ஜெயந்த் யாதவ்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செயந்த் யாதவ் (Jayant Yadav) (பிறந்த 22 ஜனவரி 1990, தில்லி) என்பவர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ரஞ்சி கோப்பையில் அரியானா மாநிலத்திற்காக விளையாடியவர். பந்து வீச்சு மற்றும் மட்டை வீச்சு என இரண்டிலும் சிறந்து விளங்கிய இவர் வலதுகை வீரர் ஆவார். இவர் பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்ட போட்டியில் 2016ஆம் ஆண்டு அறிமுகமானார்.[1] 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் தில்லி அணிக்காக தேர்வானார்.[2] இவர் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேபிடல்ஸ்) அணிக்காக 2018 வரை விளையாடினார். பின்னர் 2019-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடினார்.[3][4] ஆகத்து 2019-ல், 2019-20 துலீப் கோப்பைக்கான இந்திய கிரீன் அணியில் ஜெயந்த் இடம் பெற்றார்.[5][6] ஜெயந்த் இந்தியன் பிரீமியர் லீக் 2018-ல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இருப்பினும் இவர், ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.[7] பிப்ரவரி 2022-இல், 2022 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.[8]
Remove ads
பன்னாட்டு 100 ஓட்டங்கள்
தேர்வு 100 ஓட்டங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads