வாமனர்

From Wikipedia, the free encyclopedia

வாமனர்
Remove ads

வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் உபேந்திரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

விரைவான உண்மைகள் வாமன, தேவநாகரி ...
Thumb
வாமன அவதாரம்
Thumb
மகாபலி சக்கரவர்த்தி தலையில் கால் வைத்து மூவடி மண் கேட்ட வாமனர்

மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் திரிவிக்கிரமன் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார்.[1][2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads