ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (சென்னை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் (Jawaharlal Nehru Stadium) சென்னையில் சென்னை மூர் சந்தை வளாகத்திற்குப் பின்புறம் அமைந்துள்ள ஓர் விளையாட்டரங்கமாகும். இது 40,000 இருக்கைகள் கொண்ட அரங்கமாகும். இங்கு கால்பந்து, தட கள விளையாட்டுக்கள் நிகழ்கின்றன. இந்த விளையாட்டரங்கத்திற்கு இந்தியாவின் முதல் பிரதமராக விளங்கிய ஜவஹர்லால் நேரு நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[1][2][3]

விளையாட்டரங்கம் பூங்காநகர் பகுதியில் சைடென்ஃகாம் சாலையில் ரிப்பன் கட்டிடத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளது.
Remove ads
உள் விளையாட்டரங்கு
இவ்வளாகத்தில் 8000 இருக்கைகள் கொண்ட உள்விளையாட்டரங்கமும் உள்ளது. இங்கு கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் நிகழ்கின்றன. விளையாட்டுக்கள் இல்லாத பருவங்களில் பல திரைப்பட கலைஞர்கள் கலந்துகொள்ளும் பல்சுவை நிகழ்ச்சிகளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் புதுப்பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடத்த வாடகைக்கு விடப்படுகிறது.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads