ஜாம்நகர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாம்நகர் (Jamnagar, குசராத்தி: જામનગર) இந்திய மாநிலம் குசராத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஓர் மாநகராட்சியாகும். 1920களில் மகாராசா குமார் ஸ்ரீ ரஞ்சித்சிங்கால் பெரும்பாலும் கட்டப்பட்ட இந்த நகரம் துவக்கத்தில் நவநகர் என்று அழைக்கப்பட்டது. கட்ச் வளைகுடாவின் தெற்கே மாநிலத் தலைநகரம் காந்தி நகரிலிருந்து மேற்கே 337 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தியப் பாதுகாப்பிற்கு வாய்ப்புமிக்க தலமாக விளங்குவதால் இங்கு மூன்று படைத்துறைகளும் இருப்புக் கொண்டுள்ளன. அண்மையில் இந்தியாவின் பெரும் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஜாம்நகரின் மோட்டி காவ்டி பகுதியில் உலகின் மிகப்பெரும் பாறைநெய் தூய்விப்பாலையை நிறுவியப்பிறகு புகழ்பெற்றுள்ளது.[1] இதனையடுத்து வாடினார் பகுதியில் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனமும் தனது தூய்விப்பாலையை நிறுவியுள்ளது.[2] இக்காரணங்களால் இந்த நகரம் இந்தியாவின் எண்ணெய் நகரம் என அறியப்படுகிறது.

Remove ads
வெளியிணைப்புகள்
- Tourist information about Jamnagar
- Jamnagar Transport
- All info of Jamnagar
- Jamnagar formally known as Nawanagar பரணிடப்பட்டது 2018-03-09 at the வந்தவழி இயந்திரம்
- NavaNagarNa NarBanka பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம் and RajSattaNa Rang பரணிடப்பட்டது 2008-05-09 at the வந்தவழி இயந்திரம் - Books exploring History of Jamnagar
- Birds and Wildlife in Jamnagar பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்
- Images Gulf of Kutch Marine National Park in Jamnagar பரணிடப்பட்டது 2013-01-12 at Archive.today
- Nobat-The Daily Local Newspaper
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads