ஜெய்சல்மேர் சமஸ்தானம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெய்சல்மேர் சமஸ்தானம் (Jaisalmer State) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் தூர-மேற்கில் தார் பாலைவனத்தில் அமைந்திருந்த ஜெய்சல்மேர் இராச்சியத்தை பாட்டி வம்ச இராசபுத்திரர்கள் 12-ஆம் நூற்றாண்டின் நடுவிலிருந்து 1947 முடிய ஆண்டனர். ஜெய்சல்சல்மேர் இராச்சியத்தின் தலைநகராக ஜெய்சல்மேர் நகரம் இருந்தது. பழைய ஜெய்சல்மேர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை இந்த இராச்சியம் கொண்டிருந்தது. 41600சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்த இந்த சமஸ்தானத்தின் 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை 76,255 ஆகும்.

Remove ads
வரலாறு
பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 1798 முதல் 1805 முடிய செயல்படுத்திய இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் ஜெய்சல்மேர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [1][2][3] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும். 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.[4]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads