ஜுனாகத் அரசு

From Wikipedia, the free encyclopedia

ஜுனாகத் அரசுmap
Remove ads

ஜுனாகத் அரசு (Junagadh) பிரித்தானிய இந்தியாவின் தற்கால குசராத்து மாநிலத்தின் ஜூனாகத் நகரத்தை தலமையிடமாகக் கொண்டு 1807 முதல் 1948 முடிய செயல்பட்ட ஒரு இசுலாமிய மன்னராட்சி பகுதியாகும். 1921ஆம் ஆண்டி மக்கள் கணக்கெடுப்பின்படி ஜூனாகாத் அரசின் மக்கள் தொகை 8643 சதுர கிலோ மீட்டராகும். மொத்த மக்கள் தொகை 4,65,493 ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

முகமது சேர் கான் பாபி என்ற ஆப்கானிய பஷ்தூன் இனத்தவர் கி பி 1807இல் ஜூனாகத் அரசை சௌராஷ்டிரப் பகுதியில் நிறுவினார். முகலாயப் பேரரசு வீழ்ச்சி கண்ட நேரத்தில், குஜராத் பகுதிகளின் சுபேதாராக இருந்த முதலாவது பகதூர் கான் என்ற முகமது சேர் கான் பாபி 1730 முதல் ஜூனாகத் பகுதிக்கு மன்னராக தன்னை அறிவித்துக் கொண்டார், தன்னாட்சி கொண்ட அரசாக அறிவித்துக் கொண்டாலும், மராத்தியப் பேரரசுக்கு கப்பம் கட்டும் நாடாகவே ஜூனாகத் நாடு இயங்கியது. [1] இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர், முதலாம் முகமது ஹமீத் கான் ஜி கி பி 1807 முதல் ஜூனாகாத் அரசு, பிரித்தானிய இந்தியா அரசுக்கு கப்பம் செலுத்தும் மன்னராட்சிப் பகுதியாக விளங்கியது.

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1948இல் ஜூனாகத் அரசின் இறுதி மன்னர் மூன்றாம் முகம்மத் மகபத் கான் ஜூனாகத் அரசை பாகிஸ்தான் நாட்டுடன் இணைக்க முடிவு செய்தார். ஆனால் ஜூனாகாத் அரசின் இந்து குடிமக்கள் மன்னரின் முடிவை எதிர்த்து போராட்டம் செய்ததால், தனது முடிவை மாற்றிக் கொண்டு இந்திய அரசுடன் ஜூனாகாத் அரசை இணைக்க முடிவு எடுத்தார்.[2]

ஜூனாகாத் ஆட்சியாளர்கள்

ஜூனாகாத்தின் மன்னர்கள் ஆப்கானித்தானின் பஷ்தூன் இன மக்கள் ஆவார். பிரித்தானிய இந்தியா அரசு, ஜூனாகத் மன்னர்களுக்கு 13 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்தது.[3]

  • 1730 - 1758 : முகமது பகதூர் கான் அல்லது முகமது சேர் கான் பாபி [4]
  • 1758 - 1774 :முதலாம் முகமது மகபத்கான்
  • 1774 - 1811 : முதலாம் முகமது ஹமீத் கான்
  • 1811 - 1840 : முதலாம் பகதூர் கான்
  • 1840 - 1851 : இரண்டாம் முகமது ஹமீது கான்
  • 1851 - 1882 : இரண்டாம் முகமது மகபத் கான்
  • 1882 - 1892 : இரண்டாம் முகமது பகதூர் கான்
  • 1892 - 1911 : முகமது ரசூல் கான்
  • 1911 - 1948 :மூன்றாம் முகமது மகபத் கான்
Remove ads

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads