குவாலியர்

From Wikipedia, the free encyclopedia

குவாலியர்map
Remove ads

குவாலியர் (Gwalior) (இந்தி/மராத்தி: ग्वालियर ஒலிப்பு) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆக்ராவிற்கு தெற்கே 122 கிலோமீட்டர்கள் (76 mi) தொலைவிலும் மாநிலத் தலைநகர் போபாலிலிருந்து 423 கிலோமீட்டர்கள் (263 mi) வடக்கேயும் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நகரமும் இங்குள்ள கோட்டையும் பல வட இந்திய பேரரசுகளின் மையமாக விளங்கியுள்ளன. குவாலியர் நகரம் இதே பெயரிலுள்ள மாவட்டம் மற்றும் கோட்டத்திற்கு நிர்வாகத் தலைமையகமாக விளங்குகிறது.

விரைவான உண்மைகள்

குவாலியர் கோட்டை பலமுறை கைமாறியுள்ளது; எட்டாவது நூற்றாண்டில் டோமராக்களிடமிருந்து முகலாயர்களுக்கும் பின்னர் சிந்தியாக்களின் கீழ் மராத்தாக்களுக்கும் (1754) கைமாறி குறைந்த காலம் ஜான்சியின் லட்சுமி பாயிடமும் தாத்தியா டோப்பிடமும் பிரித்தானியர்களிடமும் இருந்தது.

இங்கு பல சிறப்புமிகு கல்விக்கூடங்கள் உள்ளன; இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மைக் கழகம் (IIITM), இந்திய சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைக் கழகம், சிந்தியா பள்ளி, மாதவ் தொழில்நுட்பம் மற்றும் அறிவியலுக்கான கழகம், இலட்சுமிபாய் தேசிய உடலியல் கல்வி நிறுவனம் ஆகியன இவற்றில் சிலவாகும்.

Remove ads

குறிப்பிடத்தக்க நபர்கள்

Remove ads

படக்காட்சியகம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads