக்கள்தொகையில் பெரும்பான்மையினராக நேபாளத்தை பின்னணியாகக் கொண்ட கூர்கா இனத்தினர் உள்ளனர். உள்நாட்டு இனக்குழுக்களில் டமாங்குகள், லெப்சாக்கள், பூட்டானியர்கள், ஷெர்பாக்கள், நியூவர்கள் ஆகியோர் அடங்குவர். டார்ஜீலிங்கில் வசிக்கும் பிற சமூகத்தினர்களில் மார்வாரிகள், ஆங்கிலோ-இந்தியர்கள், சீனர்கள், பீஹாரிகள், திபெத்தியர்கள், வங்காளியர்கள் ஆகியோர் அடங்குவர். மக்கள் பெரும்பான்மையாக நேபாளி, இந்தி, பெங்காலி, ஆங்கிலம் மொழிகளில் பேசுகிறார்கள்.[30]
டார்ஜீலிங் கடந்த நூற்றாண்டில், குறிப்பாக 1970 ஆம் ஆண்டுகளில் கணிசமான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்துள்ளது. 1990 ஆம் ஆண்டுகளில் இதன் ஆண்டு வளர்ச்சி விகிதம் 45% ஆக உயர்ந்தது, இது தேசிய, மாநில, மாவட்ட சராசரி விகிதங்களை விட அதிகமானதாகும்.[4] இந்த நகரம் துவக்கத்தில் 10,000௦௦௦௦ மக்கள்தொகை இலக்கை கணக்கில் கொண்டு வடிவமைத்தது. இதன் தொடர்ச்சியான வளர்ச்சி பரந்த உள்கட்டமைப்புத் தேவைகளையும் சுற்றுச்சூழல் சிக்கல்களையும் உருவாக்கியுள்ளது. இப்பகுதியின் நில அமைப்பு வரையறைகளை மிஞ்சிய நிலையற்ற இயற்கைசூழல் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்படையக்கூடிய இடமாக உள்ளது.[4] இப்பகுதியை சுற்றியுள்ள மலைகள் தம் பண்பிழத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள், சுற்றுலாத் தலமாக விளங்கும் டார்ஜீலிங்கின் அழகை வெகுவாக பாதித்துள்ளது.[18]
Remove ads
கலாச்சாரம்



மக்கள் தீபாவளி, கிறிஸ்துமஸ், தசரா, ஹோலி பண்டிகைகளை கொண்டாடுகின்றனர், இவை தவிர்த்து பல்வேறு இனஞ்சார்ந்த தனித்துவம் வாய்ந்த உள்ளூர் விழாக்களையும் கொண்டாடுகின்றனர். லெப்சாக்களும், பூட்டானியர்களும் ஜனவரி மாதத்தில் புத்தாண்டை வரவேற்கின்றனர், திபெத்தியர்கள் தங்கள் புது வருடத்தை (லோசர் ) ”பேயாட்டாம்” என்கிற ஆட்டத்துடன் பிப்ரவரி-மார்ச்சில் கொண்டாடுகின்றனர். மகா சங்கராந்தி, ராம நவமி, சோட்ரூல் டுயுசென், புத்த ஜெயந்தி, தலாய்லாமாவின் பிறந்தநாள், டென்டாங் லகோ ரம்ஃபாட் போன்ற பிற விழாக்களுள், சில உள்ளூர் கலாச்சாரத்தோடு பொருந்தக்கூடிய சில விழாக்கள் இந்தியாவின் பிற பகுதிகளாகிய நேபாளம், பூடான் மற்றும் திபெத்தியர்களின் கலாச்சாரத்தோடு தொடர்புடைய விழாக்களாகவும் விளங்குகின்றன. டார்ஜீலிங் களியாட்டம் விழா டார்ஜீலிங் முனைப்பாளர்கள் குடியுரிமை சமூக இயக்கத்தால் துவங்கப்பெற்றது, ஒவ்வொரு ஆண்டின் குளிர்காலத்திலும் நடைபெறும் பத்து நாள் கொண்டாட்டங்களில் டார்ஜீலிங் மலைகளின் கலாச்சார பாரம்பரியத்துடன் அவர்களுடைய உயர்தரமான இசையை மையமாகக் கொண்ட உயர்தரமான சித்திரப்பட நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.[31]
டார்ஜீலிங்கின் புகழ்பெற்ற உணவு மோமோ ஆகும், இது பன்றியிறைச்சி, மாட்டிறைச்சி, காய்கறிகள் உள்ளடக்கிய பூரணத்தை பிசைந்த மாவு கொண்டு நீராவியில் வேகவைத்து கொழுக்கட்டை போன்று சமைக்கப்படும், பின்னர் இது நீர்போன்ற சூப்புடன் பரிமாறப்படுகிறது. முன்பே சமைத்த நூடுல்ஸை அடைத்த சிற்றுண்டி வகை வை-வை பொதியிலிருந்து அப்படியே சாப்பிடுவதற்கும் அல்லது சூப் வடிவில் சாப்பிடுவதற்கும் உரியதாகும். சுர்பீ எனப்படும் கடினமான பாலடைக்கட்டியானது பசுக்கள் அல்லது யாக் மாடுகளின் பாலிலிருந்து தயாரித்தது, மென்று தின்பதற்கு உகந்ததாகும். துக்பா என்றழைக்கப்படும் நூடுல்ஸ் உணவு, சூப் வடிவில் பரிமாறப்படுவது, டார்ஜீலிங்கில் புகழ்பெற்றதாகும். "ஆலு டம்" என்பது புகழ்பெற்ற சிற்றுண்டி வகையாகும், இது உருளைக்கிழங்கினை வேகவைத்து மிளாகாய் தூள், உணபதற்குரிய நிறம், மஞ்சள்தூள் ஆகியவற்றினை சேர்த்து வளமூட்டப்பெற்று சாறுடன் கூடிய கெட்டியான குழம்பாகவோ அல்லது சில நேரம் நீர்த்ததாகவோ சமைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஆச்சார் மற்றும் உருளைகிழங்கு வற்றல் அல்லது பிற சிற்றுண்டிகளுடன் சாப்பிடுவதாகும். சுற்றுலா பயணிகளுக்கான பல்வேறு வகை உணவினை வழங்குவதற்கென்றே இந்திய, பன்னாட்டளவிலான, சீன சமையல் பாரம்பரியமுடைய உணவுவிடுதிகள் மிகுதியான எண்ணிக்கையில் இங்கு அமைந்துள்ளன. புகழ்பெற்ற டார்ஜீலிங் தேயிலை தோட்டங்களில் இருந்து தயாரிக்கப்படும் தேநீர் மிகச்சிறந்த பானம் ஆகும். அதுபோல காபியும் சிறந்த பானமாகும். ”ரக்ஷி”, ஜஹாத், டோங்பா” "ஷாங்" ஆகியவைகளும் மக்கள் விரும்பும் பானங்களாகும். இவை அனைத்தும் உள்ளூரிலேயே கிடைக்கும் பானங்களாகும். ஷாங், சாமை என்னும் தினையிலிருந்து தயாரித்த உள்ளூர் பீர் வகையாகும்.
டார்ஜீலிங்கின் பெரும்பாலான கட்டிடங்கள் குடியேற்ற கட்டிடக்கலை பண்புகளைக் கொண்டுள்ளது; பெரும்பாலான மோக் தியோடர் குடியிருப்புகள், கோதிக் தேவாலயங்கள், ராஜ்பவன் (ஆளுநர் மாளிகை), தோட்டக்காரர்கள் மன்றம் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இவற்றிற்கு உதாரணங்களாகும். புத்த மடங்கள் அடுக்குத் தூபி முறை கட்டிடக்கலையை பிரதிபலிக்கின்றன. டார்ஜீலிங் இசைக்கலைஞர்களும் இசை ஆர்வலர்களும் மிக்கமதிக்கும் இசை மையமாகவும் திகழ்கிறது. இங்கு வாழும் மக்களின் பொதுவான பொழுதுபோக்கு பாடுதல் மற்றும் இசைக்கருவிகளை இசைத்தலாகும், இவர்கள் தங்கள் கலாச்சார வாழ்வில் இசையின் பங்கு மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் நிறைந்தவர்கள் ஆவார்கள்.[32]
Remove ads
கல்வி
மாநில அரசும், தனியார் நிறுவனங்களும், சமைய நிறுனங்களும் இயக்கும் பல கல்வி நிறுவனங்கள் டார்ஜீலிங்கில் உள்ளன. பள்ளிகளில் முக்கிய பயிற்று மொழிகளாக ஆங்கிலம் மற்றும் நேபாளி மொழிகள் உள்ளன, அவற்றுடன் தேசிய மொழியான இந்தியும் அதிகாரபூர்வ மாநில மொழியான வங்காளியும் வழங்குகின்றன. இந்த பள்ளிகள் ICSE, CBSE அல்லது மேற்குவங்க இடைநிலைக்கல்வி வாரியத்துடன் இணைக்கப்பெற்றுள்ளன. பிரித்தானிய இந்தியாவின் கோடைகால பாதுகாப்பிடமாக டார்ஜீலிங் விளங்கியதால், அக்காலத்திலேயே டார்ஜிலிங் ஈடன், ஹார்ரோவ் மற்றும் ருக்பி போன்ற பள்ளிகளை மாதிரியாகக்கொண்ட பொதுப்பள்ளிகள் நிறுவப்பெற்று அவற்றில் பிரித்தானிய அதிகாரிகளின் குழந்தைகள் பெறுவதற்குரிய தனிச்சிறப்பான கல்வியும் வழங்கப்பட்டது. இங்குள்ள கல்வி நிறுவனங்களான புனித. ஜோசப் கல்லூரி (பள்ளித் துறை), லாரிடோ கான்வென்ட், புனித பால்ஸ் பள்ளி, மவுண்ட் ஹார்மன் பள்ளி ஆகியவை தலைசிறந்த கல்வியளிக்கக்கூடிய புகழ்பெற்ற மையங்களாகும்.[33] டார்ஜீலிங்கில் உள்ள தங்கும் வசதியுடன் கூடிய மூன்று கல்லூரிகளான—புனித ஜோசப் கல்லூரி, லாரிடோ கல்லூரி, சாலெசியன் கல்லூரி ஆகியனவும், டார்ஜீலிங் அரசு கல்லூரி—ஆகிய அனைத்தும் சிலுகுரியில் உள்ள வடக்குவங்க பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பெற்றுள்ளது.
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads