ஜாக் மாரித்தேன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாக் மாரித்தேன் (Jacques Maritain, 18 நவம்பர் 1882 – 28 ஏப்ரல் 1973) என்பவர் பிரான்சு நாட்டைச் சார்ந்த புகழ்மிக்க கத்தோலிக்க மெய்யியலார் ஆவார். முதலில் சீர்திருத்தத் திருச்சபையைச் சார்ந்தவரான மாரித்தேன் பின்னர் 1906ஆம் ஆண்டு கத்தோலிக்க கிறித்தவராக மாறினார்.
Remove ads
சாதனைகள்
மாரித்தேன் அறுபதுக்கும் மேலான நூல்கள் எழுதி வெளியிட்டார். புனித தாமஸ் அக்குவைனாஸ் வகுத்த மெய்யியலின் மறுமலர்ச்சிக்கு இவர் பெரிதும் காரணமானார்.
இவர் உலக மனித உரிமைகள் சாற்றுரை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தார்.
திருத்தந்தை ஆறாம் பவுலுக்கு ஜாக் மாரித்தேன் நீண்டகால நண்பராகவும் ஆசானாகவும் விளங்கினார். 1962-1965இல் நடந்தேறிய இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் முடிவில் விடுக்கப்பட்ட செய்திகளுள் ஒன்றான "சிந்தனையாளர்கள் மற்றும் அறிவியலாளர்களுக்குச் செய்தி" என்னும் ஏட்டினை திருத்தந்தை ஆறாம் பவுல் வழங்கியபோது அதைப் பெற்றுக்கொண்டவர் மாரித்தேன் ஆவார்.[1]
மாரித்தேன் மெய்யியல் தவிர வேறு பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். அழகியல், அரசியல் கோட்பாடு, அறிவியல் மெய்யியல், மீவியற்பியல், கல்வி, வழிபாட்டியல், திருச்சபையியல் போன்ற பல துறைகளில் அவர் பங்களித்துள்ளார்.
Remove ads
வரலாறு
மாரித்தேன் பாரிசு நகரில் பிறந்தார். அவருடைய தந்தை பவுல் மாரித்தேன், தாய் ஜெனிவியேவ் ஃபாவர் ஆகியோர் சுதந்திர புராட்டஸ்டாண்டு சபையைப் பின்பற்றினர். எனவே அச்சபை உறுப்பினராக ஜாக் மாரித்தேன் வளர்ந்தார். பள்ளிப்படிப்புக்குப் பின் ஜாக் மாரித்தேன் பாரிசு நகர சோர்போன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்றார். அங்கு அவர் இயற்கை அறிவியல்கள், வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றார்.
சோர்போன் பல்கலைக்கழகத்தில் பயின்ற காலத்தில் மாரித்தேன் தமது பிற்கால மனைவியான ரெயிசா ஊமான்சோஃப் என்பவரைச் சந்தித்தார். ரெயிசா யூத இனத்தவர். உருசியாவிலிருந்து பிரான்சுக்கு இடம் பெயர்ந்தவர். அவர் புகழ்பெற்ற புலவராகவும், ஆன்மிக ஆர்வம் உடையவராகவும் விளங்கினார்.
மாரித்தேனின் வாழ்க்கையில் ரெயிசா முக்கியப் பங்குவகித்தார். உண்மையைத் தேடுவதில் அவர் மாரித்தேனுக்குத் துணையாளராக மாறினார். ரெய்சாவின் சகோதரி வேரா ஊமான்சோஃப் என்பவரும் அவரோடு கூடவே மாரித்தேனின் வீட்டில் வாழ்ந்துவந்தார்.
Remove ads
கத்தோலிக்க கிறித்தவராக மாறுதல்
சோர்போன் பல்கலைக்கழகப் படிப்புக் காலத்தில் ஜாக் மாரித்தேனும் அவருடைய துணைவர் ரெயிசாவும் தங்கள் படிப்பில் நிறைவு அடையவில்லை. அறிவியல் மட்டுமே மனிதரின் வாழ்க்கைக்குப் பொருள் தராது என்றுணர்ந்த அவர்கள் 1901இல் ஓராண்டுக் காலத்தில் வாழ்க்கையின் ஆழ்பொருளைக் கண்டுபிடிக்க இயலாவிட்டால் இணைந்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்றுகூட எண்ணினர்.
அப்போது சார்லஸ் பெகீ என்னும் சிந்தனையாளரின் தூண்டுதலால் ஜாக் மாரித்தேனும் ரெயிசாவும் ஹென்றி பெர்க்சன் என்னும் மெய்யியலார் பிரான்சு கல்லூரியில் வழங்கிய உரைத்தொகுப்பைக் கேட்டனர். பெர்க்சன் அறிவியலால் மட்டுமே மனித வாழ்க்கைகுப் பொருள் தர இயலாது என்னும் கருத்தை விளக்கமாக எடுத்துரைத்தார். தெளிவுபெற்ற ஜாக் மாரித்தேனும் ரெயிசாவும் வாழ்க்கைக்குப் பிடிப்புத் தருகின்ற பரம்பொருள் தமக்கும் ஒளியாக இருப்பதை உணர்ந்தார்கள். லியோன் ப்ளாய் என்னும் சிந்தனையாளர் அளித்த ஊக்கத்தைத் தொடர்ந்து 1906இல் ஜாக், ரெயிசா மாரித்தேன் இருவரும் கத்தோலிக்க கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள்.
மாரித்தேனின் கூற்றுகள்
- "Vae mihi si non Thomistizavero" [Woe to me if I do not Thomisticize].[2]
- "Je n’adore que Dieu" [I adore only God].
- "The artist pours out his creative spirit into a work; the philosopher measures his knowing spirit by the real."
- "I do not know if Saul Alinsky knows God. But I assure you that God knows Saul Alinsky."
- "We do not need a truth to serve us, we need a truth that we can serve"
குறிப்புகள்
மாரித்தேன் எழுதிய நூல்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads