ஜெய்கர் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனை (Jaigarh Fort) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத் தலைநகரம் செய்ப்பூர் நகரத்தின் அமேர் பகுதியில், ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ளது.[1][2]
இராசபுத்திர குலத்தவரான மன்னர் இரண்டாம் சவாய் ஜெய்சிங் என்பவர் தனது போர் வெற்றியை கொண்டாடும் நோக்கில் ஜெய்கர் கோட்டை மற்றும் அரண்மனையை, 1726ல் கட்டத்துவங்கினார். [1][2][3]
ஆம்பர் கோட்டையின் வடிவத்தில் கட்டப்பட்ட ஜெய்கர் கோட்டையை வெற்றிக் கோட்டை என்றும் அழைப்பர். இக்கோட்டை, வடக்கு - தெற்கில் 3 கிலோ மீட்டர் நீளமும், கிழக்கு - மேற்கில் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. கோட்டையின் சுவர்களை எதிரிகள் இடிக்க முடியாத அளவிற்கு உறுதி கொண்டது.
இக்கோட்டையின் மேல் உள்ள பீரங்கி, உலகின் பெரிய பீரங்கிகளில் ஒன்றாகும்.[1][4]
ஜெய்கர் அரண்மனை வளாகத்தில் லெட்சுமி விலாஸ், லலிதா கோயில், விலாஸ் கோயில் மற்றும் ஆரம் கோயில், ஆயுத சாலை மற்றும் அருங்காட்சியகம் உள்ளது.[2][3][4] ஆம்பர் கோட்டையும், ஜெய்கர் கோட்டையும், பூமிக்கடியில் உள்ள சுரங்கப்பாதை இணைக்கிறது. [4]
Remove ads
புவியியல்
![]() |
![]() | |
இடது: ஆம்பர்கோட்டையிலிருந்து ஜெய்கர் கோட்டையின் காட்சி. வலது:ஜெய்கர் கோட்டையிலிருந்து ஆரவல்லி மலைத்தொடரின் காட்சி |
ஜெய்கர் கோட்டை, ஆரவல்லி மலைத்தொடரில், 400 மீட்டர் உயரமுடைய ஒரு மலையில், ஆம்பர் கோட்டைக்கு மேலாகக் கட்டப்பட்டுள்ளது.[1] இக்கோட்டையிலிருந்து ஆம்பர் கோட்டை மற்றும் ஆரவல்லி மலைத்தொடர்களை கண்காணிக்கலாம்.
ஜெய்பூர் - தில்லி செல்லும் நெடுஞ்சாலையில், செய்ப்பூர் நகரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்கர் கோட்டை உள்ளது.
Remove ads
வரலாறு

முகலாயப் பேரரசர் ஷாஜகான் மறைவிற்குப் பின் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரின் போது முடிக்குரிய இளவரசர் தாரா சிக்கோ, அவுரங்கசீப்பால் விரட்டப்பட்டு, ஜெய்கர் கோட்டையில் 1658ல் அடைக்கலம் புகுந்தார்.
படக்காட்சிகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads