அரிசுட்டாட்டில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அரிசுட்டாட்டில் (ஆங்கிலம்: Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல்(தருக்கம்), சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும். பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், அளவையியல், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிசுட்டாட்டில் கோட்பாட்டின் ஒரு நீட்சியே ஆகும்.[சான்று தேவை] அரிசுட்டாட்டிலின் நோக்கீடுகள்(அவதானிப்புகள்) விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.

பிளாட்டோவும் அரிசுட்டாட்டிலும், சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்க மெய்யியலாளர்களாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய ரிசுட்டாட்டிலின் சீடர் ஆவார். அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது.[சான்று தேவை] அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் "முதல் ஆசிரியர்" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், எபிரேயம், செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
Remove ads
வாழ்க்கை

அரிசுட்டாட்டில் என்றால் "சிறந்த நோக்கம்," என்று பொருளாகும்.இவர் பண்டைய சுத்தாகிரா நகரத்தில் செல்சிதிசிலில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெசாலோனிகியில் இருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிக்கோமாக்கசு, மாசிதோனியாவின் மன்னர் அமயிந்தாசின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார். அரிசுட்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாசிதோனிய மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பதினெட்டு வயது நிரம்பிய அரிசுட்டாட்டில் பிளேட்டோவின் கல்விக்கழ்கத்தில் சேர்ந்து கல்வி பயில ஏதென்சுக்குச் சென்றார்.
அரிசுட்டாட்டில் கி.மு. 348/47 இல் ஏதென்சை விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிசுட்டாட்டில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் ஆசியா மைனருக்கு பயணத்தை மேற்கொண்டார். பயணத்தின்போது இலெசுபோசு என்னும் தீவின் விலங்கியல், தாவரவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அரிசுட்டாட்டில் எர்மியாசின் வளர்ப்பு மகள் பிதியாசைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிசுட்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிதோனிய மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க, அவரது மகன் அலெக்சாந்தருக்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிசுட்டாட்டில் மாசிதோனியா அரசு கல்விக்கழக்த்தின் தலைவராக அமர்த்தப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்சுக்குத் திரும்பினார், அங்கு இலைசியம் எனப்பட்ட தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிசுட்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு அப்பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய்யியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்சு நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிசுட்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்சில் அரிசுட்டாட்டில் இருந்த போது, அவரது மனைவி பிதியாசு இறந்தார்.அரிசுட்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்சில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்சாந்தர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயாவில் அரிசுட்டாட்டிலும் இறந்தார். அரிசுட்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் தன்னைத் தன் மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிசுட்டாட்டில்.
அலெக்சாந்தர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஓர் அறிவியலளர் தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும். ஆனால்,அலெக்சாந்தருடன் அரிசுட்டாட்டில் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிசுட்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசத் துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிசுட்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டார். அரிசுட்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்சு மக்களும் அவரை நம்ப மறுத்தனர்.அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.
அலெக்சாந்தர் இறந்த பின்பு மாசிதோனிய அரசியல் நிலைமை மாறியது. மாசிதோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்கட்டிலில் ஏறினர் . ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு நஞ்சு கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிசுட்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார்.
நம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும்
- -அரிசுட்டாட்டில்
அரிசுட்டாட்டில், பிளேட்டோ,சாக்கிரட்டீசு ஆகிய மூவரும் ஆசிரியர் , மாணவர் உறவு பூண்டவர்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஓவியம் வாட்டிகன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது.
Remove ads
காட்சிசார் மெய்யியல்
அளவையியல் (தருக்கம்)
இந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: மாற்றுச் செவ்வியல் அளவையியல்.
அளவைநெறித் தொகை
இயற்பியல்
உயிரியல்
மகளிர் பற்றிய பார்வைகள்
அரிசுட்டாட்டில் மாந்தரின இனப்பெருக்கம் செயலற்ற, முடக்கநிலை பெண்பால் கூறுடன் உயிர்ப்புமிக்க ஆண்பால் கூறு இணைந்து நிகழ்வதாகக் கூறுகிறார். இந்த அடிப்படையில், பெண்ணிய மெய்யியலாளர்கள் அரிசுட்டாட்டிலைப் பாலியல் சம்னின்மைக்காக குறைகூறுகின்றனர்.[3][4] என்றாலும், அரிசுட்டாட்டில் தன் பேச்சுக்கலை நூலில் மகளிர் ம கிழ்ச்சிக்கும் ஆடவர் மகிழ்ச்சிக்கும் சமநிலை ஆதரவைத் தெரிவிக்கிறார்.[upper-alpha 2]
Remove ads
தகைமை
உருவகிப்புகள்
பல நூற்றாண்டுகளாக பல பெயர்பெற்ற கலைஞர்கள் அரிசுட்டாட்டிலின் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்; சிலைகளைச் செய்துள்ளனர். அவைகளில் உலூக்காசு கிரனச் முதுவல்,[6] யசுட்டசு வான் கெண்ட், இராபயேல், பாவொலோ வெரோனீசு, யூசெப்பே தெ இரேபேரா,[7] இரெம்பிராந்தித்,[8], பிரான்சிசுக்கோ ஆயேசு]] ஆகியோர் அடங்குவர் . இவற்றில் மிகச் சிறந்த கலைச் செம்மை வாட்டிகன் அரண்மனையில் அமைந்த இராபயேல் சுதையில் தீட்டிய ஏதென்சு பள்ளி (The School of Athens) படிமத்தைச் சொல்ல்லாம். இதில் பிளாட்டோவும் அரிசுட்டாட்டிலும் படிமத்தின் நடுவில் உள்ளனர். இது அவர்களின் சிறப்பு த்கைமையைச் சுட்டுகிறது[9] இரெம்பிராந்தித் செதுக்கிய ஓம்ர் சிலியுடன் உள்ள அரிசுட்டாட்டிலின் கலப்படைப்பும் பெரிதும் போற்றுதலுக்கு உரியதாகும்; இது பார்வையற்ற ஓமரின் சிலையுடன் மெய்யீயலாளர் அரிசுட்டாட்டில் காட்டப்பட்டுள்ளார்: க்லித் திறனய்வளரும் இதழியலாளரும் ஆகிய சொனாதன் சோன்சு பின்வருமாறு எழுதுகிறார். " இந்த வண்ண ஓவியம் உலகிலேயே மாபெரும் மருமப் படைப்பாக என்றென்றும் நிலவும்; இது எக்காலத்துக்கும் சுடரும் கருவண்ண அறிவுலகப் படைப்பாக உறுதியாக விளங்கும்."[10][11]
- வண்ண ஓவியங்கள்
- இடைக்கால அறிஞர் உடையில் அரிசுட்டாட்டிலைக் காலமுரணாகக் காட்டும் நியூரென்பெர்கு எடுத்துரைப்பு தாளில் வரைந்த நீர்வண, மை ஓவியம், 1493
- திரைச்சீலையில் யசுட்டசு வான் கெண்ட் நெய்வணத்தால் வரைந்த அரிசுட்டாட்டில் ஓவியம் அண். கிபி 1476
- பலகத்தில் உலூக்காசு முதுவல் நெய்வணத்தாஇ வரைந்த பில்லிசு, அரிசுட்டாட்டில் ஆகிய இருவரின் ஓவியம், 1530
- 1560 களில் திரைச்சீலையில் பவொலோ வெரோனீசு நெய்வணத்தால் வரைந்த அரிசுட்டாட்டில் ஓவியம், மார்சியானா நூலகம்.
- யூசெப்பெ இரிபேரா திரைச்சீலையில் நெய்வணத்தால் வரைந்த அரிசுட்டாட்டில், ரிபேரா ஓவியம். 1637
- நெய்வணத்தால் திரைச்சீலையில் இரெம்பிராந்தித் வரைந்த ஓமர் சிலையுடன் அரிசுட்டாட்டில், 1653
- யோகான் யாகோபு தோர்னர் முதுவல் திரைச்சீலையில் நெய்வணத்தால் வரைந்த அரிசுட்டாட்டில், 1813
- பிரான்சிசுக்கோ திரைச்சீலையில் நெய்வணத்தால் வரைந்த அரிசுட்டாட்டில் 1811
- சிலைகள்
- இலைசிப்போசு வடித்த மூல வெண்கலச் சிலையின் உரோமானிய முதலாம், இரண்டாம் நூற்றாண்டு மீளாக்கங்கள். இலவுரே அருங்காட்சியகம்
- கிரேக்க மூலத்தில் இருந்து கிபி 117-138 இல் மீளாக்கம் செய்த உரோமனியச் சிலைகள். பலெர்மோ வட்டார அருங்காட்சியகம்
- உலூசா தெல்லா உரோபியா வடித்த அரிசுட்டாட்டில், பிளாட்டோ உருவார்ப்புகள், புளோரன்சு தேவாலயம், 1437-1439
- வாழிடக் கற்சிலை, கிளாட்சுட்டோன் நூலகம், அவார்தன், வேல்சு, 1899
- வெண்கலச் சிலை, பிறைபர்கு பல்கலைக்கழகம், செருமனி, 1915
தகைமைப் பெயர்கள்
அண்டார்க்டிகாவின் மலைகளில் ஒன்று அரிசுட்டாட்டில் மலைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் முதன்முதலில் தனது வானிலையியல் நூலில் தென் உயர் அகலாங்குகளில் அமைந்த நிலப்பகுதியைக் கண்டறிந்து அதற்கு அண்டார்க்டிகா என்ப் பெய்ரிட்டார். நிலாவின் ஒரு குழிப்பள்ளத்துக்கு அரிசுட்டாட்டிலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.[12]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads