சாம்பவான்

From Wikipedia, the free encyclopedia

சாம்பவான்
Remove ads

சாம்பவான் (சமக்கிருதம்: जाम्‍बवान) ஜாம்பவான் இராமாயணம் முதலான இந்தியத் தொன்மங்களில் கரடிகளின் வேந்தனாகச் சித்தரிக்கப்படும் ஓர் கதாபாத்திரம் ஆகும்.[1] சில இடங்களில் இவர் குரங்குகள் குலமொன்றைச் சேர்ந்தவராகச் சுட்டப்படுகின்றார். "இரிட்சர்" எனும் இக்குலமானது, பிற்கால இராமாயணங்களில் கரடிகளின் குலமாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது.

Thumb
சாம்பவான்

தொன்மக்கதை

சில புராணங்கள், பாற்கடலைத் தேவாசுரர் கடைந்தபோது சாம்பவானும் அதில் உதவியதாகவும், திருமாலின் வாமன அவதாரத்தில் அவரை ஏழு தடவைகள் சுற்றிவந்தவராகவும் கூறுகின்றன.[1] இராமாயணத்தில், தான் யாரென்பதை மறந்திருந்த அனுமனுக்கு அவர்தம் மெய்யாற்றலை நினைவூட்டி, அவர் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டுவரும் பெருஞ்செயலுக்கு உதவியவராக சாம்பவான் சுட்டிக்காட்டப்படுகின்றார். மேலும்,, இராம-இராவண யுத்தத்தில் இந்திரசித்து]வால் இலக்குவன் மயக்கமுற்ற போது, அரிய மூ்லிகையை அனுமன் கொணர்ந்து இலக்குவன் உயிர்த்தெழக் காரணமானார்.

பாகவத புராணம், அரி வம்சம் மற்றும் விஷ்ணு புராணங்களில், கண்ணனுடன் மோதித் தோல்வியுற்ற ஜாம்பவான், பின் தன் மகள் ஜாம்பவதி மற்றும் சியமந்தக மணியையும் அவரிடம் ஒப்படைப்பவராக, சாம்பவான் வலம் வருகின்றார். மாபெரும் பலசாலியாக சாம்பவான் மிளிர்ந்திருக்கின்றார். இன்றும் குறித்த துறைகளில் முறியடிக்க முடியாத பெரும்பலம் வாய்ந்தவர்களை "ஜாம்பவான்" என்று புகழ்வது பெருவழக்காக இருக்கின்றது.

Remove ads

மேலும் பார்க்க

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads