ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து

From Wikipedia, the free encyclopedia

ஜெகந்நாதர் கோவில் , ஐதராபாத்து
Remove ads

ஜெகந்நாதர் கோவில் ( Jagannath Temple ) இந்தியாவின் ஐதாராபாத்து நகரில் ஒடிய சமூகத்தால் 2009இல் கட்டப்பட்ட ஒரு இந்துக் கோவிலாகும். இது இந்துக் கடவுளான ஜெகந்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் சாலை எண் 12 (பன்னிரண்டு) அருகே அமைந்துள்ளது.[1] இந்தக் கோயில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் தேரோட்ட விழாவிற்கு பிரபலமானது.[2] ஜெகந்நாதர் என்றால் 'பிரபஞ்சத்தின் இறைவன்' என்று பொருள். இக்கோயிலை ஐதராபாத்தின் கலிங்க கலாச்சார அமைப்பு நிர்வகித்து வருகிறது. மேலும், ஐதராபாத்திலுள்ள ஒடிய மக்கள் ஒன்றுகூடுமிடமாக இருக்கிறது.

விரைவான உண்மைகள் ஜெகந்நாதர் கோவில், ஐதராபாத்து, அமைவிடம் ...
Remove ads

அம்சங்கள்

இது வடிவமைப்பின் சூழலில் புரியில் (ஒடிசா) அமைந்துள்ள அசல் புரி ஜெகன்நாதர் கோயிலின் பிரதி என்று கூறப்படுகிறது. இந்த கோயிலின் மிகவும் ஈர்க்கக்கூடிய பகுதி அதன் "விமானம்" 70 அடி உயரம் கொண்டது. சுமார் 45 அடி உயரமும், சுமார் 27,000 சதுர அடி பரப்பளவும் கொண்ட இந்தக் கோயிலுக்கு மூன்று வாயில்கள் உள்ளன. இந்த கோயில் சிவப்பு வண்ணம் பூசப்பட்டு மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது.(ஒடிசாவிலிருந்து சுமார் 600 டன் கொண்டு வரப்பட்டது. இது இந்த முழு கட்டிடமும் கட்ட பயன்படுத்தப்பட்டது). கட்டுமானத்திற்கு தேவையான சுமார் 600 டன் கல் ஒடிசாவிலிருந்து கொண்டு வரப்பட்டது. கட்டுமான நிகழ்வில் சுமார் 60 சிற்பிகள் பங்கேற்றனர். கோயிலின் முக்கிய வழிபாட்டு தெய்வங்களாக ஜெகந்நாதர், இலட்சுமி, காசி விசுவநாத், பிள்ளையார், அனுமன், பலபத்திரர், சுபத்திரை போன்ற தெய்வங்களுடன் நவகிரகச் சிலைகளும் இருக்கின்றன.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads