ஜெயந்தியா இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெயந்தியா இராச்சியம், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் தற்கால மேகாலயா மாநிலத்தில் 1500இல் நிறுவப்பட்ட மன்னராட்சிப் பகுதியாகும். இதன் தலைநகர் ஜெயந்தியா மலைகளின் அடிவாரத்தில் உள்ள ஜெயந்தியாபூர் நகரம் ஆகும். இந்த இராச்சியத்தை நிறுவியவர் பிரபாத் ராய் ஆவார். 1835இல் ஆங்கிலேய கம்பெனி ஆட்சிப் பகுதியில் ஜெயந்தியா இராச்சியம் இணைக்கப்பட்டது.
Remove ads
வரலாறு
துர்கையின் வேறு பெயர்களான ஜெயந்தி தேவி அல்லது ஜெயந்தீஸ்வரி பெயரால் இந்த இராச்சியம் அழைக்கப்பட்டது. [1]
விரிவாக்கம்
ஜெயந்தியா இராச்சியம் சில்லாங் பீடபூமியின் தெற்கிலும் மற்றும் வடக்கில் அசாமின் பராக் ஆற்றுச் சமவெளி வரை விரிவுபடுத்தப்பட்டது.
வரலாறு
ஜெயந்தியா இராச்சியத்தின் துவக்கம் அறியப்படவில்லை. ஆனால் ஜெயந்தியா மக்கள், காரோ பழங்குடியினர் மற்றும் காசி பழங்குடியினர்களுடன் தொடர்புடையவர்கள். 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜெயந்தியா இராச்சியம், ஆங்கிலேய-பர்மியப் போரின் முடிவில், ஜெயந்தியா மன்னர், சுர்மா ஆற்றின் வடபுரப் பகுதியை ஆள கம்பெனி ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்ட்டார். பின்னர் 15 மார்ச் 1835இல் ஜெயந்தியா இராச்சியத்தின் அனைத்துப் பகுதிகளும் கம்பெனி ஆட்சியில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
- பிரபாத் ராய் (1500–1516)
- மஜ்ஜா கோசைன் (1516–1532)
- புர்கா பர்பாத் ராய் (1532–1548)
- பார் கோசைன் (1548–1564)
- விஜய் மாணிக் (1564–1580)
- பிரபாத் ராய் (1580–1596)
- தன் மாணிக் (1596–1612)
- ஜஸ்சா மாணிக் (1612–1625)
- சுந்தர் ராய் (1625–1636)
- சோட்டா பிரபாத் ராய் (1636–1647)
- ஜஸ்மந்தா ராய் (1647–1660)
- பான் சிங் (1660–1669)
- பிரதாப் சிங் (1669–1678)
- இலக்குமி நாராணன் (1678–1694)
- முதலாம் இராம் சிங் (1694–1708)
- ஜெய் நாராயணன் (1708–1731)
- பார் கோசைன் (1731–1770)
- சத்திர சிங் (1770–1780)
- விஜய் நாராயணன் (1780–1790)
- இரண்டாம் இராம் சிங் (1790–1832)
- இராஜேந்திர சிங் (1832–1835)
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads