இந்தியாவில் கம்பெனி ஆட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி அல்லது கம்பெனி ஆட்சி (Company rule in India) or (Company Raj),[1]. 1757ஆம் ஆண்டில் நடந்த பிளாசி சண்டைக்குப்பின், வங்காள நவாப், பிரிட்டன் கிழக்கிந்திய கம்பேனி நிறுவனத்திடம் சரண் அடைந்த பின், இந்திய துணைக் கண்டத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சி காலூன்றியது.[2] 1765 ஆண்டு முதல் வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் திவானி எனும் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றது.[3]
1773ஆம் ஆண்டில், கிழக்கிந்திய கம்பேனியின் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பின், தலைமை ஆளுனர், வாரன் ஏசுடிங்குசு நேரடி நிர்வாகத்தில், கல்கத்தா நகரை தலைமையகமாகக் செயல்பட்டது.[4] கிழக்கிந்திய கம்பேனி நிறுவனம் பல பங்குதாரர்களைக் கொண்ட, லாப நோக்கத்துடன் செயல்படும், தனியார் கூட்டு வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிர்வாகக் குழு மற்றும் தலைமையகம் லண்டனில் அமைந்திருந்தது. கிழக்கிந்திய கம்பேனி தனக்கென காவல் படை, இராணுவப் படை மற்றும் நீதிமன்றங்கள் கொண்டது.
கிழக்கிந்திய கம்பேனி நிர்வாகிகள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊழல்களையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் தடுத்து நிறுத்திட, பிட்டின் இந்தியா சட்டம், பிரித்தானிய அரசு நடைமுறைப்படுத்தியது. கிழக்கிந்திய நிறுவனச் சட்டம், 1784, சிப்பாய்க் கிளர்ச்சி, 1857க்குப் பின், பிரித்தானிய அரசு கொண்டு வந்த இந்திய அரசுச் சட்டம், 1858க்கு பின்னர் முடிவடைந்தது. 1858ஆம் ஆண்டில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் கலைக்கப்பட்டு, இந்தியத் துணைக் கண்டத்தை, இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறிய அதிகாரிகளின் நிர்வாகத்தில், பிரித்தானியப் பேரரசு தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது.
Remove ads
எல்லைகளை விரிவு செய்தல்
இந்தியத் துணைக் கண்டத்தில் வணிகம் செய்து லாபம் ஈட்டும் நோக்கத்தில், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி, பிரித்தானிய வணிகர்களால் லண்டனில் 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தின் மசூலிப்பட்டணக் கடற்கரையில் 1611ஆம் ஆண்டிலும், சூரத்தில் 1612ஆம் ஆண்டிலும், 1640இல் விஜயநகரப் பேரரசின் அனுமதியுடன், சென்னையிலும். பின் பம்பாய் நகரிலும் வணிகக் கூடங்களை திறந்தனர்.
இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1640ஆம் ஆண்டில் கல்கத்தாவில் தொழிற்கூடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தொடங்கினர். போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனி, பிரான்சு இந்திய கம்பேனி, டச்சு இந்திய கம்பேனிகளுடான போட்டியில், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெற்றி அடைந்தது.
ராபர்ட் கிளைவ் மற்றும் ஆண்ட்ரே பஸ்தாமாண்டி ஆகிய கிழக்கிந்தியக் கம்பேனியின் படைத் தலைவர்களின் தலைமையிலான படைகள், 1757இல் நடந்த பிளாசிப் போர் மற்றும் 1764இல் நடந்த பக்சார் போர்களில் பெற்ற வெற்றியால், வங்காளம், ஒரிசா மற்றும் பிகாரில் நிலவரி வசூலிக்கும் உரிமையும், 1773இல் கீழ் கங்கைப் பகுதிகளில் பல நிலப்பரப்புகளும் அடைந்தனர்.
கர்நாடகப் போர்கள் (1746 – 1758), ஆங்கிலேய-மைசூர்ப் போர்கள் (1766-1799), ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் (1772-1818), ஆங்கிலேய-நேபாளப் போர் (1814 - 16), ஆங்கிலேய-பர்மியப் போர்கள் (1824-1826), இரண்டாம் ஆங்கிலேய-சீக்கியப் போர்கள் (1849-1856) மூலம் வட மேற்கு இந்தியாவிலும், மேற்கு இந்தியாவிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கிழக்கிந்தியக் கம்பெனியினர தங்களது ஆளும் நிலப்பரப்பை விரிவுபடுத்திக் கொண்டனர்.[5][6]
ஆங்கிலேய-நேபாளப் போர் (1814–16) முடிவில் ஏற்பட்ட சுகௌலி உடன்படிக்கை மூலம், நேபாள இராச்சியம் கைப்பற்றிருந்த தற்கால உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால், குமாவுன், சிக்கிம், டார்சிலிங் மற்றும் மேற்கு தராய் சமவெளிப் பகுதிகள் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியினர் கைக்கு வந்தது.
ஆங்கிலேய-பர்மியப் போர்கள் மூலம் அசாம், மணிப்பூர், அரக்கான் பகுதிகளை, பர்மாவிடமிருந்து கைப்பற்றினர்.
ஆங்கிலேய-மராட்டியப் போர்கள் மூலம் குசராத்து, இராசத்தான், மத்திய இந்தியா மற்றும் மகாராட்டிரா பகுதிகளை, மராட்டியர்களிடமிருந்து கைப்பற்றினர்.
1836-இல் தற்கால உத்தரப் பிரதேச மாநிலப் பகுதிகளைக் கொண்டு வடமேற்கு மாகாணத்தை நிறுவினர். 1838-இல் அவத் பிரதேசத்தைக் கைப்பற்றினர்.
ஆங்கிலேய–சீக்கியர் போர்களின் (1848 - 1849) முடிவில்[7], சீக்கியப் பேரரசிடமிருந்த பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியுடன் இணைக்கப்பட்டது.
சென்னை மாகாணம், வங்காள மாகாணம், பம்பாய் மாகாணம், ரோகில்கண்ட், கோரக்பூர், தோவாப், தில்லி, அசாம், சிந்து, பஞ்சாப் மாகாணம், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் வடமேற்கு மாகாணங்கள் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியின் நேரடி நிர்வாகத்தில் இருந்தன.
1818-இல் ஏற்பட்டுத்தப்பட்ட இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் படி, பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு கட்டுப்பட்ட 565 இந்து, இசுலாமிய மற்றும் சீக்கிய சுதேச சமசுதானங்கள் இருந்தன.
Remove ads
சென்னை மாகாணத்தில் கம்பனி ஆட்சி (1684-1858)
தமிழகத்தில் முதன் முதலில் ஆங்கிலேயர் பதினாறாம் நூற்றாண்டில் கால் பதித்தனர்.[8] தற்கால சென்னை நகரத்தில், புனித சார்ச்சு கோட்டையைக் கட்டினர். முதலில் வர்த்தகம் மட்டும் செய்து வந்த ஆங்கில கிழக்கிந்தியக் கம்பனி, பின் மெல்ல மெல்ல உள்ளூர் அரசியல் விவகாரங்களில் தலையிடத் தொடங்கியது. 1684 ஆம் ஆண்டு தென்னாட்டில் உள்ள கம்பனி பிரதேசங்கள், சென்னை மாகாணம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில், நடைபெற்ற கர்நாடகப் போர்களால், ஆங்கிலேயர்களின் கை ஓங்கியது. ஆற்காடு நவாப் மற்றும், ஃபிரஞ்சுப் படைகளை வென்றதால், அவர்களின் ஆதிக்கத்திலிருந்த பல பகுதிகள் ஆங்கிலேயர் வசம் வந்தன. ஐதர் அலி, மற்றும் திப்பு சுல்தானை வீழ்த்தியதின் மூலம் மேற்கிலும், கட்டபொம்மன், மருது பாண்டியர் முதலிய பாளையக்காரர்களை வென்றதன் மூலம் சென்னை மாகாணத்தில் கம்பெனி ஆட்சி வலுப்பெற்றது.
Remove ads
இராணுவம் மற்றும் குடிமைப் பணிகள்
1772ஆம் ஆண்டில் வாரன் ஏசுடிங் முதல் கவர்னர் செனரலாக, கொல்கத்தாவில் பதவியேற்றவுடன், கிழக்கிந்தியக் கம்பெனியின், வங்காள மாகாண இராணுவத்தை விரைவாக பெருக்கினார். அயோத்தி வீரர்கள், இராசபுதன ராசபுத்திரர்கள் மற்றும் பிராமணர்களை கம்பேனி படையணிகளில் திரட்டினார்.
மூன்றாம் ஆங்கிலேய-மைசூர் போருக்குப்பின் 1791இல் சென்னை மாகாணப் படைகளுக்கு ஆதரவாகவும், சாவா, இலங்கை போன்ற வெளி நாட்டுப் போர்களுக்குத் துணையாக வங்காள மாகாணப் படைகள் பயன்பட்டன.
வேலூர் சிப்பாய் எழுச்சியின் போது, 1806இல் கிழக்கிந்திய கம்பேனியின் படையில் 1,54,500 படைவீரர்களும் அதிகாரிகளும் இருந்தனர்.[10]
வளர்ச்சிப் பணிகள்
அஞ்சல், தந்தி சேவைகள் தொடங்கப்பட்டது. ஆங்கிலேய முறை கல்வி வளர்ந்தது. தொடருந்து சேவை துவக்கப்பட்டது.
தலைமை ஆளுனர்கள்
பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியில், முக்கிய நிகழ்வுகளின் போது இருந்த தலைமை ஆளுனர்களின் பெயர்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் வீழ்ச்சி
கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் அமைந்த கம்பெனி ஆட்சியின் நிர்வாகத்தில் ஊழல் பெருகியதாலும், கடுமையான பஞ்சத்தாலும் கம்பெனியின் நிதி திவாலா நிலைக்குச் சென்றதாலும், சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின் 1858ஆம் ஆண்டின் இறுதியில், கிழக்கிந்திய நிறுவனத்தை கலைக்கப்பட்டதால், இந்தியாவில் கம்பெனி ஆட்சி முடிவுற்று, பிரித்தானியா பேரரசின் கீழ் பதவி வகித்த வைஸ்ராய் தலைமையில் இந்திய துணைக் கண்டத்து ஆட்சியை தனது நேரடிக் கட்டுக்குள் கொண்டு வந்தது.
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads