ஜான் நிசார் அக்தர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஜான் நிசார் அக்தர் (ஆங்கிலம்: Jan Nisar Akhtar) ( பிறப்பு:1914 பிப்ரவரி 18 - இறப்பு: 1976 ஆகஸ்ட் 19) இவர் 20 ஆம் நூற்றாண்டின் இந்திய கவிஞரான இவர் உருது கசல்கள் மற்றும் நாஜ்கள் மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தார். மேலும் பாலிவுட்டுக்கான பாடலாசிரியராகவும் இருந்தார்.

சி. ராம்சந்திரா, ஓ.பி. நய்யார், என் தத்தா மற்றும் கயாம் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், 151 பாடல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஏ.ஆர். கர்தரின் இயாசுமின் (1955), குரு தத்த்தின் சி.ஐ.டி (1956) , பிரேம் பர்பத் என்ற படத்தில் இடம்பெற்ற ஆன்கான் ஆய் ஆன்கான் மெய் (1974), இயே தில் அவுர் உங்கி நிகாகோன் கே சாயே மற்றும் நூரி படத்தில் இடம்பெற்ற ஆஜாரே (1979), கமல் அம்ரோகி இயக்கத்தில் வெளிவந்த இரசியா சுல்தான் படத்தில் (1983) இடம் பெற்ற அவரது கடைசி பாடல் ஏ தில்-இ-நாதன் போன்றவையாகும்.[1][2]

இவரது கவிதைப் படைப்புகளில் நசிர்-இ-பூட்டான், சலாசில், சாவிடான், பிச்சாலி பெகர், கர் அங்கன் மற்றும் காக்-இ-தில் ஆகியவை அடங்கும். பிந்தையது ("தி ஆஷஸ் ஆஃப் ஹார்ட்") ஒரு கவிதைத் தொகுப்பாகும். இதற்காக அவருக்கு இந்திய தேசியக் கடிதங்களின் சாகித்ய அகாடமி 1976 ஆம் ஆண்டு உருது மொழியில் சாகித்ய அகாடமி விருது வழங்கியது.[3]

Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை

அவர் 1914 இல், பிரித்தானிய இந்தியாவின் குவாலியரில், சுன்னி இறையியலாளர்கள், அறிஞர்கள் மற்றும் கவிஞர்கள் அடங்கிய ஒரு குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை முசுதர் கைராபாதி அவரது தந்தையின் அண்ணன் பிசுமில் கைராபாதியைப் போலவே கவிஞராக இருந்தார். அதே நேரத்தில் அவரது தாத்தா, இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் இறையியல் அறிஞரான பஸ்ல்-இ-கக் கைராபாதி, அவரது கோரிக்கையின் பேரில் மிர்சா காலிப்பின் முதல் திவானைத் திருத்தியுள்ளார். பின்னர் 1857 ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியின் போது தனது சொந்த ஊரான கைராபாத்தில் ஒரு முக்கியமான நபராக ஆனார்.

ஜான் நிசார் குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தனது பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1930 ஆம் ஆண்டில் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கிருந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றார். பின்னர்,அவர் தனது முனைவர் பணியைத் தொடங்கினார். ஆனால் குடும்ப நிலைமைகள் காரணமாக குவாலியருக்குத் திரும்ப வேண்டியிருந்தது.[4]

Remove ads

தொழில்

ஊர் திரும்பியதும், குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் உருது விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கிடையில், 1943 ஆம் ஆண்டில், அவர் அலிகர் முஸ்லிம் பலகலைக் கழகத்தின் பழைய மாணவியும், கவிஞர் மசாசு இலக்னாவியின் சகோதரியுமான சபியா சிராஜ்-உல் கக்கை என்பவரை மணந்தார். இவர்கள் மூலம் இவருக்கு இரண்டு மகன்களான ஜாவேத் மற்றும் சல்மான் முறையே 1945 மற்றும் 1946 இல் பிறந்தனர். குவாலியரில் நடந்த சுதந்திரத்திற்குப் பிந்தைய கலவரங்கள் அவரை போபாலுக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தின. அங்கு அவர் கமீதியா கல்லூரியில் உருது மற்றும் பாரசீகத் துறையின் தலைவராக சேர்ந்தார். பின்னர் அவரது மனைவி சபியாவும் அக்கல்லூரியில் சேர்ந்தார். விரைவில் அவர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தின் ஒரு பகுதியாக மாறினர். பின்னர் அவர் அந்த இயக்கத்தின் தலைவரானார்.

Remove ads

மேலும் படிக்க

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads